நஷ்டஈடுகளை விரைவுபடுத்த இலங்கை – சவூதி உடன்படிக்கை

0 1,089

சவூதி அரே­பி­யாவில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் வாகன விபத்­து­களில் மற்றும் தொழில் புரியும் இடங்­களில் விபத்து சம்­ப­வங்­களில் உயிர் துறந்தால் அவர்­க­ளது குடும்­பத்­த­வர்கள் விரைவில் உரிய நஷ்ட ஈடு­களைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் அந்­நாட்டின் சட்ட நிறு­வனம் ஒன்­றுடன் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளது.
இந்த உடன்­ப­டிக்­கை­யின்­படி திடீர் வாகன விபத்­து­களில் மற்றும் வேலைத் தளங்­களில் பணி­பு­ரியும் போது மூன்றாம் தரப்­பு­களின் கவ­ன­யீ­னத்தால் ஏற்­படும் விபத்­துக்­களில் எவரும் உயிர் துறந்தால் அவர்­களின் பரா­ம­ரிப்பின் கீழ் இருக்கும் குடும்­பத்­த­வர்­க­ளுக்கு நஷ்ட ஈடு கோரி இடம்­பெறும் வழக்கு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இய­லு­மாக இருக்கும் என வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும், சவூதி அரே­பி­யாவில் விசா­ரிக்­கப்­படும் கொலை வழக்­கு­களில் இரத்த நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும் நிலைமை இலங்­கை­யர்­க­ளுக்கு ஏற்­பட்டால் அவ்­வா­றான வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும் இந்த உடன்­ப­டிக்கை உத­வி­பு­ரி­வ­தாக அமையும்.

இந்த உடன்­ப­டிக்­கையின் கீழ் பாதிக்­கப்­படும் இலங்­கை­யர்கள் தொடர்­பி­லான வழக்­கு­களின் தாம­தத்­தினை தவிர்க்க முடி­வ­துடன் நீதியை விரைவில் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தா­கவும் இருக்கும்.

இந்த உடன்­ப­டிக்­கையில் இலங்­கையின் சார்பில் ஜித்­தாவில் இலங்கை கொன்சிபுலர் நாயகம் அப்துல் வாஹிட் அப்துல் சலாமும், சவூதி அரேபிய சட்ட நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் கையொப்பமிட்டனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.