பொது பல சேனாவின் ‘கண்டி தீர்­மா­னங்கள்’ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போர் பிர­க­ட­னமே

0 613

கண்­டியில் பொது­பல சேனா­வினால் நேற்று முன்­தினம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மாநாட்டில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தீர்­மா­னங்­களில் சில முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு எதி­ராக போர்ப்­பி­ர­க­டனம் செய்­யப்­பட்­ட­தற்கு சம­மா­ன­தாகும். நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருந்த ஞான­சார தேரர் ஜனா­தி­ப­தியின் விசேட அனு­ம­தி­யுடன் விடு­த­லை­ய­டைந்து வந்த பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தனது வழக்­க­மான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை எவ்­வித இடைஞ்­ச­லு­மின்றி புது­மெ­ரு­குடன் தொடர்ந்து வரு­கின்றார்.

நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருக்­கும்­போது மாநா­டொன்றைக் கூட்­டு­வ­தற்­கான அனு­மதி அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த மாநாட்டின் கருப்­பொருள் என்ன என்­பது வெளிப்­ப­டை­யாக முன்­கூட்­டியே அறி­விக்­கப்­பட்ட பின்­ன­ணியில் எவ்­வித தடை­யு­மின்றி இந்த மாநாட்­டுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. பல்­வேறு நிழல் சக்­தி­களின் அனு­ச­ர­ணை­யு­டனும் ஆசிர்­வா­தத்­து­டனும் வழி­காட்­ட­லு­டனும் நடந்த மாநாட்டில் நிறை­வேற்­றப்­பட்ட, சவால் விடுக்­கப்­பட்ட பின்­வரும் விட­யங்கள் பற்றி ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்றம், அரச நிர்­வாகம் மற்றும் எதிர்க்­கட்­சி­யினர், தமிழ் கட்­சிகள் ஆகி­யன தங்­க­ளது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென நாம் வேண்­டு­கின்றோம்.

1. உலமா சபை­யுடன் அர­சாங்­கமும், அரச அதி­கா­ரி­களும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும்.

2. இஸ்­லா­மிய பெயர் தாங்­கிக்­கொண்டு இஸ்­லா­மிய கோட்­பா­டு­க­ளுக்கு விரோ­த­மாக செயற்­படும் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நாமும் எதிர்ப்­புத்தான். அதனை பல வழி­க­ளிலும் முஸ்­லிம்கள் வெளிப்­ப­டுத்­தி­யு­முள்­ளனர். ஆனாலும் அவர்­களைக் கண்ட இடத்தில் நசுக்கி அழித்து விடுங்கள் என கட்­ட­ளை­யிடும் அதி­காரம் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளதா? இஸ்லாம் என்­பது என்ன, அடிப்­ப­டை­வாதம் என்­பது எது? என்­பன பற்றி பகுத்­தாய்ந்து தண்­டனை வழங்கும் அதி­கா­ரமும் அதன்பின், அவர்­களை கூறு­ப­டுத்தி அழித்து விடு­வது என்­பதும், நமது நாட்டின் சட்­டத்தை மீறும் செயல்­க­ளாக கொள்ள முடி­யா­த­வையா?

3. 1950 இல் சிங்­க­ளத்தில் மொழி பெயர்க்­கப்­பட்ட குர்­ஆனை மட்­டும்தான் இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்கள் பின்­பற்ற வேண்டும் என இவர்கள் கட்­ட­ளை­யி­டு­வது முறை­யான செயலா? இன்­னொரு மதத்தின் யாப்பு ரீதி­யான அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சுதந்­தி­ரத்தில் தலை­யி­டு­வ­தற்கு அர­சாங்கம் அனு­ம­திக்­கின்­றதா?

4. உலமா சபை அடிப்­ப­டை­வா­தத்தை விதைத்தால் அவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென விடுக்­கப்­படும் எச்­ச­ரிக்­கையை அர­சாங்கம் எவ்­வாறு நோக்­கு­கின்­றது.

மேற்­கூ­றிய விட­யங்கள் எமது சமூ­கத்தின் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும், வேத­னை­க­ளையும் தோற்­று­வித்­துள்­ளன.

ஈமானில் (நம்­பிக்­கையில்) பாதி நாட்­டுப்­பற்­றாகும் என எமக்குப் போதிக்­கப்­பட்­டுள்­ளது. எமது பிறப்பும் வாழ்வும் இறப்பும் இந்­நாட்­டில்தான். எனவே நாம் எதற்கும் அச்­சப்­படப் போவ­தில்லை.

சஹ்ரான் எனும் ஒரு தனி­ம­னி­தனால் உரு­வாக்­கப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான நட­வ­டிக்­கைக்­காக ஒரு சமூ­கத்­தையே அடி­ப­ணிய வைத்து அடி­மைப்­ப­டுத்தி அடக்கி ஒடுக்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது. ஸஹ்­ரா­னுடன் முஸ்லிம் சமூகம் உடன்­பாடு இல்லை என்ற விடயம் தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு கற்­றோ­ராலும், மித­வாதப் போக்­குள்ள பெரும்­பான்­மை­யி­ன­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது சக­லரும் அறிந்த விட­ய­மாகும்.

ஆனாலும், ஒரு­சில சிறு­பான்­மை­யான கடும்­போக்கு இன­வாதக் கும்பல் “இல்லை, நீங்­களும் சஹ்­ரான்­வா­தி­கள்தான். உங்கள் மீது நாம் திணிக்­க­வுள்ள எல்லா நிகழ்ச்­சி­க­ளையும் நிறை­வேற்றி முடிக்­கும்­வரை உங்­களை சஹ்­ரா­னுடன் இணைத்­துத்தான் பார்ப்போம்” எனக் கூறிக்­கொண்டு எம் மீது தொடர் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை நாம் அனு­ம­திக்க முடி­யாது.

அமைச்சுப் பத­வி­களை மீளப் பெறு­வது பற்றி ஆலோ­சனை நடத்­து­வ­தற்கு தயா­ராகும் முன்னாள் அமைச்­சர்கள் மேல் குறிப்­பிட்ட விட­யங்­க­ளுக்கு தெளி­வான பதிலை உரி­ய­வர்­க­ளிடம் பெற்­றுக்­கொள்ள வேண்டும். உங்­களை பத­வி­க­ளி­லி­ருந்து வெளி­யேற்றும் அள­வுக்கு பிர­யோ­கித்த அழுத்­தங்­க­ளை­விட பல­ம­டங்கு அழுத்­தத்­துடன் இந்­நாட்டில் இன­வாதம் வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது.
அதற்கு காரணம் பெரும்­பான்­மை­யாக உள்ள நல்ல மிதவாதப் போக்குள்ள நல்ல உள்ளங்கள் கூட பலம் குன்றிப்போயுள்ள நிலைமைதான்.

ஜனாதிபதி, அரசாங்கம், ஆயுதப்படை, அரச அதிகாரிகள் எல்லோரும் அடங்கிப் போயுள்ள ஓர் அமானுஷ்யமான ஆபத்தான அமைதி குடிகொண்டுள்ள இந்த நிலைமையில் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். வீண் வம்புகளை விலக்கி தியானத்தில் ஈடுபட வேண்டும். அரசியல் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஓன்றுதிரண்டு எமது அமைதியான செய்தியை சொல்வதற்கு விரைவில் ஒரு மாபெரும் மாநாட்டை கிழக்கில் திரட்ட முன்வருவார்களா?

எம்.ரீ.ஹசன் அலி
செய­லாளர் நாயகம்
ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு

vidivelli

Leave A Reply

Your email address will not be published.