தெஹிவளை வர்த்தகர் கொலை சந்தேக நபர் சனியன்று கைது

0 807

தெஹி­வளை பிர­தே­சத்தில் கடந்த வாரம் வர்த்­தக நிலையம் ஒன்­றினுள் நுழைந்து அதன் உரி­மை­யா­ளரை குத்திப் படு­கொலை செய்த சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கல்­கிசை பிர­தே­சத்­தி­லுள்ள ஹுலு­ட­கொட வீதியில் கட்­டிடம் ஒன்றில் மறைந்­தி­ருந்த சந்­தேக நபரை கடந்த சனிக்­கி­ழமை கைது செய்­த­தாக தெஹி­வளை பொலிசார் தெரி­வித்­தனர். குறித்த சந்­தேக நபர் களுத்­துறை, பயா­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த போதைக்கு அடி­மை­யா­னவர் என தெரிய வந்­துள்­ளது. சந்­தேக நபர் மறைந்­தி­ருந்த கட்­டி­டத்­தினுள் தேடுதல் மேற்­கொண்­ட­தை­ய­டுத்து இரத்தம் தோய்ந்த ஆடையும் கொலைக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்­தி­யொன்றும் பொலி­சாரால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

தெஹி­வளை காலி வீதியில் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் ஒன்­றுக்குள் அதன் உரி­மை­யா­ள­ரான 63 வய­து­டைய முஹம்­மது சுபியான் எனும் வர்த்­தகர் கடந்த புதன்­கி­ழமை கத்­தியால் குத்தி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.