இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிக்கும் பொறுப்பை பௌத்­த­கு­ரு­மா­ரிடம் தாருங்கள்

சிங்கள அரசை நிறுவி நாட்டை காப்பாற்றுவோம் என்கிறார் ஞானசாரா

0 997

இலங்­கை­யி­லி­ருந்து இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தைத் துடைத்­தெ­றியும் பொறுப்­பினை பௌத்த குரு­மார்­க­ளுக்குத் தரும்­ப­டியும் அதற்­கான அனு­பவம் குரு­மார்­க­ளுக்­கி­ருப்­ப­தா­கவும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் நேற்று அர­சாங்­கத்­திடம் அறை­கூவல் விடுத்தார்.

கண்டி போகம்­பரை மைதா­னத்தில் நேற்று மாலை நடை­பெற்ற ‘நான்கு திசை­க­ளையும் ஒன்­றி­ணைத்த மாநாட்டில்’ கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், “நாங்கள் நாட்டில் சிங்­கள அர­சொன்­றினை நிறுவி நாட்டை அடிப்­ப­டை­வாத ஆக்­கி­ர­மிப்­பு­க­ளி­லி­ருந்து காப்­பாற்­றுவோம். நாம் 70 வருட கால ஆட்சி முறைக்கு விடு­தலை கொடுப்போம். ஆட்­சி­யா­ளர்­களை கதி­ரை­யி­லி­ருந்து வெளி­யேற்றி அவர்­களை வீட்­டுக்கு அனுப்­புவோம். நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்­தாலே காவி­யு­டையின் வெற்­றியை எய்­தலாம்.

ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்சித் தலைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உலமா சபை­யுடன் நடாத்தும் பேச்­சு­வார்த்­தை­களை உடன் நிறுத்த வேண்டும். உலமா சபை கலைக்­கப்­பட்டு அந்தப் பொறுப்பு சூபி முஸ்­லிம்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்டும். இல்­லையேல் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு “அப­ச­ரணய்” வெகு தூரத்தில் இல்லை.

அர­சியல் தலை­வர்கள் அர­சி­யலைப் பார்த்துக் கொள்­ளுங்கள். அடிப்­ப­டை­வா­தத்தை அழிக்கும் பொறுப்பை எமக்குத் தாருங்கள். நாம் எமக்குத் தேவை­யான முறையில் சட்­டங்­களை மாற்றிக் கொள்வோம்.

எமது நாடு பல அறை­களைக் கொண்ட ஒரு வீடாகும். இந்த வீட்­டுக்குள் அடிப்­ப­டை­வாதம் என்ற விஷப் பாம்­பொன்று புகுந்து கொண்­டுள்­ளது. அந்தப் பாம்பு எம்­ம­னை­வ­ரையும் தீண்டும். அந்தப் பாம்­பினை நாம் கண்ட இடத்தில் கொல்ல வேண்டும்.

உலமா சபையின் செயற்­பா­டு­க­ளினால் இலங்கை மாத்­தி­ர­மல்ல, முழு உல­கமும் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளன. உலமா சபையின் கீழ் தப்லீக், வஹா­பிஸம், சலபி, இஹ்வான் – ஜமா­அத்தே இஸ்­லாமி என பல பிரி­வுகள் இயங்கி வரு­கின்­றன. அநேக முஸ்லிம் நாடுகள் இந்தப் பிரி­வு­களை தடை செய்­துள்­ளன.

அட்­டு­லு­கம, அக்­கு­றணை, காத்­தான்­குடி போன்ற பகு­தி­களில் வெவ்­வே­றான சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன. நாட்டில் ஒரே சட்டம் இருக்க வேண்டும். அட்­டு­லு­க­மவில் முஸ்லிம் பெண் ஒருவர் சிங்­க­ளவர் ஒரு­வரை திரு­மணம் செய்­துள்ள விட­யத்தில் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்­தியின் தப்லீக் அமைப்பு தலை­யிட்டு முர­ணாக நடந்து கொண்­டுள்­ளது. அவர்­களை எச்­ச­ரிக்­கின்றேன். கவ­ன­மாக இருங்கள். இல்­லையேல் உங்­க­ளுக்கு நாட்டில் இருக்க முடி­யாத நிலை ஏற்­படும்.

அர­சியல் தலை­வர்கள் வாக்கு வங்­கியை பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக உலமா சபை­யு­டனும் சூரா சபை­யு­டனும் கூடிப் பேசு­வதை நிறுத்திக் கொள்­ளுங்கள் என ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கூறு­கின்றேன்.

ஒரு கடவுள் – அந்தக் கட­வு­ளிடம் செல்ல வேண்­டு­மென்றால் ஒரு குர்ஆன் போதும். ஆனால் இன்று 40 வெவ்­வே­றான குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள் இருக்­கின்­றன. 1950 இல் பி.விக்­ர­ம­சிங்க மொழி­பெ­யர்த்த குர்­ஆ­னையே முஸ்­லிம்கள் கேட்­கி­றார்கள். ஆனால் வெவ்­வே­றான மொழி­பெ­யர்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் மாத்­தி­ர­மல்ல. அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் அரபுக் கல்­லூ­ரிகள், மத்­ர­ஸாக்கள், ஷரீஆ வங்­கிகள், காதி நீதி­மன்­றங்கள் என்று பல்­வேறு சட்­டங்கள் எமது நாட்­டுக்குத் தேவை­யில்லை.

இன்று அர­சாங்­கத்­துக்குள் வஹா­பிஸ அர­சாங்கம் இருக்­கி­றது. பொலி­ஸுக்குள் அடிப்­ப­டை­வாதி பொலிஸ் இருக்­கி­றது. நீதித்­து­றைக்குள் இன்­னொரு அமைப்பு காதி நீதி­மன்றம் இருக்­கி­றது. இவற்­றுக்குத் தீர்வு வேண்டும். ஒரே நாடு, ஒரே சட்­ட­மாக இருக்க வேண்டும்.

சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள் ‘பிஸ்­மில்­லாஹி ரஹ்­மானிர் ரஹீம்’ என்று கூறியே எதையும் ஆரம்­பிப்­பார்கள். அத்­தோடு ‘அஸ்­ஸ­லாமு அலைக்கும்’ என்று சாந்­தியும் சமா­தா­னமும் உண்­டாக வேண்டும் என்­பார்கள். ஆனால் இஸ்­லா­மிய சமூகம் இன்று வெகு­வாக மாறி­விட்­டது. இதனை நீங்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி சம்­ப­வத்­தை­ய­டுத்து அறிந்து கொண்­டீர்கள். நாட்டில் அடிப்­ப­டை­வாதம், வஹாப்­வாதம் பற்றி நாம் தொடர்ச்­சி­யாகக் கூறி வந்தோம். தேவை­யான தக­வல்­களை ஆவ­ணங்­க­ளுடன் வெளி­யிட்டோம். ஆனால் ஆட்­சி­யா­ளர்கள் எமது முறைப்­பா­டு­களை கவ­னத்திற் கொள்­ள­வில்லை. அதன் பிர­தி­ப­ல­னையே அனு­ப­விக்­கிறோம்.

எதிர்­கா­லத்தில் ஒரு­போதும் சிங்­க­ள­வர்­களை ஏமாற்ற முடி­யாது. 2012 முதல் 2019 வரை எமது பெண்­க­ளுக்கு கருத்­தடை, தொல்­பொருள் அழிக்­கப்­ப­டு­கின்­றமை, மத­மாற்றம் என்­பன பற்றி கூறி­வந்தோம். இவற்­றுக்கு நாம் தீர்­வு­காண வேண்டும்.

இன்று எமது நாட்­டுக்­கென்று ஒரு தலைவர் இல்லை. கட்­சி­க­ளுக்கு தலை­வர்கள் இருக்­கின்­றார்கள். மக்கள் அநா­தை­க­ளா­கவே இருக்­கின்­றார்கள். நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எங்­க­ளுடன் இணை­யு­மாறு தமி­ழர்­க­ளையும் அழைக்­கின்றோம். ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ இன்று நாட்­டுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய தலைவர் இல்லை. தேசிய கொள்கை இல்லை. நாடு அநா­த­ர­வாகி விட்­டது.

எங்கோ நாம் தவறுவிட்டுள்ளோம். அந்தத் தவறினைத் திருத்திக் கொள்ள வேண்டும். நாம் வீழ்ந்திருக்கின்றோம். வீழ்ந்த இடத்திலிருந்து நாட்டை ஆபத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.

நான் சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்பு ஜனாதிபதி என்னைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னே எனக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தார். வஹாபிஸத்தை நாட்டிலிருந்து தோற்கடிக்க என்னால் முடியும். சந்தர்ப்பம் வழங்கினால் இதனை என்னால் செய்ய முடியும் என்று நான் அன்று கூறினேன்” என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.