‘வஹா­ப்’ அடிப்படைவாதத்திற்கு எதிராக நுகேகொடையில் பேரணி

0 811

வஹாப் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக மக்கள் பேர­ணி­யொன்று இன்று நுகே­கொடை ஆனந்த சம­ரகோன் திறந்த வெளி­ய­ரங்கில் பிற்­பகல் 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. மக்கள் பேர­ணிக்­கான ஏற்­பா­டு­களை பேரா­சி­ரியர் இந்து தம்­ம­ர­தன தேரர் மேற்­கொண்­டுள்ளார்.

இலங்­கையில் வஹா­பிசம் போஷிக்­கப்­ப­டு­வ­தற்கும், அடிப்­ப­டை­வா­தத்­தையும், வஹா­பி­சத்­தையும் ஆத­ரிக்கும், பாது­காக்கும் அமைச்­சர்­க­ளுக்கும், அமெ­ரிக்­காவின் கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் அர­சாங்­கத்­துக்கும் எதி­ராக இந்த மக்கள் பேரணி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏற்­பாட்­டாளர் தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.

இம்­மக்கள் பேர­ணியில் பேரா­சி­ரியர் இந்து தம்­ம­ர­தன, பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ, கலா­நிதி மாது­ரு­ஓயே தம்­மிஸ்­ஸர தேரர் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ஜயன்த சமரவீர உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.