மெளலவி அலியார் பிணையில் விடுதலை

0 683

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் காத்­தான்­குடி இஸ்­லா­மிய வழி­காட்டல் நிலை­யத்தின் தலை­வ­ரு­மான மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி நேற்­றைய தினம் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து கடந்த 10.05.2019 அன்று சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே அவரை நேற்­றைய தினம் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் பிணையில் விடு­தலை செய்தார்.

ஐந்து இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­யிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணை­யிலும் இவர் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் வெளி­நாடு செல்­லவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நீதி­மன்­றத்­துக்கு உரிய திக­தியில் சமு­க­ம­ளிக்க வேண்­டு­மெ­னவும் நீதவான் உத்­த­ர­விட்­டுள்ளார். இது தொடர்­பான அடுத்த வழக்கு 19.07.2019 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­குடி ஜாமி­யத்துல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரியின் தலை­வரும் காத்­தான்­குடி இஸ்­லா­மிய வழி­காட்டல் நிலை­யத்தின் தலை­வரும் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரு­மான ஏ.எம்.அலியார் றியாதி 10.05.2019 அன்று சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு கடந்த இரண்டு மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் தொடர்­பான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வந்­தன.

இந்த நிலையில் இவ­ருக்கு பிணை கோரி மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்­றத்தில் 10.07.2019 நேற்று புதன்­கி­ழமை முன்­வைக்­கப்­பட்ட பிணை மனு­வினை விசா­ரணை செய்த மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் மேற்படி நிபந்தனைகளுடன் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.