இவ்வருடம் ஹஜ் விசாக்கள் இலங்கையிலுள்ள சவூதி தூதுவராலயத்தின் மூலம் ஹஜ் பயணிகளின் கடவுச் சீட்டுக்களில் பதிவு செய்யப்படாது புதிய முறையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. முதன்முறையாக இந்த நடைமுறை இலங்கையில் அமுலுக்கு வரவுள்ளது.
ஹஜ் யாத்திரிகர்களின் ஹஜ் விசாக்கள் கடவுச்சீட்டுக்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒன்லைன் ஊடாக பதிக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி.எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறையின் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளவர்களின் கடவுச்சீட்டுக்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் என்பன பயணத்துக்கு ஒருவார காலத்துக்கு முன்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிச்செல்லும் முதல் விமானம் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கையிலிருந்து செல்லவுள்ளது. எனவே ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் தங்களது பயணத்துக்கு ஒருவார காலத்துக்கு முன்பே தங்களது கடவுச் சீட்டுகளையும், ஆவணங்களையும் ஹஜ் முகவர்கள் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குக் கையளிக்க வேண்டும்.
vidivelli