ரிஷாதுக்கு பதவி வழங்கினால் எதிராக பிரேரணை வரும்

அத்துரலிய ரதன தேரர்

0 711

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு மீண்டும் அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­பட்டால் அவ­ருக்­கெ­தி­ராக மீண்டும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை யொன்­றினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் தெரி­வித்தார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் அமைச்­சுப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­பது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், “ஸ்ரீ லங்கா பொது பெர­முன, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட மற்றும் பல கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அத­னுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தொடர்­பு­களைப் பேணினார் என குற்றம் சுமத்தி இணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சமர்ப்­பித்­தார்கள். இத­னை­ய­டுத்து அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாம் வகித்த அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்தும் இரா­ஜி­னாமா செய்­து­கொண்டார்.

பின்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கபீர் ஹாசிமும், எம். எச். ஏ. ஹலீமும் தங்­க­ளது முன்­னைய அமைச்­சுப்­ப­த­வி­களை மீண்டும் பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர். ஏனை­ய­வர்கள் அமைச்சுப் பொறுப்­புக்­களை மீண்டும் பொறுப்­பேற்கத் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்­கப்­பட்டால் மீண்டும் அவ­ருக்­கெ­தி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ராணை கொண்­டு­வரத் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார்.

இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு மீண்டும் அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஐக்­கியக் தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்ப்­பினைத் தெரி­விப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹேசா விதா­னகே தெரி­வித்­துள்ளார்.

ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதால் அவ­ருக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் அவர் கூறி­யுள்ளார். ரிசாத் பதி­யுதீன் மீதான குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து அவர் முழு­மை­யாக விடு­விக்­கப்­படும் வரை அவருக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்கள் அனைத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டால் அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படுவதை நாம் எதிர்க்கமாட்டோம் என்றும் கூறினார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.