மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன பரீட்சை; தமிழ் வினாத்தாளில் குறைபாடுகள்

ஆளுநரைச் சந்தித்து பட்டதாரிகள் நேரில் முறைப்பாடு

0 842

மேல் மாகாண பாட­சா­லை­க­ளுக்கு பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­களை இணைத்துக் கொள்­வ­தற்­காக கடந்த மே மாதம் 30 ஆம் திகதி நடை­பெற்ற தமிழ் மொழி மூல பரீட்சை வினாத்­தாளில் இருந்த பல்­வேறு குறை­பா­டு­களால் தமிழ் மொழி மூல மாண­வர்கள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­பட்டு பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இது குறித்து கவனம் செலுத்­து­மாறு மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்­மிலைச் சந்­தித்து முறைப்­பாடு தெரி­வித்­துள்­ளனர்.
இது தொடர்பில் நேற்­று முன் தினம் ஆளு­நரைச் சந்­தித்த பாதிக்­கப்­பட்ட பட்­ட­தா­ரிகள் இந்த விவ­கா­ரத்தில் தலை­யிட்டு நீதியைப் பெற்றுத் தரு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.

குறித்த பரீட்­சையின் வினாத்­தாளில் பின்­வரும் குள­று­ப­டிகள் இடம்­பெற்­றி­ருந்­த­தாக பரீட்­சார்த்­திகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

சிங்­கள மொழி­யி­லி­ருந்து தமி­ழுக்கு மொழி மாற்றம் செய்யும் போது ஏற்­பட்­டி­ருந்த வசனப் பிழைகள் மற்றும் வினாக்கள் பூர்த்­தி­யின்­றி­யி­ருந்­தமை, நுண்­ண­றிவைப் பரீட்­சிப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட வினாக்­களில் தர­வு­களை பிழை­யாகத் தந்­தி­ருந்­தமை, சரி­யான விடையின் கீழ் கீறி­டுக என்று வேண்­டப்­பட்ட கேள்­வியில் சரி­யான விடை வினாத்­தாளில் உள்­ள­டக்­கப்­ப­டாமை, ஒரே தலைப்பில் அதி­க­மான கேள்­வி­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தமை, வினாக்­களில் இருந்த அதி­க­மான எழுத்துப் பிழை­களும் வசனப் பிழை­களும் கேள்­வி­களைப் புரிந்து கொள்­வதில் தடு­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யமை, நுண்­ண­றிவைப் பரீட்­சிப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட வினாக்­களின் தர­வு­களை விடை காண்­ப­தற்­காக குறித்துக் கொள்­வ­தற்­காக உதிரித் தாள்கள் எதுவும் வழங்­கப்­ப­டாது வினாத்­தாளின் இறுதிப் பக்­கத்தை பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டமை. இதனால் அதிக நேர விரயம் ஏற்­பட்­டமை ஆகிய குறை­பா­டுகள் மேல் மாகாண ஆளு­ந­ரிடம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. அத்­துடன் குறித்த வினாத்­தா­ளா­னது ‘கூகுள் மொழி­பெ­யர்ப்பு’ மூலம் சிங்­கள மொழி­யி­லி­ருந்து தமிழ் மொழிக்கு மொழி­மாற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்றும் பரீட்­சார்த்­திகள் சந்­தேகம் வெளி­யி­டுன்­றனர்.

குறித்த விட­யங்­களால் அன்றைய தினம் பரீட்சை எழுதிய மாணவர்கள் பெரிதும் அசௌகரியங்களுக் குள்ளாகியுள்ளனர் என்றும் இதுவிடயத்தில் தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் பரீட்சார்த்திகள் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.