போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்

0 693

போதைப் பொருள்­க­ளற்ற ஒரு நாடாக இலங்­கையை மாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார். அதற்­கான நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் முன்­னெ­டுத்து வரு­கிறார்.

போதைப் பொருள் கடத்­தற்­கா­ரர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட்­டாலே போதைப் பொருளை இலங்­கை­யி­லி­ருந்தும் துவம்சம் செய்­யலாம் என்­பதே ஜனா­தி­ப­தியின் அசை­யாத நம்­பிக்­கை­யாகும். இத­ன­டிப்­ப­டையில் சிறையில் இருக்கும் போதைப் பொரு­ளுடன் தொடர்­பு­பட்ட மரண தண்­டனைக் கைதி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது.

முதற்­கட்­ட­மாக போதைப் பொரு­ளுடன் தொடர்­பு­பட்ட 4 கைதி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது. மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­கான ஆவ­ணங்­களில் தான், கையொப்­ப­மிட்டு விட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

43 வரு­டங்­களின் பின்பு மரண தண்­டனை இலங்­கையில் அமு­லுக்கு வர­வுள்­ளது. பாலியல் வல்­லு­றவு, போதைப் பொருள் கடத்தல், கொலை ஆகிய குற்றச் செயல்­க­ளுக்கு இலங்­கையில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டு வந்­தது. 1976 ஆம் ஆண்­டி­லி­ருந்து மரண தண்­டனை நிறை­வேற்றம் நிறுத்தி வைக்­கப்­பட்­டது. நீதி­மன்­றங்­க­ளினால் மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்ட குற்­ற­வா­ளிகள் சிறை­வா­சமே அனு­ப­வித்து வந்­தனர்.

மரண தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­கான ஆரம்ப நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. மரண தண்­டனை கைதி­களைத் தூக்­கி­லி­டு­வ­தற்கு இருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவர்­க­ளுக்குப் பயிற்­சிகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிறைச்­சாலை தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது. அவர்­க­ளுக்­கான வைத்­திய பரி­சோ­த­னையும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது.
மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள போதைப் பொருள் கடத்­த­லுடன் தொடர்­புற்ற 20 கைதி­களின் பெயர் பட்­டியல் சட்­டமா அதி­ப­ரினால் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. 20 பேரில் முதற்­கட்­ட­மாக நால்வர் தூக்­கி­லி­டப்­பட்டு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் மரண தண்­டனை நிறை­வேற்­று­வ­தற்கு எதிர்ப்­பு­க­ளும்­அ­தி­க­ரித்து வரு­கின்­றன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை சமூக செயற்­பாட்­டா­ளர்கள் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு முன்னால் ஆர்ப்­பாட்டம் ஒன்­றினை முன்­னெ­டுத்­தார்கள். ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்­துக்கு பிரிட்டன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடு­களும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.
“மரண தண்­டனை என்­பது மிகவும் கொடூ­ர­மான மனிதத் தன்­மை­யற்ற இழி­வான ஒரு தண்­டனை. எந்த சூழ­லிலும் ஐரோப்­பிய ஒன்­றியம் இதனை எதிர்க்கும்” என ஐரோப்­பிய ஒன்­றியம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

“போதைப் பொருள் குற்­றத்­துக்கு மரண தண்­டனை என்­பதை சட்ட ரீதி­யாக ஏற்றுக் கொள்ள முடி­யாது” என அம்­னெஸ்டி இன்­டர்­நே­ஷனல் தெரி­வித்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்­போரும் மரண தண்­ட­னையை ஆத­ரிக்க மாட்டோம் எனத் தெரி­வித்­துள்­ளார்கள்.

“அர­சி­ய­ல­மைப்பில் மரண தண்­டனை தொடர்­பான சட்ட ஏற்­பா­டுகள் காணப்­பட்­டாலும் எந்தத் தலை­வர்­களும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. 2016 இல் ஐக்­கிய நாடுகள் சபை மரண தண்­ட­னையை தடை செய்­வ­தற்­கான யோச­னையை முன்­வைத்த போது அதற்கு இலங்­கையும் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. அந்த யோச­னைக்கு நானும், மைத்­தி­ரியும் அன்று ஆத­ர­வ­ளித்­தி­ருந்தோம்” என பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பில் மரண தண்­டனை குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ஜே.ஆர். ஜய­வர்­தன, ஆர். பிரே­ம­தாச, டீ.பி. விஜே­துங்க, சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் மரண தண்­ட­னையை நிறை­வேற்ற அங்­கீ­காரம் வழங்­க­வில்லை.

ஐக்­கிய தேசிய கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்­பன மரண தண்­ட­னையை விரும்­பாத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மரண தண்­டனை நிறை­வேற்­றத்தில் உறு­தி­யாக இருக்­கி­றது. “ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தில் மாற்றுக் கருத்­துக்கு வாய்ப்­பில்லை. இத்­தீர்­மா­னத்தால் நாட்­டுக்கு தீமைகள் ஏற்­ப­டாது. ஐனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­வர்கள் போதைப்பொருளை ஒழிக்கும் பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார்.

போதைப் பொருள் கார­ண­மாக நாடு பல்­வேறு சீர­ழி­வு­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. எமது இளம் சந்­த­தி­யினர் போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யாகி பல்­வேறு குற்றச் செயல்­க­ளுக்கு கார­ண­மாக உள்­ளனர். போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களுக்கு சவூதி அரேபியா போன்ற பல முஸ்லிம் நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் அந்நாடுகள் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தியுள்ளன. இலங்கையிலும் போதைப் பொருட்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சவால்கள் ஏற்பட்டால் போதைப்பொருள் குற்றவாளிகளினதும் அவர்களது குடும்பத்தினரதும் சொத்துகளை அரசுடமையாக்கி போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு அந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.