உலமா சபையின் மத்திய சபை கூட்டம் 13 ஆம் திகதி

0 718

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் மத்­திய சபைக் கூட்டம் எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 10.00 மணிக்கு தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர்

அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இக்­கூட்­டத்தில் 25 மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை­யி­னது கிளை­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

மத்­திய சபைக் கூட்­டத்தின் இரண்­டா­வது அமர்வில் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபையின் எதிர்­வரும் மூன்று வரு­டங்­க­ளுக்­கான நிர்­வா­கிகள் தெரிவு இடம்­பெ­ற­வுள்­ளது. உலமா சபையின் நிர்­வா­கிகள் தெரிவு மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை இடம்­பெ­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மத்­திய சபைக் கூட்­டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரை யாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.