கமர் நிஸாம்தீன், அவுஸ்திரேலிய ஊடகங்கள், பொலிஸுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

0 933

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளாகி கைது செய்­யப்­பட்டு, பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட இலங்­கை­ய­ரான கமர் நிசாம்தீன், அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்­க­ளுக்கும் பொலி­சா­ருக்கும் எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார்.

கமர் நிஸாம்­தீனை தீவி­ர­வா­தி­யாக சித்­தி­ரித்து பொய்­யான செய்­தி­களை வெளி­யிட்­ட­மைக்கு எதி­ரா­கவே அவுஸ்­தி­ரே­லி­யாவைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் சில ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக கமர் நிஸாம்­தீனின் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­துள்­ளனர்.

”சிட்­னி­யி­லி­ருந்து வெளி­யாகும் டெய்லி டெலி­கிராப் உட்­பட இரண்டு ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக மான நஷ்­ட­ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நாம் தீர்­மா­னித்­துள்ளோம். அத்­துடன் சிட்னி பொலி­சா­ருக்கு எதி­ரா­கவும் சிவில் வழக்­கொன்றைத் தாக்கல் செய்­ய­வுள்ளோம். இதற்­கான ஆவ­ணங்­களை அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள எமது சட்­டத்­த­ர­ணிகள் தயா­ரித்து வரு­கின்­றனர்.” என இலங்­கை­யி­லுள்ள கமர் நிஸாம்­தீனின் சட்­டத்­த­ர­ணி­யான பர்மான் காஸிம் தெரி­வித்­துள்ளார்.

கமர் நிஸாம்தீன் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லு­மி­ருந்தும் முறை­யாக விடு­விக்­கப்­பட்­டுள்ள போதிலும், இது தொடர்பில் சிட்னி பொலிசார் இது­வரை வருத்தம் தெரி­விக்­கவோ மன்­னிப்புக் கோரவோ முன்­வ­ர­வில்லை. இந் நிலையிலேயே சிட்னி பொலிஸாருக்கு எதிராகவும் கமர் நிஸாம்தீன் தரப்பு சிவில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.