தேரரிடம் விசாரணை நடத்துக

சி.ஐ.டி.க்கு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு

0 1,903

காத்­தான்­குடி பிர­தே­சத்தில் 20 பேருக்கு ஷரீஆ சட்­டத்தின் கீழ் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்­பான தர­வுகள் தம்­மிடம் இருப்­ப­தா­கவும் கலா­நிதி மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் வெளி­யிட்­டுள்ள கருத்து தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன சி.ஐ.டி. பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்­ன­வுக்கு இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ள­தா­கவும் அதனை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. தற்­போது குறித்த விடயம் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர கூறினார்.

கடந்த ஜூலை 4 ஆம் திகதி நுகே­கொ­டையில், ‘வஹாப் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ரான மக்கள் போராட்டம்’ எனும் தொனிப்­பொ­ருளில் கூட்டம் ஒன்று நடாத்­தப்­பட்­டது. இதன்­போதே காத்­தான்­கு­டியில் ஷரீ ஆ சட்­டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கலா­நிதி மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

தன்­னிடம் அந்த தக­வல்கள் இருப்­ப­தா­கவும், அவற்றை ஊட­கங்­க­ளுக்கு வழங்க முடி­யாது எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். இந் நிலை­யி­லேயே குறித்த பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டு தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, அது குறித்து விசா­ரிக்க சி.ஐ.டி.யிக்கு எழுத்­து­மூலம் உத்­த­ர­விட்­டுள்ளார். இந் நிலையில் விசா­ர­ணை­களின் ஆரம்­ப­மாக மிக விரைவில் கலா­நிதி மெத­கொட அப­ய­திஸ்ஸ தேர­ரிடம் விசா­ரித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டி. நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இதே­வேளை, காத்­தான்­கு­டியில் இரு­பது பேருக்கு ஷரீஆ சட்­டத்தின் கீழ் மரண தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் தெரி­வித்­துள்ள கருத்தை காத்­தான்­கு­டியின் அர­சியல் மற்றும் சிவில் சமூகத் தலை­வர்கள் வன்­மை­யாக கண்­டித்­துள்­ள­துடன் இந்த அபாண்­ட­மான குற்­றச்­சாட்டு குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

இது தொடர்பில் கடந்த சனிக்­கி­ழமை மாலை காத்­தான்­குடி நகர சபை, காத்­தான்­குடி ஜம்­இய்­யதுல் உலமா சபை, காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஆகிய நிறு­வ­னங்கள் இணைந்து ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றை நடாத்­தி­யி­ருந்­தன. இதில் கருத்து வெ ளியிட்ட காத்­தான்­குடி நகர சபை தவி­சாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் அப்­பட்­ட­மான பொய்­யொன்றை கூறி­யுள்­ள­தா­கவும் இதனை தேரர் நிரூ­பிக்க வேண்­டு­மெ­னவும் கோரி­யி­ருந்தார். இங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் காத்­தான்­குடி மீது ஓர் அபாண்­ட­மான பொய்யை தெரி­வித்­துள்ளார். இதனை நாங்கள் முற்­றாக மறுக்­கின்றோம். அவரின் கருத்­துக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பிலும் ஆராய்ந்து வரு­கின்றோம். கடந்த 30 வருட கால யுத்­தத்­துக்கு முன்­னரோ அல்­லது யுத்தம் நிறை­வ­டைந்த பின்­னரோ, தேரர் கூறிய எந்­த­வொரு விட­யமும் இடம்­பெ­ற­வில்லை என்­பதை தெளி­வாகக் கூறி­வைக்க விரும்­பு­கின்றோம்.
தேரர் குறிப்­பிட்­டி­ருப்­பது போல வட்டி, விப­சாரம் போன்ற சமூகவிரோத செயல்­களில் ஈடு­பட்ட அல்­லது மார்க்க விரோ­த­மாக செயற்­பட்ட எவ­ருக்­குமே காத்­தான்­கு­டியில் மரண தண்­டனை வழங்­கப்­ப­ட­வில்லை.

இலங்­கையின் அர­சியல் யாப்­புக்கும் இலங்கை அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மாற்­ற­மாக ஒரு காலத்­திலும் ஒரு­போதும் காத்­தான்­குடி முஸ்­லிம்­களோ அல்­லது இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­களோ செயற்­பட்ட வர­லாறே கிடை­யாது என்­ப­தையும் தெளி­வாக கூறி­வைக்க விரும்­பு­கின்றோம்.
பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் கூறிய கருத்து தொடர்பில் நாம் நீதி­மன்­றத்தை நாட­வுள்ளோம். இது தொடர்­பாக சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆராய்ந்து வரு­கின்றோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.