ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரச ஹஜ் குழு அறிவுரை

0 618

ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­ள­வுள்ள பய­ணிகள் ஏதும் நோய்­க­ளுக்கு மருந்து வகைகள் உட்­கொள்­ப­வர்­க­ளாக இருந்தால் அவர்கள் அவ­சியம் ஒரு மாத காலத்­துக்குத் தேவை­யான மருந்து வகை­களை தம்­முடன் எடுத்துச் செல்­லு­மாறு அரச ஹஜ் குழு அறி­வுரை வழங்­கி­யுள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் மருத்­துவ சேவைகள் குறித்து அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் விளக்­க­ம­ளிக்­கையில்;

“சவூதி மக்­காவில் ஹரம் ஷரீப் எல்­லைக்குள் மருத்­துவ சேவை­க­ளுக்கு சவூதி ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான அமைச்சு சில கட்­டுப்­பா­டுகள் விதித்­துள்­ளதால் இலங்கை ஹஜ் குழுவின் மருத்­துவ முகாம்கள் இந்த எல்­லைக்கு வெளி­யி­லேயே இம்­முறை நடத்­தப்­படும்.

மருத்­துவ முகாம்­களில் கட­மை­யாற்­று­வ­தற்­காக இலங்­கை­யி­லி­ருந்து ஒரு பெண் டாக்டர் உட்­பட 5 டாக்­டர்கள் அங்கு செல்­ல­வுள்­ளனர். இலங்கை ஹஜ்­ஜா­ஜிகள் இந்த மருத்­துவ முகாம்­களில் சிகிச்­சை­களைப் பெற்றுக் கொள்­ளலாம் மருந்து வகை­க­ளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்­தோடு சவூதி அர­சாங்­கத்தின் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் சிகிச்­சை­களைப் பெற்றுக் கொள்­ளலாம். அசௌ­க­ரி­யங்­களைத் தவிர்ப்­ப­தற்­காக ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தம்­முடன் தமக்குத் தேவை­யான மருந்து வகை­களைக் கொண்டு செல்­வதே நன்மை பயக்கும்.

இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது ஹஜ் விமானம் எதிர்­வரும் 15 ஆம் திகதி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது. இவ்­வி­மா­னத்தில் 180 ஹஜ் பயணிகள் பயணிக்கவுள்ளனர். மேலதிக கோட்டா 500 க்கான பயணிகள் தெரிவுகள் இவ்வாரம் பூர்த்தி செய்யப்படவுள்ளன என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.