ஹஜ் மேலதிக கோட்டா : 500 பேரும் தெரிவாகினர்

0 724

இலங்­கைக்கு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்­சினால் கடந்த வாரம் வழங்­கப்­பட்ட மேல­திக 500 ஹஜ் கோட்­டா­வுக்­கான ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரிவு செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

ஏற்­க­னவே ஹஜ் கட­மைக்­காக பதிவு செய்து பதிவுக் கட்­ட­ணங்­களை செலுத்­தி­யுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களே இதற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். 500 ஹஜ் கோட்­டா­வுக்­கான யாத்­தி­ரி­கர்கள் தெரிவின் இறுதித் தினம் 10ஆம் திக­தி­யென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்று இத்­தெ­ரி­வுகள் ஹஜ் முக­வர்கள் ஊடாக பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன எனவும் அவர் குறிப்­பிட்டார். இவ்­வ­ருடம் ஏற்­க­னவே இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 500 மேலதிக கோட்டா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.