பதவி துறந்த முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பதவியேற்பர்

பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

0 690

ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாக தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் முன்­னைய அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வ­தாக நேற்றுத் தீர்­மா­னித்­தனர்.

தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பொறுப்­பு­களை மீண்டும் ஏற்றுக் கொள்­வதா? இல்­லையா? என்று அவர்கள் நேற்று மாலை பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி ஆராய்ந்­தனர். நிலைமை ஓர­ளவு சீர­டைந்­துள்­ள­மையைக் கருத்திற் கொண்டும் சமூ­கத்தின் நலன் கரு­தியும் மீண்டும் அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்றுக் கொள்­வ­தாகத் தீர்­மா­னித்­தனர்.
இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்சர் கபீர் ஹாஷிமைத் தவிர ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் கலந்து கொண்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி தனிப்­பட்ட வெளி­நாட்டு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருப்­பதால் அவர் நாடு திரும்­பி­யதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியின் முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்­சர்­களும் 4 இரா­ஜாங்க அமைச்­சர்­களும் ஒரு பிர­தி­ய­மைச்­ச­ரு­மாக 9 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர்.

அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி, அலி­சாஹிர் மௌலானா, பிர­தி­ய­மைச்­ச­ரான அப்­துல்லாஹ் மஹ்ரூப் ஆகி­யோரே தங்­க­ளது பத­வி­களைத் துறந்­த­வர்­க­ளாவர்.
இவர்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகிய இரு­வரும் அண்­மையில் கட்சித் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.