கல்முனை நீதிமன்றில் சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட மூவர் ஆஜர்

0 658

சாய்ந்­த­ம­ருது பொலி­வே­ரியன் சுனாமி வீட்­டுத்­திட்டப் பிர­தே­சத்தில் சஹ்ரான் ஹாஷிமின் உற­வி­னர்கள் உள்­ளிட்ட குழு­வினர் மேற்­கொண்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்­பி­லான மரண விசா­ர­ணைகள் நேற்று புதன்­கி­ழமை கல்­முனை நீதிவான் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றன.

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா, இந்­நீ­தி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டு, விசா­ரிக்­கப்­பட்­டதன் தொடர்ச்­சி­யா­கவே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த இரண்டாம் கட்ட விசா­ர­ணை­க­ளுக்­காக சஹ்ரான் ஹாஷிமின் சகோ­தரி உள்­ளிட்ட மூவர், மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லை­யி­லி­ருந்து இர­க­சியப் பொலி­ஸா­ரினால் கல்­முனை நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டி­ருந்­தனர். இதனை முன்­னிட்டு கல்­முனை நீதி­மன்ற வளா­கத்தின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ.என்.றிஸ்வான் முன்­னி­லையில், மூடிய அறை­யான நீதிவான் சமா­தான அறையில் இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இதன்­போது சஹ்ரான் ஹாஷிமின் சகோ­த­ரி­யான மத­னியா, இவரின் கணவர் முஹம்மட் நியாஸ், சாய்ந்­த­ம­ருது குண்டுத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த எம்.எம்.நியாஸ் என்­ப­வரின் மனை­வி­யான அஸ்­மியா ஆகியோர் தனித்­த­னி­யாக விசா­ரிக்­கப்­பட்­டனர். இந்த விசா­ர­ணை­களில் உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்­பி­லான பல்­வே­று­பட்ட விப­ரங்கள் இவர்­க­ளி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

சாய்ந்­த­ம­ருது குண்டுத் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பி­லான மரண விசா­ர­ணைகள், எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திக­திக்கு நீதி­வானால் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது பொலி­வே­ரியன் சுனாமி வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சஹ்ரான் ஹாஷிமின் பெற்றோர், இரண்டு சகோதரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அஸ்லம் எஸ்.மௌலானா, பாறூக் ஷிஹான்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.