சஹ்ரானின் போதனைகளில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைதானவருக்கு பிணை

0 610

தடை­செய்­யப்­பட்ட சஹ்ரான் ஹாஷிமின் தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்­டா­ரென்ற  குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட  இளை­ஞனை  கல்­முனை நீதிவான் நீதி­மன்றம்  நிபந்­த­னை­க­ளுடன் பிணையில் விடு­தலை செய்­தது.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட  மரு­த­மு­னையை சேர்ந்த ஏ.எச்.நில்ஷாத் எனும் நபர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இவ­ரது கைது விட­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பொலிஸ் நட­வ­டிக்­கையை ஆட்­சே­பித்து தாக்கல் செய்­யப்­பட மனு நேற்று கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ.என்.றிஸ்வான் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது குறித்த நபர் மீதான வழக்கை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் முன்­னெ­டுப்­ப­தற்­கான கார­ண­மேதும் இல்­லை­யென பொலிஸ் தரப்பில் அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இவரை பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி இவர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் வாதிட்­டனர்.

இவற்றை செவி­ம­டுத்த நீதிவான் சந்­தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரண்டு சரீரப் பிணையில் விடு­விக்க உத்­த­ர­விட்­ட­துடன், இவ்­வ­ழக்கு முடி­வுறும் வரை ஒவ்­வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் கையொப்­ப­மிட வேண்­டு­மென சந்­தேக நபரைப் பணித்­த­துடன் வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளுக்கும் நீதிவான் தடை­யுத்­த­ரவு பிறப்பித்தார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டது.

பாறுக் ஷிஹான்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.