சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து

0 910

ஜூன் மாதத்தின் இறு­திநாள் ஆரம்­ப­மா­கி­றது. நான்கு பேரின் வாழ்வும் அன்றை தினம் அதி­கா­லை­யி­லேயே பரி­தா­ப­மாக முடி­வ­டை­யு­மென்று யாரும் நினைத்­துக்­கூட பார்க்­க­வில்லை…… 

மத்­தி­ய­கி­ழக்கில் சார­தி­யாகத் தொழில்­பு­ரிந்து மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் நாடு­தி­ரும்­பிய இம்ரான் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் வாகன விபத்­தொன்றில் சிக்கிப் படு­கா­ய­ம­டைந்தார். கால்கள் முறிந்­த­நி­லையில் சிகிச்சை பெற்­று­வரும் நிலையில், இம்­ரானின் மனை­வி­யான நிறை­மாதக் கர்ப்­பிணி சஹர் நிஸா­வுக்கு நள்­ளி­ரவில் பிர­சவ வலி ஏற்­ப­டு­கி­றது.

ஜூன் 30 அதி­காலை 3 மணி­யி­ருக்கும், இம்­ரானின் பெரி­யம்­மாவின் மக­னான சிபான், தனது ஒன்­று­விட்ட சகோ­த­ர­னான ரிஷா­பிக்கு அழைப்பை எடுத்து, “இம்­ரானின் மனை­விக்கு கடும் வருத்­த­மாக இருக்­கி­றது. ஆஸ்­பத்­தி­ரிக்கு போக வேண்டும். வேனை எடுத்­துக்­கொள்­ளட்­டுமா?” என கேட்­டி­ருக்­கிறார். ரிஷா­பியும் சரி­யெனக் கூற அதி­காலை மூன்­றரை மணி கடந்து வாக­னத்தில் 23 வய­தான நிறை­மாதக் கர்ப்­பிணி சஹர்­நி­ஸா­வுடன் அவ­ரது மாமி அதா­வது, கணவன் இம்­ரானின் தாய் மௌஸியா சுல்தான் (வயது 62), சிபானின் மனைவி நஸ்­மியா (வயது 32), மௌஸி­யாவின் சகோ­தரர் நவாஸ் மற்றும் இளைய மக­னான இஹ்லான் (வயது 21) ஆகி­யோ­ரையும் ஏற்­றிக்­கொண்டு இப­லோ­கம அழ­கப்­பெ­ரு­மா­கம பிர­தே­சத்­தி­லுள்ள வீட்­டி­லி­ருந்து கல்­னேவ வைத்­தி­ய­சா­லைக்கு செல்­கின்­றனர்.

பிர­சவ வேத­னையில் சஹர்­நிஸா துடித்­துக்­கொண்­டி­ருக்­கிறாள். கல்­னேவ வைத்­தி­ய­சா­லைக்கு சென்று பார்க்­கும்­போது அங்கு யாரும் இல்லை. அங்கு சிகிச்­சை­பெற முடி­யாது என்ற நிலையில், அங்­கி­ருந்து மிகவும் பதற்­றத்­துடன் உட­ன­டி­யாக அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்குச் செல்லத் தீர்­மா­னிக்­கின்­றனர். வேனை திருப்­பிக்­கொண்டு அனு­ரா­த­புரம் நோக்கிச் செல்­கை­யி­லேயே சுமார் 25 கிலோ­மீற்­றர்கள் தொலை­வி­லுள்ள மொற­கொட பகு­தியில் அந்த கோர விபத்­தேற்­பட்­டது.

அதி­காலை 3.50 மணி­யி­ருக்கும். கோழிப் பண்­ணை­யொன்­றுக்கு தவிடு உள்­ளிட்ட உண­வுப்­பொ­ருட்­களை ஏற்­றிக்­கொண்டு கஹ­ட­கஸ்­தி­கி­லி­ய­வி­லி­ருந்து குளி­யா­பிட்டி நோக்­கிச்­சென்ற லொறி­யொன்­றுடன் நேருக்கு நேர் மோதுண்டு இவ்­வி­பத்து ஏற்­பட்­டது. ஸ்த­லத்­தி­லேயே நிறைமாதக் கர்ப்­பிணி சஹர்­நிஸா, மௌஸியா சுல்தான், நஸ்­மியா சிபான் ஆகியோர் பலி­யா­கினர். முன் ஆச­னத்தில் அமர்ந்­­தி­ருந்த நவாஸின் நெஞ்­சுப்­ப­குதி பல­மாக அடி­பட்­டுள்­ள­துடன், கால்கள் முறி­வ­டைந்து பலத்த காய­ம­டைந்தார். அத்­துடன் வாக­னத்தை செலுத்­திய சிபா­னுக்கு தோள் பகு­தியில் பலத்த காய­மேற்­பட்­ட­துடன் எலும்பு முறிவு ஏற்­பட்­டுள்­ளது. இது­த­விர இஹ்­லானின் தலையில் அடி­பட்­டுள்ளது. சம்­பவம் நடந்து குறு­கிய நேரத்­திற்குள் தலாவ பொலிஸார் ஸ்தலத்­திற்கு விரைந்­த­துடன் உயி­ரி­ழந்த மற்றும் படு­கா­ய­ம­டைந்­தோரை உட­ன­டி­யாக அம்­பி­யூலன்ஸ் ஊடாக அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.
அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற பின்னர் உயி­ரி­ழந்த கர்­ப்பிணிப் பெண்ணின் வயிற்­றி­லுள்ள குழந்­தையைக் காப்­பாற்றும் முயற்­சியில் மருத்­து­வர்கள் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்டு குழந்­தையை வெளியில் எடுத்­த­போது அந்த சிசுவும் உயி­ரி­ழந்­த­நி­லையில் இருந்­தது. உயி­ரி­ழந்த நால்­வரின் ஜனா­ஸாக்­களும் பிரேத பரி­சோ­த­னையின் பின்னர் அன்­றைய தினமே குடும்­பத்­தா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. பின்னர் அன்று மாலை அழ­கப்­பெ­ரு­ம­கம மொஹிதீன் ஜும்ஆப் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நால்­வ­ரி­னது ஜனா­ஸாக்­களும் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. ஜனா­ஸாவில் பெருந்­தி­ர­ளான மக்கள் பங்­கேற்­றனர்.

இது தவிர காய­ம­டைந்­த­வர்கள் வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். வாக­னத்தை செலுத்­திய சிபான் கைது செய்­யப்­பட்­ட­நி­லையில் பொலிஸ் கண்­கா­ணிப்பில் சிகிச்­சை­பெற்று வரு­கின்றார்.
இந்தக் கோர­வி­பத்தை வெறு­மனே ஒரு சம்­ப­வ­மாக மட்டும் எடுத்­துக்­கொள்ள முடி­யாது. ஏனெனில், 4 உயிர்­களை காவு­கொண்ட இந்த விபத்­திற்கு பல்­வேறு கார­ணி­களும் இருக்­கின்­றன.

பிர­தா­ன­மாக கல்­நேவ பிர­தே­சத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லையின் தரம் குறித்தும் அங்கு வழங்­கப்­படும் சேவை­யிலும் பல்­வேறு குறை­பா­டுகள் நில­வு­கின்­றன. நள்­ளி­ரவில் பிர­சவ வேத­னையில் தவிக்­கின்ற ஒரு தாய்க்கு ஆரம்­ப­நிலை சிகிச்­சை­ய­ளிக்­கக்­கூ­டிய வசதி அந்த வைத்­தி­ய­சா­லையில் இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை. அடுத்­த­ப­டி­யாக 24 மணி­நே­ரமும் சேவை வழங்­க­வேண்­டிய அந்த வைத்­தி­ய­சா­லையில் குறித்த நேரத்தில் யாரும் இல்­லா­த­நிலை காணப்­பட்­டமை வருந்­தத்­தக்­க­தொன்­றாகும். இது குறித்து கவனம் செலுத்­தப்­பட வேண்டும். அத்­தோடு குறித்த வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருக்கும் தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்து தெரி­வா­கி­யி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இவ்­வி­டயம் குறித்து அதி­கூ­டுதல் கவனம் செலுத்த வேண்டும். குறித்த வைத்­தி­ய­சா­லையில் அம்­பி­யுலன்ஸ் வச­திகள் இல்லை என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் தற்­போது அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­படும் கம்­பெ­ர­லிய திட்­டத்­தி­னூ­டாக அவ்­வைத்­தி­ய­சா­லைக்கு ஒரு அம்­பி­யு­லன்­ஸை­யா­வது பெற்­றுக்­கொ­டுக்க முன்­வர வேண்டும்.

இது தவிர பதற்­ற­மான சூழ்­நி­லையில் வாகனம் செலுத்­து­வது கடி­ன­மா­னதே. எனவே, இதற்­கான மாற்­று­வ­ழி­களை கையாள வேண்டும். குறிப்­பாக இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் நாடு­மு­ழு­வதும் ஆரம்­பிக்­கப்­பட்ட 1990 எனும் அவ­சர இலக்­க­மு­டைய இல­வச அம்­பி­யு­லன்ஸின் சேவையை பெற்­றி­ருக்க முடியும். இப்­ப­டி­யான சேவைகள் குறித்து நாம் அவ­தானம் செலுத்­து­வ­தி­னூ­டாக எதிர்­கா­லங்­களில் இவ்வாறான விபத்துகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் இம்ரான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். மனைவி, பிள்ளை, தாயின் இழப்பு மட்டுமன்றி சகோதரன் படுகாயமடைந்தது என குடும்பமே ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் குறித்த குடும்பத்தினருக்கு குறிப்பிட்டதொரு காலத்திற்கு சமூகத்தின் உதவி தேவைப்படலாம். எனவே, இது குறித்து சமூக தலைமைத்துவங்கள், தொண்டு நிறுவனங்கள், பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எஸ்.என்.எம்.ஸுஹைல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.