அரசாங்கம் மீதான அழுத்தம் தொடரட்டும்

0 802

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பற்­ற­வர்கள் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். அந்த வகையில் சில தினங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் பிர­த­மரால் வெளி­யி­டப்­பட்ட தக­வல்­க­ளுக்­கி­ணங்க பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­புட்ட 161 பேர் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 167 பேர் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். 99 பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். அத்­துடன் குளி­யாப்­பிட்டி, ஹெட்­டி­பொல தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் 39 பேர் கைதா­கி­யுள்­ளனர். இவர்கள் தொடர்பில் நீதி­மன்­றத்தில் விளக்­க­ம­ளித்து தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. இவற்­றுக்கு உதவி வழங்­கியோர் தொடர்­பாக விசா­ரணை தொடர்ந்து இடம்­பெ­று­கி­றது என்றும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

ஏப்ரல் 21 தாக்­கு­தலைத் தொடர்ந்து நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­ட­துடன் அச்­சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்­கி­றது. அச்­சட்­டத்தின் கீழ் 2,000 க்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டனர். இந் நிலை­யி­லேயே இவர்­களில் பெரும்­பா­லானோர் விடு­விக்­கப்­பட்­டு­விட்­ட­தா­கவும் சில நூறு பேரே இன்­னமும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­தமர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அதே­போன்று சில தினங்­க­ளுக்கு முன்னர் முஸ்லிம் எம்.பி.க்களுக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டையில் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதும் கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­பாவி முஸ்­லிம்­களை விடு­விப்­ப­தற்­கான அழுத்தம் வழங்­கப்­பட்­டது. இதற்­க­மைய சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் மற்றும் மௌல­விமார் உட்­பட 36 பேரை விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இதற்­க­மைய மறு­நாளே 20 பேர் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

இவ்­வா­றான விடு­த­லைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னா­மாவும் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­களின் அழுத்­தங்­க­ளுமே கார­ண­மாகும். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு மற்றும் நியூ­யோர்க்கைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் ஆகி­யன கைது செய்­யப்­பட்ட அப்­பா­வி­களை உடன் விடு­விக்­கு­மாறு கடந்த வாரம் இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

இவ்­வா­றான விடு­த­லைகள் ஒரு­புறம் நடக்க, சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­குள்­ளாகி கைது செய்­யப்­பட்­டுள்ள டாக்டர் ஷாபி இது­வரை விடு­விக்­கப்­ப­ட­வில்லை. சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் பாது­காப்பு அமைச்சும் டாக்டர் ஷாபி குற்­ற­மற்­றவர் என நிரூ­பித்தும் கூட அவ­ருக்கு நேற்­றைய தினம் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. இன­வாத சக்­திகள் நேற்­றைய தினம் நீதி­மன்­றுக்கு வெளியே நின்று கொண்டு விடுத்த அச்­சு­றுத்­தல்­களும் பாதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் பெண்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் வாதங்­க­ளுமே பிணை வழங்­கு­வ­தற்கு தடை­யாக அமைந்­த­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

டாக்டர் ஷாபி விட­யத்தில் சட்­டத்­தையும் நீதி­யையும் விட இன­வா­தத்தின் கையே மேலோங்­கி­யி­ருப்­பது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். இது­வி­ட­யத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேர­டி­யாக தலை­யிட்டு டாக்டர் ஷாபியை விடு­தலை செய்­யவும் அவ­ருக்கும் அவ­ரது குடும்­பத்­திற்கும் தேவை­யான பாது­காப்பை பெற்றுக் கொடுக்­கவும் முன்­வர வேண்டும்.

இதற்­கி­டையில் பதவி துறந்த முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பத­வி­களை ஏற்றுக் கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ளனர். பிரதான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்­ட­மை­யி­னாலும் சமூக விவ­கா­ரங்­களை அமைச்­ச­ர­வையில் பேசவும் ஏனைய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுமே பதவிகளை மீளவும் ஏற்கத் தீர்மானித்ததாகவும் கூறுப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் முஸ்லிம் எம்.பி.க்கள் தமக்கிடையிலான ஒற்றுமையினையும் சமூக விவகாரங்களை ஒன்றுபட்டு கையாளும் நகர்வுகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.