கட்டுப்பொத்த கடை தீக்கிரை : நஷ்டஈடு கோருவதில் தொடர்ந்தும் சிரமங்கள்

இரசாயன பகுப்பாய்வு , பொலிஸ் அறிக்கை தாமதம் காரணம்

0 745

கடந்த மாதம் சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ, கட்­டுப்­பொத்த நகரில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான இரண்டு கடை­க­ளி­னது இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை மற்றும் பொலிஸ் அறிக்கை இன்னும் தயா­ரா­கா­மை­யினால் நஷ்­ட­ஈட்­டினைக் கோரு­வதில் தான் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக கடை­களின் உரி­மை­யாளர் ஏ.எச்.எம்.சிபாய் தெரி­வித்தார். கட்­டு­பொத்த நகரில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று குறிப்­பிட்ட இரு கடை­களே இருந்­தன. இந்தக் கடை­களின் உரி­மை­யாரே கட்­டி­டத்­துக்கும் உரி­மை­யா­ள­ராவார். இந்தக் கடை­க­ளுக்கு கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இரவு தீ வைக்­கப்­பட்­ட­தா­கவும் இதனால் தனக்கு 75 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் உரி­மை­யாளர் தெரி­விக்­கிறார்.

அண்­மையில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளின்­போது சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ கட்­டுப்­பொத்த பகு­தி­களில் முஸ்­லிம்­களின் சொத்­துகள் அழிக்­கப்­பட்­டன. அதற்குப் பின்பே கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி இந்தக் கடை­க­ளுக்குத் தீ வைக்­கப்­பட்­டது. இந்த இரு கடை­க­ளிலும் வர்த்­தகம் செய்­வ­தற்கு அப்­ப­குதி மக்கள் ஏற்­க­னவே எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தனர். இக்­க­டை­களில் ஒன்று பென்சி சாமான்கள் அடங்­கி­ய­தா­கவும் அடுத்த கடை கொப்­பரா போன்ற கொள்­முதல் கடை­யா­கவும் இயங்­கி­வந்­தன. தனது தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட கடை­க­ளுக்­கான அறிக்­கையைக் கோரியபோது இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாக கடைகளின் உரிமையாளர் ஏ.எச்.எம். சிபாய் தெரிவிக்கிறார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.