முஸ்லிம் அமைச்­சர்கள் பத­வி­து­றந்து ஒரு மாதம்

பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு இல்லை

0 788

முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­ச­ரொ­ரு­வரும் பதவி துறந்து இன்­றுடன் ஒரு­மாதம் நிறை­வ­டை­கின்­றது. முஸ்லிம் சமூகம் எதிர்­கொள்ளும் சம­கால பிரச்­சி­னை­யுடன் தொடர்­பு­டைய 10 அம்சக் கோரிக்கை முன்­வைத்து தாம் பதவி துறப்­ப­தாகக் கூறி­யி­ருந்­த­நி­லையில், பிரச்­சி­னை­க­ளுக்கு இது­வரை முழு­மை­யான தீர்­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், ரிஷாத் பதி­யுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள பத­வி­யி­லி­ருந்தும் எச்.எம்.எம்.ஹரீஸ், அலி­சாஹிர் மௌலானா, அமீர் அலி மற்றும் பைஸல் காஸிம் ஆகியோர் இரா­ஜாங்க அமைச்சர் பத­வி­யி­லி­ருந்தும் அப்­துல்லாஹ் மஹ்ரூப் பிர­தி­ய­மைச்சர் பத­வி­ய­மைச்சர் பத­வி­யி­லி­ருந்தும் வில­கி­யி­ருந்­தனர். எனினும் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் பின்னர் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­றுக்­கொண்­டனர்.

பதவி வில­க­லின்­போது 10 அம்சக் கோரிக்­கையை அர­சாங்­கத்­திடம் முன்­வைத்து பத­வி­து­றந்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டது.

ஏப்ரல் 21 பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் சிறு குற்­றங்­க­ளுக்­காக முஸ்­லிம்கள் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த அப்­பாவி முஸ்­லிம்கள் விடு­விக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரப்­பட்­டி­ருந்­தது. அந்­த­வ­கையில் கடந்த இரு வாரங்­க­ளாக பலர் விடு­வக்­கப்­பட்­டனர். அத்­துடன் தொடர்ந்தும் விடு­விப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன. இதே­வேளை, அரச நிறு­வ­னங்­களில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் சர்ச்­சைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் வெளி­யிட்ட சுற்­று­நி­ருபம் மேலும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் முஸ்லிம் எம்.பி.களின் அழுத்தம் கார­ண­மாக குறித்த சுற்­று­நி­ருபம் திருத்­தப்­பட்டு முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் அபாயா அணிய முடி­யு­மான வகையில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.

இது­த­விர முஸ்லிம் பிர­தே­சங்­களில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­களில் தொடர்ந்தும் மந்த நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன், குறித்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.