மூன்றாம் தரப்புடன் இணைந்து முஸ்லிம்களை காயப்படுத்தோம்

கல்முனை விவகாரம் குறித்து ஸ்ரீதரன் எம்.பி. தெரிவிப்பு

0 826

முஸ்லிம் மக்கள் காயப்­பட்­டி­ருக்கும் நிலையில் கல்­முனை பிர­தேச செய­லக விவ­கா­ரத்தில் மூன்றாம் தரப்­பி­னரை இணைத்­துக்­கொண்டு மேலும் காயப்­ப­டுத்த விரும்­ப­மாட்டோம். அத்­துடன் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்­வு­காண முன்­வ­ர­வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பினர் ஸ்ரீதரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாத­கா­லத்­துக்கு நீடித்­துக்­கொள்ளும் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உரை­யாற்­று­கையில், ஒழுங்கு பிரச்­சினை ஒன்றை முன்­வைத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

ஹரீஸ் எம்.பி. தெரி­விக்­கையில்,கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தொடர்­பாக எழுந்­தி­ருக்கும் பிரச்­சி­னையை எல்லை நிர்­ணயம் மேற்­கொண்டு தீர்த்­துக்­கொள்ள இணக்­கப்­பாடு எட்­டப்­பட்ட நிலையில், அங்கு பெரும்­பான்மை இன மத­கு­ரு­மார்­களை இணைத்­துக்­கொண்டு உண்­ணா­வி­ர­த­மி­ருந்து அதனை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். சர்­வ­தேச நாடுகள் மற்றும் இந்­தி­யாவின் வற்­பு­றுத்­த­லினால் அன்று இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது.

அத­னால்தான் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்­டன. அதனால் பல ஆண்­டு­காலம் முஸ்லிம் மக்கள் பாதிக்­கப்­பட்டு வந்­தனர். பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட நீதி­மன்ற நட­வ­டிக்­கையில் வடக்கு கிழக்கு இணைப்பு சட்­ட­வி­ரோ­த­மெனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு பிரிக்­கப்­பட்­டது.

அன்று விடு­த­லைப்­பு­லி­களின் யுத்தம் கார­ண­மாக இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­மு­டி­யாத நிலையே முஸ்லிம் மக்­க­ளுக்கு இருந்­தது. தற்­போது கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் விவ­கா­ரத்தை முஸ்­லிம்கள் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு முகம்­கொ­டுத்து பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையை பயன்­ப­டுத்­திக்­கொண்டு தெற்கில் இருக்கும் பெரும்­பான்மை இன மத­கு­ரு­மார்­களை இணைத்­துக்­கொண்டு இதனை சாதித்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

இது மிகவும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். என்­றாலும் எதிர்­கா­லத்தில் இந்த விட­யத்­துக்கு எதி­ராக வழக்கு தொடுக்­கப்­பட்டால் கல்­முனை விவ­கா­ரமும் சட்­ட­வி­ரோதம் என்ற தீர்ப்பே கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என்றார்.

இதன்­போது குறுக்­கிட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உறுப்­பினர் ஸ்ரீதரன் எம்.பி., வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் விடு­த­லைப்­பு­லி­களை சம்­பந்­தப்­ப­டுத்­து­வது தவ­றாகும். நிர்­வாக விட­யத்தில் அவர்கள் ஒரு­போதும் சம்­பந்­தப்­ப­ட­வில்லை.

அத்­துடன் கல்­முனை விவ­கா­ரத்தில் தமிழ், முஸ்லிம் மக்­களின் உறவு பாதிக்­கா­த­வ­கையில் நீங்கள் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.
அத்­துடன் இந்த விவ­கா­ரத்தை நாங்கள் பகி­ரங்­க­மாக விவா­தித்­துக்­கொள்­ளாமல் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மான தீர்­வுக்­கு­வ­ர­வேண்டும்.
மேலும், முஸ்லிம் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் இந்தக் காலத்தில் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை இணைத்­துக்­கொண்டு மேலும் காயப்­ப­டுத்த நாங்கள் விரும்­ப­மாட்டோம்.

அந்த செயலை அனு­ம­திக்­கவும் மாட்டோம் என்றார். இதன்­போது ஹரீஸ் எம்.பி. அதற்கு பதிலளிக்கும்வகையில் தெரிவிக்கையில், மூன்றாம் சக்தி இதில் தலையிடாமல் எங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளத் தயார்.

அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா முன்வரவேண்டும். இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்றார்.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.