மலேசியாவின் முன்னாள் பிரதிப் பிரதமரும் அடுத்த வருடம் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளவருமான அன்வர் இப்றாஹீம் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின்ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகிறது.
மலேசியாவின் முன்னாள் பிரதிப் பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ள அன்வர் இப்ராஹீம் அடுத்த வருடம், தற்போதைய பிரதமர் மஹாதிர் முஹம்மதிடமிருந்து பிரதமர் பதவியை பொறுப்பேற்க வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli