புதிய ஹஜ் யாத்திரிகர்களை தெரிவு செய்ய கால அவகாசம்

0 637

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் மேல­தி­க­மாகக் கிடைக்­கப்­பெற்­றுள்ள 500 ஹஜ் கோட்­டாவின் கீழ் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் தெரி­வு­க­ளுக்கு அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை கால அவ­காசம் வழங்­கி­யுள்­ளன.

ஏற்­க­னவே 3,500 ஹஜ் கோட்­டாவின் கீழ் ஹஜ் கட­மையை மேற்­கொள்ள யாத்­தி­ரி­களின் பயண ஏற்­பா­டுகள் அனைத்தும் முற்­றுப்­பெற்­றுள்ள நிலையில் 500 மேல­திக ஹஜ் கோட்­டா­வுக்­கான தெரி­வுகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன.

ஹஜ் கட­மைக்­காக தங்­களைப் பதிவு செய்து 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்­தி­யுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு முன்பு திணைக்­க­ளத்­தினால் இவ்­வ­ருட ஹஜ் அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­கொண்­டுள்ள தாம் விரும்பும் முகவர் ஊடாக பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு முஸ்­லிம சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.ஆர்.எம். மலிக் கோரிக்கை விடுத்­துள்ளார். இதே­வேளை, சப் ஏஜன்ட்கள் மூல­மா­கவே திணைக்­க­ளத்தின் அங்­கீ­காரம் பெற்­றி­ராத முகவர் நிலை­யங்கள் மூல­மா­கவோ எவ்­வித ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டா­மெ­னவும் முற்­பணம் செலுத்த வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இவ்­வா­றான ஏற்பாடுகள் மூலம் ஏமாற்றப்படும் விண்ணபப்தாரிகள் தொடர்பில் திணைக்களம் பொறுப்பேற்க மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.