ஹஜ் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­ப­டுமா?

0 775

எமது நாட்டின் ஹஜ் ஏற்­பா­டு­களும், ஹஜ் தொடர்­பான விட­யங்­களும் ஒரு சட்ட வரம்­புக்குள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் எனும் கோரிக்­கைகள் பல வரு­டங்­க­ளாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந் நிலையில் இதற்­கான ஏற்­பா­டு­களை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழு என்­பன முன்­னெ­டுத்­தி­ருந்­தன. ஹஜ் விவ­கா­ரத்­துக்­கென தனி­யான சட்­ட­மொன்­றினை இயற்றி பாரா­ளு­மன்றில் அங்­கீ­க­ரித்துக் கொள்­வ­தற்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது.

ஹஜ்­ஜுக்­கான சட்ட வரை­பொன்று அரச ஹஜ் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்டு தற்­போது அந்த வரைபு அமைச்சர் ஹலீம் மற்றும் அமைச்சின் செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து ஹஜ் விவ­காரம் பின்­தள்­ளப்­பட்டு வேறு­பல விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் ஹஜ் ஏற்­பா­டுகள் விவ­கா­ரத்­தையும் சட்ட வரம்­புக்குள் கொண்­டு­வர வேண்­டி­ய­தும காலத்தின் தேவை­யாகும்.

எமது நாட்டின் ஹஜ் ஏற்­பா­டு­களின் போது கடந்த காலங்­களில் பாரிய சவால்கள் ஏற்­பட்­டமை அனை­வரும் அறிந்­த­வி­ட­யமே. இலங்­கைக்கு குறிப்­பிட்­ட­ளவு ஹஜ் கோட்டா கிடைப்­பதால் அக்­கோட்­டாவின் எண்­ணிக்­கையை அதி­க­ளவில் பகிர்ந்து கொள்­வ­தற்கு ஹஜ் முக­வர்கள் அமைச்­ச­ரு­டனும் அரச ஹஜ் குழு­வி­ன­ரு­டனும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­து­டனும் முரண்­பட்­டுக்­கொண்­டனர். இதற்­காக நீதி­மன்றப் படி­க­ளிலும் ஏறி­னார்கள். இவ்­வ­ரு­டமும் மேல­தி­க­மாக 500 கோட்ட கிடைக்கப் பெறும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் குறித்த கோட்­டாக்கள் என்ன அடிப்­ப­டையில், யாருக்கு விநி­யோ­கிக்­கப்­படும் எனும் கேள்வி எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

என­வேதான் இவ்­வா­றான சந்­தேக நிலை­மை­யினைத் தவிர்ப்­ப­தற்கும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைக் கரு­தி­யுமே ஹஜ் சட்­ட­மூ­ல­மொன்றின் தேவை உண­ரப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் அரச ஹஜ் குழு­வி­னரால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சட்ட வரைபில் அடங்­கி­யுள்ள விட­யங்­களை மீளாய்வு செய்து தேவை­யான விட­யங்­களை உள்­வாங்கிக் கொள்­வ­தற்­காக சில பெப்­ர­வரி மாதம் கொழும்பில் மாநா­டொன்று நடத்­தப்­பட்­டது. ஹஜ் சட்­ட­வ­ரை­பினை மீளாய்வு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவே இம்­மா­நாட்­டினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இதில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ, இஸ்­லா­மிய இயக்­கங்கள், தரீக்­காக்கள், ஹஜ் முகவர் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர்.
ஹஜ் சட்ட வரைபில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் வெளி­யி­டப்­பட்­டன. அரச ஹஜ் குழு உறுப்­பி­னர்­களின் நிய­மனம் அமைச்­ச­ரினால் வழங்­கப்­படும் என்று வரைபில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­விக்கப் பட்­டது. ஹஜ் குழு சுயா­தீ­ன­மா­கவே இயங்­க­வேண்டும். அமைச்­ச­ரினால் அந்­நி­ய­மனம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது.

ஹஜ் கணக்கில் வைப்­பி­லி­டப்­படும் பணம் ஏனைய தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. கடத்தல் நட­வ­டிக்­கை­ளிலும் ஊழல்­க­ளிலும் ஈடு­படும் ஹஜ் முக­வர்­களின் அனு­ம­திப்­பத்­திரம் ரத்துச் செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டது. அத்­துடன் ஹஜ் சட்ட வரைபில் பல திருத்­தங்­களைச் செய்ய வேண்டும் என்று ஹஜ் முக­வர்கள் சங்­கங்கள் வலி­யு­றுத்­தின.

அந்த வகையில் சகல தரப்­பி­னதும் ஆலோ­ச­னைகள் மற்றும் கோரிக்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஹஜ் சட்­ட­வ­ரைபு பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஏற்­க­னவே ஹலால் விவ­கா­ரத்தை முறை­யாக கையா­ளா­ததன் கார­ண­மாக தேவை­யற்ற விமர்­ச­னங்­களைச் சந்­திக்க வேண்டி வந்­தது. அதே­போன்­ற­தொரு நிலை ஹஜ் ஏற்­பா­டுகள் விட­யத்­திலும் வந்­து­விடக் கூடாது. இன­வா­திகள் தேவை­யற்ற விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னராக ஹஜ் விவகாரத்தை ஒழுங்குக்குள் கொண்டுவருவதே புத்திசாலித்தனமானதாகும். சில வருடங்களுக்கு முன்னர் ஹஜ் விவகாரத்தில் பொது பல சேனாவின் தயவை நாடிச் சென்ற சில முகவர்கள், இம்முறையும் அவ்வாறான காட்டிக் கொடுப்புகளைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
எனவேதான் ஹஜ் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.