மஹிந்தவின் வழியில் செல்ல ஜனாதிபதி முயற்சி

19 ஐ நீக்க இடமளியோம் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

0 613

மஹிந்த ராஜபக் ஷவின் வழியில் செல்­வ­தற்கே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  முயற்­சிக்­கிறார். அதன் கார­ண­மா­கவே 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நீக்கும் தீர்­மா­னத்­துக்கு வந்­துள்ளார். தொடர் முரண்­பா­டு­க­ளுடன் ஜனா­தி­ப­தி­யுடன் ஆட்­சியை முன்­னெ­டுக்க முடி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­கேற்ப அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­களை மாற்­றி­ய­மைக்க முடி­யாது. 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நீக்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அலரி மாளி­கையில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இவ்­வாறு குறிப்­பிட்ட அவர் மேலும் கூறி­ய­தா­வது,

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம், நாட்டில் பல்­வேறு மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­திய திருத்­த­மாகும். இத­னூ­டாக சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் உள்­ளிட்ட பல்­வே­று­பட்ட ஜன­நா­யக உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொண்­டுள்ளோம். இவ்­வா­றி­ருக்­கையில் இந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நீக்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி இட­ம­ளிக்­காது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் தற்­போது மஹிந்­தவின் வழியில் பய­ணிக்­கவே முயற்­சிக்­கிறார். அதன் கார­ண­மா­கவே 19 ஆவது அர­சி­ய­ல­­மைப்பை நீக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டுக்கு ஜனா­தி­பதி வந்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் தனிப்­பட்ட செயற்­பா­டு­க­ளுக்­காக இந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நீக்க இட­ம­ளிக்க முடி­யாது. கடந்த வருட இறு­தியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி அமைத்து அர­சாங்­கத்­துக்கு எதி­ராக சூழ்ச்சி செய்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்­தது முதல் மூன்று வருட காலப்­ப­கு­தி­களில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அனைத்தும் இரு­த­ரப்பு இணக்­கப்­பாட்­டு­ட­னேயே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன.

ஆனால் அவர் எதி­ர­ணி­யுடன் இணைந்து செயற்­பட ஆரம்­பித்­தது முதல் அர­சாங்­கத்­து­ட­னான முரண்­பா­டு­களும் அதி­க­ரிக்க ஆரம்­பித்­து­விட்­டன. எனவே, தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஆட்சி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாது.

2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தாக தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­ற மைத்­தி­ரி­பால சிறி­சேன தனக்­கு­ரிய நிறை­வேற்று அதி­கா­ரங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பாரிய முயற்­சி­களை எடுத்தார். கடந்த தேர்தல் மேடை­களில், எதிர்­கா­லத்தில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை இருக்­காது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாக கூறி ஆட்­சிக்கு வந்த எந்த ஜனா­தி­ப­தியும் அதனை நீக்­க­வில்லை. அன்று மக்­களின் தேவை­களை அறிந்தே இது­போன்ற வாக்­கு­று­தி­களை வழங்­கினர். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அன்று மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறா­கவே செயற்­ப­டு­கிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதுள்ள அமைச்சரவையுடனான இந்த அரசாங்கத்தின் மீது ஜனாதிபதிக்கு விருப்பமில்லை.

அதன் காரணமாகவே கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக 19 ஆவது அரசியலமைப்பை நீக்க வேண்டுமென்று கோரி தற்போது அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.