வியாழன் முதல் ஞாயிறு வரை நோன்பு நோற்று பிரார்த்தியுங்கள்

ஜம்இய்யத்துல் உலமா கண்டி கிளை கோரிக்கை

0 628

முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான உண்­மை­யற்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­ப­தற்­காக பொது­பல சேனா அமைப்பு எதிர்­வரும் 07 ஆந் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை ‘சிவ்ஹெல மஹா சமு­லுவ’ என்ற தொனிப்­பொ­ருளில் மகா­நாடு ஒன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளதால் சமூ­கத்தின் பாது­காப்­பிற்­கா­கவும் நாட்டின் சமா­தா­னத்­திற்­கா­கவும் முஸ்­லிம்கள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் எதிர்­வரும் 07 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வரை நோன்­பு­நோற்று பிரார்த்­த­னையில் ஈடு­ப­டு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை கண்டி மாவட்­டக்­கிளை கோரிக்கை விடுத்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை கண்­டிக்­கி­ளையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.அப்துல் கப்பார் விடுத்­துள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே இவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்ள தாவது; ‘ எதிர்­வரும் 07ஆந்­தி­கதி கண்டி நகரில் ‘சிவ்ஹெல மஹா சமு­லுவ’ என்ற தொனிப்­பொ­ருளில் மகா­நாடு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அக்­கூட்­டத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ரான உண்­மை­யற்ற பல குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட வுள்­ள­தா­கவும் எமது உரி­மை­களைப் பெரு­ம­ளவில் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாவும் அறி­ய­மு­டி­கி­றது.

இவ்­வா­றான திட்­டங்­களை முறி­ய­டிப்­ப­தற்கு அல்­லாஹ்வின் உத­வி­யைத்­த­விர வேறு­எ­துவும் கிடை­யாது. எனவே நாம் அனை­வரும் அதி­க­மாக துஆ, இஸ்­திஃபார் போன்ற அமல்­களில் ஈடு­ப­டு­வ­துடன் எமக்கு வரக்­கூ­டிய சோத­னை­களைத் தடுப்­ப­தற்கு ஸத­காக்கள் வழங்­கு­மாறும் இன்று முதல் 07 ஆந் திகதி வரை நோன்பு நோற்று சமூ­கத்தின் பாது­காப்­பிற்­கா­கவும், நாட்டின் சமா­தா­னத்­திற்­கா­கவும் பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­மாறும் வேண்டுகிறோம்.
அத்தோடு 07 ஆந் திகதி அத்தியாவசிய தேவையன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் கண்டி நகர் ஊடாக பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்குமாறும் வேண்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.