காதிகள் சபைக்கு செயலாளர் ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக நியமிக்கப்படாததால் அச்சபையினால் புதிய வழக்குகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஆவணங்களுக்கான கட்டணங்களை அறவிடவோ
முடியாதுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரளயிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதால் தாமதமில்லாது காதிகள் சபைக்கு செயலாளர் ஒருவரை நியமிக்கும்படியும் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் இயங்கிவரும் 60 க்கும் மேற்பட்ட காதிநீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதென்றால் காதிகள் சபைக்கே அந்த மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளன. இதனால் பல வழக்குகள் நீண்டகாலமாக காதிகள் சபையில் தேங்கிக் கிடக்கின்றன.
vidivelli