ஜம்இய்யத்துல் உலமா சபை மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குக

பொய் எனில் ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குக : மு.உ.அ

0 779

பொது­பல சேனா அமைப்பு கண்­டியில் நடாத்­திய மாநாட்டில் ஞான­சார தேரர் உலமா சபையை பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­பட்ட ஒரு சபை என்று தெரி­வித்­தி­ருக்­கிறார். ஞான­சார தேரரின் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடாத்­துங்கள்.

உலமா சபை பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­பட்­டி­ருந்தால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது­செய்­யுங்கள். இல்­லையேல் பொய் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்கும் ஞான­சார தேரரை கைது­செய்து சட்­டத்தின் முன் நிறுத்­துங்கள் என்று முஸ்லிம் உரி­கை­ளுக்­கான அமைப்பு குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பா­ள­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று முன்­தினம் குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பா­ள­ரிடம் கோரிக்­கைகள் அடங்­கிய கடி­த­மொன்­றினை கைய­ளித்­தனர். அக்­க­டி­தத்­திலே இவ்­வாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேரர் கண்டி மாநாட்டில் ஆற்­றிய உரையின் பதி­வுகள் அடங்­கிய இறு­வெட்டும் குற்­ற­வியல் விசா­ரணைப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ஞான­சார தேரர் தனது உரையில் முஸ்லிம் சமூ­கத்தின் மீதே பல பொய் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்ளார். முஸ்­லிம்­க­ளையும் உலமா சபை­யையும் அவ­தூ­றாகப் பேசி­யுள்ளார். அவ­ரது உரை தொடர்பில் அவரை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தவும்.
ஞான­சார தேரர் மற்றும் அத்­து­ர­லிய ரதன தேரர் இந்­நாட்­டுக்கு செய்த சேவைகளை விட உலமா சபை இந்நாட்டுக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாரிய சேவைகளை செய்துள்ளது’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.