உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவில் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும்

சிவில் சமூகம் சார்பில் அஷ்ஷெய்க் அன்சார் மௌலானா கோரிக்கை

0 813

எதிர்­வரும் ஜூலை 13 இல் இடம்­பெ­ற­வுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் புதிய நிர்­வாகத் தெரிவில் சம­கால இலங்கை முஸ்­லிம்­களை அசா­தா­ரண சூழ்­நி­லை­களில் வினைத்­தி­ற­னோடு வழி­ந­டாத்­தக்­கூ­டிய உல­மாக்கள் குழு­வுடன் நாட­ளா­விய ரீதியில் துறைசார் நிபு­ணர்­களும் இணைத்துக் கொள்­ளப்­படும் வகையில் புதிய நிர்­வாகத் தெரிவு ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென சிவில் சமூகம் சார்பில் அறிக்­கை­யொன்றை விடுத்­துள்ள அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்சார் மௌலானா தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்­கு­த­லின்பின் இலங்­கைவாழ் முஸ்லிம் சமூ­கத்தை மீளச் சிறப்­பாகக் கட்­டி­யெ­ழுப்பும் பணியை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கையி­லெ­டுத்­தி­ருந்­தாலும், அது தூக்க முடி­யாத ஒரு பெருஞ்­சு­மையை சுமக்க முயற்­சிக்­கி­றது. “தனி­மரம் தோப்­பா­காது” என்ற வகையில் தனியே உலமா சபையால் மாத்­திரம் இலங்கைச் சமூ­கங்­க­ளுக்கு உரிய தேசிய பங்­க­ளிப்­புக்­களை வழங்க முடி­யாது. அது ஒரு “தேசிய அங்­கீ­கா­ரத்­தையும் பெறவும் முடி­யாது” என்­பதால் நாம் அனை­வரும் இப்­போது சமயத் தலை­வர்­க­ளுக்கு அப்­பா­லான வெளிச் சிவில் சமூ­கத்தின் பங்­க­ளிப்பைப் பெற்றுக் கொண்டு நல்­ல­தொரு தேசிய மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான தீவிர முயற்­சியில் சிவில் சமூகம் இறங்க வேண்­டி­யுள்­ளது.

இந்த வகையில் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள பேரா­சி­ரி­யர்கள், விரி­வு­ரை­யா­ளர்கள், பிர­பல கல்­வி­யி­ய­லா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள், மருத்­து­வர்கள், வர்த்­த­கர்கள், மஸ்­ஜி­து­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள், சமூகப் பற்­றா­ளர்கள் ஆகி­யோரை நாட­ளா­விய ரீதியில் இனங்­கண்டு இணைத்துக் கொள்ள வேண்­டிய தார்­மிகப் பொறுப்பு அகில இலங்கை ஜம்­இ­யதுல் உல­மா­வுக்கு இருப்­ப­தாக முஸ்லிம் சிவில் சமூகம் கரு­து­கின்­றது.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் கீழ் செயற்­படும் உப குழுக்­க­ளான கல்விப் பிரிவு, சமூக சேவைப் பிரிவு, அர­சியல் பிரிவு, இன நல்­லு­றவுப் பிரிவு போன்ற 13 உப குழுக்­களில் பொருத்­த­மா­ன­வற்­றுக்கு மேற்­படி துறைசார் நிபு­ணர்கள் உள்­வாங்­கப்­பட உலமா சபையின் யாப்பு அனு­மதி அளிக்கும் என நாம் நம்­பு­கின்றோம். அத்­தோடு மேற்­படி உப குழுக்­களின் வலு­வூட்­ட­லுக்­கா­கவும், செயற்­றிறன் மிக்க சேவைக்­கா­கவும் தனி ஒரு தலைமை செயற்­ப­டாமல் “கூட்டுத் தலை­மைத்­துவம்” உருவாக்கப்படும் ஒரு விஷேட பொறிமுறையை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் நிர்வாக சபை புதிய தெரிவில் கவனத்தில் கொள்ளுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் வேண்டுகோள்விடுக் கின்றனர்’ என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.