கல்முனையை விட்டுத்தர முன்வராவிட்டால் முஸ்லிம்கள் வேறு திசையில் பயணிக்க நேரிடும்

0 823

தமிழ் சமூ­கத்தின் தீர்வுத் திட்­டத்­திற்கு முஸ்­லிம்­களின் ஆத­ரவு அவ­சி­யப்­ப­டு­கின்ற சூழ்­நி­லையில் வடக்கு, கிழக்கு என்­கின்ற பெரும் தேசத்தில் ஒரு மூலையில் இருக்­கின்ற கல்­முனை எனும் சிறு பிர­தே­சத்தை முஸ்­லிம்­க­ளுக்கு விட்டுக் கொடுப்­ப­தற்கு தமிழ் தரப்பு தயா­ரில்­லை­யென்றால் முஸ்லிம் சமூகம் வேறு திசையில் பய­ணிக்க நேரிடும் என திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

கல்­முனை பிர­தேச செய­லகப் பிரிவில் புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட 1100 சமுர்த்தி குடும்­பத்­தி­ன­ருக்கு உரித்துப் பத்­திரம் வழங்கும் நிகழ்வு சனிக்­கி­ழமை மாலை சாய்ந்­த­ம­ருது லீ மெரீ­டியன் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது கெள­ரவ அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

கல்­முனை பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீர் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் ஆரம்ப கைத்­தொழில், சமூக வலு­வூட்டல் அமைச்சர் தயா கமகே பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தார்.

அங்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரி­விக்­கையில், “ஸஹ்ரான் தலை­மையில் சிறிய குழு­வினர் செய்த தாக்­கு­தலின் பின்­ன­ராக எமது முஸ்லிம் மக்கள் பெரும் நெருக்­க­டி­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். எமது பெண்கள் அபாயா அணி­வ­தற்கும் தடை­யேற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து போராடி, அபாயா விட­யத்தில் வெற்றி பெற்றோம்.

அமைச்சர் றிசாத் மற்றும் முஸ்லிம் ஆளு­நர்­களை பதவி வில­கக்­கோரி கண்­டியில் அத்­து­ர­லிய ரத்ன தேரர் உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடாத்­தி­ய­போது, அவ்­வி­டயம் எமது சமூ­கத்­துக்கு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதால் நான் விடுத்த கோரிக்­கையின் பேரில் எமது ஒன்­பது அமைச்­சர்­களும் இரா­ஜி­னாமா செய்து, சமூ­கத்தை பாது­காத்தோம்.

அதன் பின்­னரே முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­வ­ரு­கி­றது.

இன்னும் சில மாதங்­களில் எமது நாடு ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டிய சூழ்­நி­லையில் எமது கல்­முனை நகரின் இருப்பு பாரிய சவா­லாக மாறி­யி­ருப்­பது குறித்து எல்­லோரும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

கல்­முனைத் தொகு­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த எம்.எஸ்.காரி­யப்பர், எம்.சி.அஹமத், ஏ.ஆர்.மன்சூர், தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோர் கல்­மு­னையில் அரச காரி­யா­ல­யங்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களை ஏற்­ப­டுத்தி அதனை கிழக்கின் ஒரு முன்­னணி நக­ர­மாக செதுக்கி, உரு­வாக்­கி­னார்கள். ஆனால் இன்று தமிழ் – முஸ்லிம் உறவை சீர­ழித்து கல்­மு­னையை கூறு­போ­டு­வ­தற்கு மூன்றாம் தரப்­பினர் மூக்கை நுழைத்து உண்­ணா­வி­ரதம் இருக்­கி­றார்கள்.

இந்த சூழ்ச்­சியை முறி­ய­டிப்­ப­தற்­காக நாமும் சத்­தி­யாக்­கி­ரகம் ஒன்றை மேற்­கொ­ணடு, அர­சாங்­கத்­துக்கு ஒரு செய்­தியைக் கூறி­யுள்ளோம். கல்­மு­னையை பிரிப்­ப­தாக இருந்தால் ஆங்­கி­ல­யரின் ஆட்சிக் காலம் தொட்டு 1987 ஆம் ஆண்டு வரை இருந்­தது போன்ற எல்­லை­க­ளைக கொண்டு பிரி­யுங்கள் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இதில் எந்த விட்டுக் கொடுப்­புக்கும் இட­மில்லை என்று அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளோம்.

யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, திரு­மலை என்று ஏழு மாவட்டக் கச்­சே­ரி­களும் நக­ரங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கி­றன. ஆனால் கல்­முனை நகரம் மாத்­தி­ரமே முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கி­றது. கல்­முனை என்­பது முஸ்­லிம்­களின் தாயகம், அதை எவரும் கப­ளீ­கரம் செய்­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்டோம்.

தமி­ழர்­க­ளுக்­கான தீர்வுத் திட்டம் மழுங்­க­டிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அர­சாங்கம் ஏமாற்­று­வ­தா­கவும் சம்­பந்தன் ஐயா சில தினங்­க­ளுக்கு
முன்னர் தழு­த­ழுத்த குரலில் தனது வேத­னையை வெளி­யிட்­டுள்ளார். அதே­நேரம் தீர்வுத் திட்­டத்­திற்­காக என்ன விலை கொடுக்­கவும் தமிழ் மக்கள் தயா­ரா­க­வி­ருக்­கி­றார்கள் என்றும் சம்­பந்தள் குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வா­றான தீர்வுத் திட்­டத்­திற்கு முஸ்­லிம்­களின் ஒத்­து­ழைப்பு அவ­சியம் என்­பதை புரிந்து கொள்­ளாமல் தமிழ் தலை­மைகள் சிலர் கல்­முனை விட­யத்தில் கடும்­போக்­குடன் நடந்து கொள்­வது எமக்கு கவ­லை­ய­ளிக்­கி­றது.
தமிழ் மக்­களின் பல தசாப்த கால போராட்டம் தோற்றுவிடக் கூடாது என்­பதில் நாம் தெளி­வாக இருக்­கிறோம்.

அவர்­க­ளது அர­சியல் தீர்வுத் திட்­டத்­திற்­காக இரு சமூ­கங்­களும் கைகோர்த்துச் செயற்­பட வேண்­டி­யுள்­ளது. அதற்­காக இரு தரப்­பி­னரும் பேசி உடன்­பாட்­டுக்கு வர வேண்­டி­யுள்­ளது. இதனை சீர்­கு­லைப்­ப­தற்­கா­கவே மூன்­றா­வது சக்தி கல்­முனை விட­யத்தில் மூக்கை நுழைத்­துள்­ளது என்பதை தமிழ் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு கையால் தட்டி ஓசை வராது, இரு கைகளும் இணைந்து தட்டினால்தான் ஓசை வரும் என்பது போலவே தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பேற்படும் என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து செயற்பட முன்வர வேண்டும். இல்லையேல் முஸ்லிம்கள் வேறு திசையில் பயணிக்க நேரிடும் என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.