முஸ்லிம் விரோத பொருளாதாரக் கொலைகாரர்கள்

0 686

இஸ்­லா­மிய தீவி­ர­வாதி ஸஹ்­ரானின் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடந்து இரண்டு மாதங்கள் கடந்­து­விட்­டன. ஆயினும் அத்­தாக்­கு­தல்­களின் பின்­ன­திர்­வுகள் இன, மதத் தீவ­ர­வா­தங்­க­ளாக நமது சமூ­கத்தில் தொடர்ந்தும் ஏற்­பட்டு வரு­கின்­றன. தனது தாக்­கு­தல்கள் மூலம் ஸஹ்ரான் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஒரு விடு­த­லை­யையும் பெற்றுக் கொடுத்­து­வி­ட­வில்லை. மாறாக, அத்­தாக்­கு­தல்கள் இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்­பற்ற ஒரு சூழ­லையே உரு­வாக்கி விட்­டுள்­ளது. இதை முஸ்லிம் தலை­வர்­களே தெளி­வாகச் சொல்­லி­யி­ருக்­கி­றார்கள்.

நமது நாட்டின் தேசியப் பாது­காப்புக் கட்­ட­மைப்பில் எவ்­வ­ளவு பாரிய ஓட்­டைகள் இருந்­துள்­ளன என்­பது ஸஹ்­ரானின் தாக்­கு­தல்கள் மூலம் தெளி­வாக வெளிப்­பட்­டுள்­ளது. உலகின் பிர­ப­ல­மான நாடு­களின் புல­னாய்­வுத்­து­றை­க­ளுக்கு சற்றும் குறை­யாத மிகச்­சி­றந்த புல­னாய்வுக் கட்­ட­மைப்பை நாம் கொண்­டி­ருந்த போதிலும் அப்­பு­ல­னாய்வுக் கட்­ட­மைப்பு வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டு­வ­தற்­கான உந்­து­தல்­களை வழங்­கு­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன – பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அரசு தவ­றி­விட்­டுள்­ளதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. மைத்­திரி – ரணில் இடையில் நிலவும் அர­சியல் முறு­கல்­நி­லையின் ஒரு விளை­வாக சர்­வ­தேசப் பயங்­க­ர­வாத சுவா­லைகள் நமது நாட்­டையும் ஆக்­கி­ர­மிக்கும் நிலை தோன்­றி­யுள்­ளது. அதன் விளை­வாக முப்­பது ஆண்­டு­க­ளுக்குப் பிறகு நாட்­டுக்குள் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்த இன, சமய நல்­லு­ற­வுகள் படு­மோ­ச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கட­மையும் பொறுப்பும்!

பயங்­க­ர­வா­தத்­துக்கு இனமோ மதமோ இல்லை. ஆயினும், பயங்­க­ர­வா­த­மா­னது மத­வா­த­மாக, இன­வா­த­மாக மாற்­றப்­ப­டவும் அவ்­வாறு கொண்­டு­செல்­லப்­ப­டவும் இனத்­து­டனும் மதத்­து­டனும் தொடர்­பு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஒரு நாட்டில் நிலவும் அர­சியல், சமூக ரீதி­யான அமை­திக்­கு­லை­வா­னது அந்­நாட்­டுக்குள் பயங்­க­ர­வாதம் இல­கு­வாக நுழைந்­து­வி­டு­வ­தற்­கான வாய்ப்­பாக அமைந்து விடு­கி­றது. நாடொன்றின் பாது­காப்­பற்ற நிலை­யா­னது பயங்­க­ர­வா­தத்­துக்கு மிகவும் பாது­காப்­பா­னது. தற்­போது நம் நாட்டில் நிலவும் அர­சியல் முரண்­பாட்டு நிலையும் பிரி­வி­னை­வா­தமும் இவ்­வுண்­மையைத் தெளி­வாகக் காட்டி நிற்­கின்­றன. பிர­தமர் ரணில் உள்­ளிட்ட குழு­வி­னரைப் பாது­காப்புக் கவுன்­சி­லோடு இணைத்துக் கொள்­வது நாட்டின் பாது­காப்­புக்கு அவ்­வ­ளவு அவ­சி­ய­மில்லை என ஜனா­தி­பதி கரு­து­கிறார். ஜனா­தி­பதி, தன்னை அழைக்­காத கார­ணத்தால், தான் பாது­காப்புக் கவுன்­சி­லுக்குப் போகத் தேவை­யில்லை எனப் பிர­தமர் ரணில் நினைக்­கிறார். இவ்­வி­ரு­வரும் வேண்­டு­மென்றே இவ்­வாறு நடந்­து­கொள்­வ­த­னூ­டாகத் தங்­க­ளது கட­மை­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் நிறை­வேற்றத் தவ­றி­யுள்­ளனர். அர­சியல் மற்றும் தனிப்­பட்ட நிலைப்­பா­டுகள், எவ்­வா­றி­ருந்த போதிலும் ஜனா­தி­ப­தியின் தலை­யாய பொறுப்பு நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­ய­தாகும். அந்த நோக்­கத்­திற்­காக ஜனா­தி­பதி தற்­போ­துள்ள அர­சோடு ஒத்­தி­சைந்து செயற்­பட வேண்டும். தனது சொந்தத் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் வகையில் நடந்­து­கொள்ளக் கூடாது.

ஜனா­தி­பதி தன்னைப் பாது­காப்புக் கவுன்­சி­லுக்கு இணைத்துக் கொள்­ளா­ததன் கார­ண­மாக நாட்டின் பாது­காப்பு நிலைமை குறித்துத் தான் அறிந்­து­கொள்ள முடி­யாமல் போகு­மென்­பதைப் பிர­தமர் புரிந்­து­கொண்­டி­ருக்க வேண்டும். பிர­தமர் என்ற வகையில் பாது­காப்பு நிலைமை குறித்துத் தான் அறி­வு­றுத்­தப்­ப­டா­தி­ருக்கும் போது அது குறித்து அவர் எதுவும் செய்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை. அவர் வெறு­மனே தன்­பாட்டில் மெள­ன­மாக இருந்­துள்ளார். ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள், அர­சியல் விஞ்­ஞா­னத்தைப் பொறுத்­த­வ­ரையில் அவ­நம்­பிக்கை மனப்­பாங்­காகு எனப்­படும்.

நாட்டின் பிர­தா­ன­மான இரு தலை­மை­களின் மனப்­பாங்­குகள் ஒத்­தி­சையும் நோக்­கத்தைக் கொண்­டி­ருக்­காத இந்தப் பின்­ன­ணியை எதிர்த்­த­ரப்பு அர­சி­யல்­வா­திகள் தமது அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக்கிக் கொள்வர். அத­னூ­டாக நாட்டின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக நிலை­மைகள் வீழ்ச்­சியை நோக்கி நகரும். தற்­போது நாட்­டுக்குள் ஏற்­பட்­டி­ருப்­பதும் அத்­த­கைய ஒரு சூழ்­நி­லைதான். இது மிகவும் ஆபத்­தா­னது. இத்­த­கைய சூழலில் நாட்டின் பாது­காப்­புக்குப் பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­ப­டக்­கூடும்.

தாக்­கு­தல்கள் நிகழ்ந்து ஒரு­சில தினங்கள் கடந்த போதே நாட்­டுக்குப் பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டுள்ளோர், தமக்­குள்­ளேயே ஒரு­வ­ருக்­கொ­ருவர் குற்றம் சுமத்தும் விளை­யாட்டில் இறங்கி இருந்­தனர். அவர்­க­ளது ஒற்­று­மை­யின்மை கார­ண­மாக, அது­வரை அர­சியல் ரீதி­யாக வங்­கு­ரோத்து நிலை­யி­லி­ருந்த எதிர்க்­கட்­சி­யினர் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு அரசின் மீது கடு­மை­யான தாக்­கு­தல்­களைத் தொடுக்க வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. ஸ்திர­மற்ற நிலையை நோக்கி அர­சாங்­கத்தைத் தள்­ளி­விடும் நோக்கில் எதி­ர­ணி­யினர் தொடர்ந்து செயற்­பட்­டனர். அதற்­காக அவர்கள் ஸஹ்­ரானின் தாக்­கு­தல்­களைக் கார­ணங்­க­ளாகக் காட்­டிக்­கொண்டு மதத் தீவி­ர­வா­த­மொன்றைக் கட்­ட­மைக்கத் தொடங்­கினர். அதற்­காக அவர்கள் பயங்­க­ர­வாத்­துக்கு மத­மொன்றின் முத்­தி­ரையைக் குத்தத் தொடங்­கினர். அதன் பொருட்டு, ஒரே­யொரு ஸஹ்­ரா­னுக்­காக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் ஸஹ்­ரான்­க­ளாகச் சித்­தி­ரிக்­கவும் மாற்­றவும் எதி­ர­ணியின் சில தீவி­ர­வாதக் கும்­பல்கள் வேக­மாகச் செயற்­பட்­டன. அச்­செ­யற்­பாட்டின் விளை­வாக ஸஹ்­ரானின் தாக்­கு­தல்கள் நிகழ்ந்து சில வாரங்கள் கழிந்­தி­ருந்த நிலையில் அது­வரை நில­விய தேசிய நல்­லி­ணக்­கமும் சக­வாழ்வும் திடீ­ரென வெடித்துச் சித­றின. ஸஹ்­ரான்­க­ளுக்கு எதி­ராகப் பாது­காப்­புத்­து­றைக்கு அது­வரை முழு ஒத்­து­ழைப்பு வழங்­கி­வந்த ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் சிங்­க­ள­வர்­களின் எதி­ரி­க­ளாகச் சித்­தி­ரிக்­கவும் கட்­ட­மைக்­கவும் எதி­ர­ணி­யி­னரின் தீவி­ர­வாதக் கும்­பல்கள் வெறி­கொண்டு செயற்­பட்­டன. அதன்­படி பல்­வேறு பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள், கடை­க­ளுக்குத் தீவைத்து, கொள்­ளை­யிட்டு, இந்­நாட்டில் மதப்­போ­ரொன்றை உரு­வாக்கி, அதன் மூல­மாகத் தங்கள் கைக­ளி­லி­ருந்து நழு­வி­விட்­டி­ருந்த அதி­கா­ரத்தை மீண்டும் தட்டிப் பறிக்கத் திட்­ட­மிட்டு, முயற்­சித்­தனர். நாட்­டுக்குள் திட்­ட­மிட்ட வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து விட்டு, தேசியப் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வந்த கும்­பல்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை முறை­யா­கவும் முழு­மை­யா­கவும் நிலை­நாட்­டவும் அரசு தவ­றி­விட்­டது. இத்­த­கைய அரா­ஜக நிலையின் மூல­மாகப் பய­ன­டை­யக்­கூ­டிய தீவி­ர­வாத அர­சி­யல்­வா­திகள் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றிக் கொள்­வ­தற்­காக எத்­த­கைய இழி­செ­யல்­க­ளையும் செய்யத் தலைப்­பட்­டி­ருப்­ப­தாகத் தோன்­று­கி­றது.

சட்­டத்தின் ஓட்­டைகள்!

இனங்­க­ளுக்­கி­டையே குரோ­தங்­க­ளையும் வன்­மங்­க­ளையும் ஏற்­ப­டுத்தி, மத­வா­தத்தைப் பரப்பும் கல­கக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக நாட்­டி­லி­ருக்கும் சட்­டத்­தின்­படி ஐ.சி.சி.பீ.ஆர். சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுத்து அக்­கும்­பல்­களைக் கைது­செய்ய வேண்­டிய பொலிஸார் அவ்­வாறு செய்­யாமல் சாதா­ரண பொதுச் சட்­டத்தின் கீழ் தான் அவர்­களைக் கைது­செய்­தனர்.

மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் ஓர் எழுத்­தாளர் எழு­தி­யி­ருந்த சிறு­கதை ஒன்று தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு இந்த ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் கைது­செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர். இவ்­வா­றான கார­ணங்­களால் அரசின் நற்­பெயர் கெடு­வ­தோடு அரசின் நீதிக் கட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கை­யையும் மக்கள் இழந்­து­வி­டுவர்.

நீதி­மன்ற அவ­ம­திப்புக் குற்­றச்­சாட்­டுக்­காக சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த கல­கொ­ட­அத்தே ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி விஷேட மன்­னிப்பு அளித்­தி­ருப்­பது நீதி­மன்றத் தீர்ப்­பு­களை மலி­னப்­ப­டுத்தும் ஒரு செயற்­பா­டாகும். அதே­போல அந்த ஜனா­தி­பதி மன்­னிப்­பா­னது, இந்­நாட்­டிலே மதத் தீவி­ர­வா­தி­க­ளுக்கும், இன­வா­தி­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டி­ருக்கும் வரப்­பி­ர­சா­த­மா­கவும் கரு­தப்­ப­ட­மு­டியும். இவ்­வாறு வளர்ந்­து­வந்த குழப்­ப­க­ர­மான நிலையை ரதன தேரரும் உண்­ணா­வி­ர­த­மி­ருந்து தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டார். இவ்­வாறு நோக்­கும்­போது, ஸஹ்­ரானின் குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் ரதன தேரரின் உண்­ணா­வி­ரதம் ஆகிய இரண்டு விட­யங்­க­ளி­னாலும் செய்­யப்­பட்­டி­ருப்­பது தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளே­யாகும். இரு­வ­ருமே செய்­தி­ருப்­பது சமூ­கத்தை அச்­சு­றுத்தித் தத்­த­மது நோக்­கங்­களை அடைந்து கொள்­வ­தற்­கான முயற்­சி­க­ளே­யாகும். இரண்­டுக்கும் இடை­யி­லான ஒரே வித்­தி­யாசம் – ஸஹ்­ரானின் தாக்­கு­தல்­களால் 250க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர்; ரதன தேரரின் செயலால் அப்­ப­டி­யாக மக்கள் இன்னும் கொல்­லப்­ப­டா­விட்­டாலும் அதற்­கான ஏது­நி­லைகள் இருக்­கின்­றன என்­ப­தாகும். ஒற்­று­மை­யான ஒரு நாடு என்ற வகையில் நாம் எவ்­வ­ளவு பல­வீ­ன­மாக உள்ளோம் என்­ப­தையே ஸஹ்­ரானின் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் மூலம் நாம் மிகவும் தெளி­வாக உணர்ந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது. குறிப்­பாக, எதிர்க்­கட்­சி­யினர் எவ்­வ­ள­வுதான் சக­வாழ்வு பற்றிப் பேசி­னாலும் நடை­மு­றையில் அதை அவர்கள் நிரூ­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். தீவி­ர­வா­திகள் தமக்குத் தேவை­யான எச்­சந்­தர்ப்­பத்­திலும் எந்­த­வி­த­மான எல்­லை­க­ளுக்கும் சென்று தமது இலக்­கு­களை அடை­யக்­கூ­டிய வாய்ப்­புகள் இங்கே தாரா­ள­மாக உள்­ளன என்­பதைக் கடந்த நிகழ்ச்­சிகள் மூலம் நிரூ­பித்­துள்­ளனர். அத்­த­கைய நிகழ்­வு­க­ளுக்கு அர­சாங்கம் கடு­மை­யாக முகம்­கொ­டுக்க வேண்டும். கடு­மை­யான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் தேசிய பாது­காப்பைக் குலைக்­கும்­ப­டி­யான செயல்­களில் ஈடு­படும் எத்­த­கைய தீவி­ர­வாத நப­ருக்­கெ­தி­ரா­கவும் ஐ.சி.சி.பீ.ஆர். சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஸஹ்­ரானின் தாக்­கு­தல்கள் சர்­வ­தேசப் பயங்­க­ர­வாத இயக்­க­மொன்­றுடன் இணைந்து மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். அத்­த­கைய செய­லொன்று அரசின் ஏதோ­வொரு கவ­னக்­கு­றைவால் நிகழ்ந்­தி­ருந்­தாலும் ஒரு நாடென்ற வகையில் இலங்­கையின் சக­லரும் தமது பாது­காப்பைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக ஒரே நிலைப்­பாட்­டுக்கு வந்­தா­க­வேண்டி உள்­ளது. விஷே­ட­மாக அர­சியல் கட்­சி­க­ளுக்கும் குழுக்­க­ளுக்கும் அது தொடர்­பி­லான பொறுப்பு அதி­க­மா­கவே உள்­ளது. அதற்­கான காரணம், மக்கள் எல்­லோரும் அக் கட்­சி­க­ளையும் குழுக்­க­ளை­யுமே சார்ந்­தி­ருக்­கின்­றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைப் பொறுத்­த­வரை நமது நாட்டின் அர­சி­யல்­வா­தி­களின் நிலையோ மிகவும் கவ­லைக்­கி­ட­மா­னது. குழம்­பிய குட்­டையில் மீன்­பி­டிக்கச் சில அர­சியல் கட்­சி­களும் குழுக்­களும் செயற்­பட்ட வித­மா­னது புத்­தி­ஜீ­வி­க­ளதும் நடு­நிலைச் சிந்­தனை கொண்­டோ­ரி­னதும் வெறுப்­புக்கு உள்­ளா­கி­யி­ருந்­தது. அத்­த­கைய ஒரு சந்­தர்ப்­பத்தில் தமது அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்குப் பதி­லாகப் பொது­வா­ன­தொரு செயற்­றிட்­டத்தின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வது மிகவும் பய­ன­ளிக்­கக்­கூ­டி­யது. சிந்­தித்துச் செயற்­ப­டக்­கூ­டிய, மத­வாத, இன­வாதச் சக்­தி­க­ளுக்குப் பலி­யா­காத அர­சியல் தலை­மைத்­து­வ­மொன்று நாட்­டுக்குத் தேவை­யாக உள்­ளது. மத­வா­தத்தை, இன­வா­தத்தை முக்­கி­யத்­து­வப்­ப­டுத்திக் கொண்­டுள்ள அர­சியல் தீவி­ர­வா­திகள் அதி­கா­ரத்­துக்கு வந்­து­விட்டால் நாட்­டுக்குள் நல்­லி­ணக்­கத்­துக்குப் பதி­லாகப் பிரி­வி­னையே முனைப்புப் பெற்றுக் கூர்­மை­ய­டையும். ஒரு நாடென்ற வகையில் முன்­செல்ல இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் நில­வு­வது அவ­சி­ய­மாகும். நாட்டின் நல்­லி­ணக்­கத்­துக்கு விரோ­த­மானோர் பயங்­க­ர­வா­தி­களே ! காரணம், சமூ­கங்­களைப் பிள­வு­ப­டுத்­து­வதன் மூல­மாக மட்­டுமே அவர்கள் வெற்­றி­பெ­று­கின்­றனர். அப்­பி­ள­வுகள் ஊடா­கவே அவர்கள் தமது இலக்­கு­களை அடைய முடியும்.

வர்த்­தக மாபியா

நாடொன்றின் அபி­வி­ருத்­திக்கு அர­சியல், பொரு­ளா­தார, சமூக உறு­திப்­பாடு பாரிய பங்­க­ளிப்­பாகும். முப்­ப­தாண்டு யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த நாம் அதற்­கான ஒரு பாதையை அமைத்துக் கொண்­டி­ருந்தோம். 2015 இல் தற்­போ­தைய அரசு அதி­கா­ரத்­துக்கு வந்­த­தோடு அந்த நிலைமை முன்­னேறி வந்­தி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. கடந்த ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அவ்­வ­ளர்ச்சிப் பாதையில் பல தடைகள் சவா­லாக வந்­துள்­ளன. அர­சியல், பொரு­ளா­தார, சமூ­க­வியல் சவால்கள் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளன. குறிப்­பாகப் பொரு­ளா­தா­ரத்­துக்கு ஒரு பேரிடி வீழ்ந்து சுற்­றுலாத் துறைக்கும் வர்த்­தகத் துறைக்கும் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்­கான பிர­தான கார­ணி­க­ளாக எதிர்க்­கட்­சி­யினர் மேற்­கொண்ட சில நட­வ­டிக்­கை­களும் செய்த பிர­சா­ரங்­களும் அதி­கூ­டிய தாக்கம் செலுத்­தி­யுள்­ள­தோடு அவற்றை வெற்­றி­க­ர­மாக முறி­ய­டிப்­பதில் அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் மிகவும் மந்­த­மாக இருப்­பது ஆச்­சர்­ய­ம­ளிக்­கி­றது. இலங்­கையின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­துக்­கா­கவும் உறு­திப்­பாட்­டுக்­கா­கவும் வர்த்­தக சமூகம் பாரி­ய­தொரு பங்­க­ளிப்பைச் செய்து வரு­கி­றது. ஆயினும் ஸஹ்­ரானின் தாக்­கு­தல்­க­ளுக்­கான பழி­வாங்­க­லாகச் சில தீவி­ர­வாதக் கும்­பல்கள் முஸ்லிம் வர்த்­தக சமூ­கத்தைப் புறக்­க­ணிக்­கு­மாறு மக்­களைத் தூண்டி வரு­கின்­றன. இம் முஸ்லிம் வர்த்­தகப் புறக்­க­ணிப்­புக்குப் பின்னால் வர்த்­தக மாபி­யா­வொன்று செயற்­ப­டு­வது தெளி­வா­கி­றது.

முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களில், கடை­களில் சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் பொருள்­களைக் கொள்­வ­னவு செய்­வதைத் தவிர்த்துக் கொண்­டுள்ள போதிலும் பெரும்­பா­லான சிங்­கள, தமிழ் வர்த்­த­கர்கள் தங்­க­ளது வர்த்­த­கத்­துக்குத் தேவை­யான பொருள்­களை மொத்­த­மாக முஸ்லிம் மொத்த வர்த்­த­க­ளி­டத்தில் கொள்­வ­னவு செய்­வதை நிறுத்திக் கொள்­ள­வில்லை. இது சாதா­ரண பொது­மக்கள் அறி­யாத இர­க­சியம். அவ்­வாறு நோக்­கு­கையில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களைப் புறக்­க­ணிப்­பது அர்த்­த­மற்ற செய­லாகும்.

பிரி­வதால் பின்­ன­டைதல்

நமது நாட்டின் பொரு­ளா­தாரம் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என்று வேறு­பட்­ட­தாக இல்லை. உல­கிலும் எங்­குமே அத்­த­கைய பொரு­ளா­தார முறை­மையும் இல்லை. அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தாரம் கிறிஸ்­தவப் பொரு­ளா­தா­ர­மில்லை. அரபு நாடு­களின் பொரு­ளா­தா­ரமும் முஸ்லிம் பொரு­ளா­தாரம் என்­றில்லை. பொரு­ளா­தா­ரத்­துக்குள் இருப்­பது ஒரு கலப்பு முறை­மை­யாகும். உலகம் முழுதும் வாழும் எல்லா சமூ­கத்­த­வரும் மதத்­தி­னரும் அந்­தந்த நாடு­களின் பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்திக் கொண்­டுதான் உள்­ளனர். ரூபாவில் சிங்­கள ரூபா, தமிழ் ரூபா, முஸ்லிம் ரூபா­வெனும் பேதங்­க­ளில்லை. அது இலங்­கையின் பொது­வான நாணய அல­காகும். டொலர், கிறிஸ்­த­வர்­க­ளுக்கு மட்­டுமே உரித்­தா­ன­தல்ல. அது, உலகின் பிர­தா­ன­மான ஒரு நாணய அல­காகும். இலங்கை, பல்­லின – பல்­ச­மய நாடொன்று என்ற வகையில் அதன் பொது­வான பொரு­ளா­தார அள­வு­கோ­லாக இருப்­பது ரூபா­வாகும். சிங்­க­ளவர், தமிழர் மற்றும் முஸ்­லிம்கள் எல்­லோ­ருக்­குமே ரூபா பொது­வா­னது. இவர்கள் எல்­லோ­ருமே இந்த ரூபாவின் மதிப்பைப் பேணிக் காத்துக்கொள்ளப் பங்களிப்புச் செய்கின்றனர். நமது நாட்டின் பொருளாதாரத்தை குறித்த ஓர் இனம் மட்டுமே வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அதற்காக எல்லா இனத்தாரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு இருக்கும் போது முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணிப்போம் எனும் கோஷத்தின் மூலம் இவர்கள் நாடுவது என்னவென்று புரியவில்லை. பொருளியலைப் பற்றிய விளக்கமில்லாத சிலர் இத்தகைய கோஷங்களுக்குப் பின்னாலிருப்பது தெளிவாகிறது. இலங்கை முஸ்லிம்களின் வர்த்தகத்தைப் புறக்கணிப்போமெனக் கோஷமிடும் சிங்களவர்கள் பலரும் முஸ்லிம்களின் பணத்தில் ஆசைகொண்டு அரபு நாடுகளில் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சிங்களவர்களின் அனேகமான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வியாபாரம் அதிகமாக முஸ்லிம் வர்த்தகர்கள் ஊடாகவே நடக்கின்றன. இறக்குமதித் துறையிலும் முஸ்லிம்கள் உள்ளனர். வர்த்தகத்துறையானது ஒரு சக்கரம் போன்று செயற்படுகிறது. அது பல்வேறு உப கூறுகளின் ஒன்றிணைந்த படிமுறைச் செயற்பாடாகும். அந்த உப கூறுகள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிவு பிரிவாக இல்லாததோடு அவர்களுள் ஒவ்வொருவரும். தேர்ச்சியுள்ள ஒவ்வொரு துறைகளில் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர்.

வர்த்தகத் துறையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரின் முட்டாள்தனமான – முகத்தோடு கோபித்துக்கொண்டு மூக்கை அறுத்துக் கொள்வதைப் போன்ற – செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு, எல்லா விடயங்களையும் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்படுவதுதான் புத்திசாலிகளின் தன்மையாகும். ஒரு சமூகமும் நாடும் முன்னேற்றமடைய எவ்வளவு அதிகமான மக்கள் இருந்தாலும் போதுமானதல்ல, அவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்க வேண்டும். புத்திசாலி என்பவன், தான் ஏற்கனவே விட்டுள்ள தவறுகளைச் சீர்படுத்திக் கொள்பவனும் சீர்படுத்திக் கொண்டவற்றை நிலைத்து நிற்கும் விதமாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்பவனும் ஆவான். நமது நாட்டுக்குப் புத்திசாலிகளே தேவைப் படுகின்றனர். எனவே புத்திஜீவிகளாவோம்.

நன்றி: தினமின

Leave A Reply

Your email address will not be published.