ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் உருவான அசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் மேலும் ஐக்கியமும் ஏற்பட ஐவேளைத் தொழுகையிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருகின்றோம்.
இதனை தொடர்ந்தும் சுருக்கமாக ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழு செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம் இல்யாஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அல்லாஹுதஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன்பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.
எனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்களைச் செய்து அவன் பக்கம் நெருங்குவதுடன், இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும், சாந்தியுடனும் மேலும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்குப் பிரார்த்தனையும் செய்வோம்.
அத்தோடு ஓதிவரும் குனூத் அந்நாஸிலாவில் பாவமன்னிப்புக் கோருதலுடன் பின்வரும் துஆக்களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli