முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18

முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கீகாரம்

0 695

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க­ரத்து வழக்­கு­களில் பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற்றுக் கொடுப்­ப­தற்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று தங்­க­ளது ஏக­ம­ன­தான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­னார்கள். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி நீண்ட நேரம் கலந்­து­ரை­யாடி இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­குழு தனது திருத்­தங்கள் உள்­ள­டங்­கிய அறிக்­கையை கடந்த வருடம் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் வழங்­கி­யி­ருந்­தது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்தக் குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு இரு­வேறு அறிக்­கை­களை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளித்­தி­ருந்­ததால் அமைச்சர் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ள­மு­டி­யாத நிலையில் அறிக்­கையை சிபா­ரி­சுக்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கைய­ளித்­தி­ருந்தார்.

சட்டத் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, பெண்கள் காதி நிய­மனம், மத்தாஹ் போன்ற விட­யங்­க­ளிலே முரண்­பட்ட கருத்­து­களைக் கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நாட்டின் பொது­வான சட்­டத்தின் கீழ் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆகக் காணப்­ப­டு­வதால் நாட்டின் நிலை­மையைக் கொண்டும், பொது­வாக முஸ்லிம் பெண்கள் 18 வயது கடந்தே திரு­மணம் செய்து கொள்­வ­தையும் கருத்­திற்­கொண்டு முஸ்லிம் பெண்­களின் வய­தெல்லை 18 ஆகத் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கும் அங்­கீ­காரம் வழங்கப் பட்­டுள்­ளது. திரு­ம­ண­மொன்றின் போது பெண்­க­ளுக்கு ‘வொலி’ இல்­லாத நிலையில் ‘வொலி’ அனு­ம­திப்­பத்­திரம் பெண்­கா­தி­க­ளுக்கு வழங்க முடி­யா­துள்­ளது. ஏனென்றால் ஷரீஆ சட்­டத்­தின்­படி ஆண் காதி­க­ளுக்கே ‘வொலி’ அனு­மதி வழங்க முடியும். இந்­நி­லையில் ‘வொலி’ அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­டு­வது ஆண் காதி­க­ளுக்கே உரித்­தாக இருக்கும் எனவும் அமைச்சர் ஹலீம் தெரி­வித்தார்.

விவா­க­ரத்தின் போது பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தற்கும் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு மார்க்க அறி­வுடன் கூடிய சட்­டத்­த­ர­ணி­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கவும் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

வரு­டக்­க­ணக்­காக இழு­பறி நிலையில் இருந்த முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்ட திருத்த சிபா­ரி­சுகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை காதி நீதித்­து­றையில் குறிப்­பி­டத்­தக்­க­தாகும் எனவும் அவர் கூறினார். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என 19 பேர் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

 

Leave A Reply

Your email address will not be published.