அஸ்கிரியபீட மகாநாயக்க தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

0 838

முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்­டுக்­கொண்­ட­துடன், கல்லால் அடித்துக் கொலை செய்­வதை ஏற்­றுக்­கொள்­கிறேன் எனக் குறிப்­பிட்ட அஸ்­கி­ரிய பீடத்தின் மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஸ்ரீ ஞான­ரத்ன தேரரின் கருத்து தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் கோரி­யி­ருக்­கி­றது.

வர­கா­கொட ஞான­ரத்ன தேரர் முன்­வைத்த கருத்து தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன தீபால் விக்­ர­ம­ரத்­ன­விற்கு மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அக்­க­டி­தத்தில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

கடந்த சில வரு­ட­கா­ல­மாக சிறு­பான்­மை­யின மக்­களை இலக்­கு­வைத்து மத ரீதி­யி­லான வன்­முறைச் சம்­ப­வங்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு மற்றும் வன்­முறை செயற்­பா­டுகள் வெகு­வாக அதி­க­ரித்­தன. இத்­த­கைய வன்­முறைச் சம்­ப­வங்­க­ளாலும், சகிப்­புத்­தன்மை இன்­மை­யாலும் எமது நாட்டின் ஸ்திரத்­தன்மை கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கடந்த மாதம் அஸ்­கி­ரி­ய­பீட மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ரத்ன தேரர் வெளி­யிட்ட கருத்து இந்த வன்­முறை எண்­ணங்­களை மேலும் தூண்டும் வகையில் அமைந்­தி­ருந்­தது. ‘முஸ்­லிம்­களின் கடைகள், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடை­களில் உண­வ­ருந்த வேண்டாம். அவர்கள் எம்­மு­டைய சமூ­கத்தை அழிப்­பதை நோக்­காகக் கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள் என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது. ஆகையால் பௌத்­தர்கள் கவ­ன­மாக பாது­காப்­புடன் செயற்­பட வேண்டும். மேலும் கருக்­க­லைப்பு செய்த வைத்­தி­யரை கல்லால் அடித்­துக்­கொல்ல வேண்டும் என்று கூறு­கி­றார்கள். நான் அவ்­வாறு கூற­மாட்டேன், ஆனால் அதைத்தான் செய்ய வேண்டும்’ என்று ஞான­ரத்ன தேரர் கூறி­யி­ருந்தார்.

தேரரின் இக்­க­ருத்து முஸ்லிம் சமூ­கத்­த­வரை நேர­டி­யாக இலக்கு வைப்­ப­தாக அமைந்­தி­ருப்­ப­துடன், தற்­போது நிலவும் சூழ்­நி­லையில் மேலும் வன்­மு­றையைத் தூண்டும் வகை­யிலும் அமைந்­துள்­ளது. எனவே கடந்த இரு­மாத காலத்­திற்குள் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களைக் கருத்­திற்­கொண்டு, தேரரின் இக்­க­ருத்துத் தொடர்பில் விரைந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும், உரிய சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கு­மான அவசியம் ஏற்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமானது. அச்சத்தினாலோ அல்லது பக்கச்சார்பான நிலைப்பாட்டினாலோ கட்டப்படுத்தப்படாமல் அனைவருக்கும் பொதுவானதாக சட்டம் செயற்பட வேண்டும். எனவே இவ்விடயம் குறித்து கவனத்திற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.