மரண தண்டனைக்கு நாம் ஆதரவளியோம்

பிரதமர் ரணில் திட்டவட்டம்

0 607

ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­களில் உயிர்க் கொலை­க­ளுக்கு இடம் கிடை­யாது என்றும் எந்தக் கார­ணத்­துக்­கா­கவும் மர­ண­தண்­ட­னையை அமுல்­ப­டுத்த ஆத­ரவு வழங்க முடி­யா­தென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பில் மரண தண்­டனை தொடர்­பான சட்ட ஏற்­பா­டுகள் காணப்­பட்­டாலும் வர­லாற்றில் எந்த தலை­வர்­களும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. 2016 ஐக்­கிய நாடுகள் சபை மரண தண்­ட­னையை தடை­செய்­வ­தற்­கான யோச­னையை முன்­வைத்­த­போது அதற்கு இலங்­கையும் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. அந்த யோச­னைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் அன்று ஆத­ர­வ­ளித்­தி­ருந்தோம் எனவும் குறிப்­பிட்டார்.

மொன­ரா­கலை மாவட்­டத்தில் நீர் திட்­டத்தை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் இடம்­பெற்­றது. இந்த நீர்த்­திட்­டத்தை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வை அடுத்து ஒப்­பே­கொட பாட­சா­லைக்­கான புதிய கட்­டிடம், தெலிவ மகா வித்­தி­யா­லத்தின் புதிய கட்­டிடம், கதிர்­காமம் வர்த்­தக கட்­ட­டிடம் உள்­ளிட்ட இன்னும் சில கட்­டிட தொகு­தி­களை பித­ரமர் திறந்து வைத்தார்.

மாரி­அ­றாவ நீர் திட்­டத்தை ஆரம்­பித்து வைத்­ததன் பின்னர் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மக்கள் சந்­திப்பில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்ட பிர­தமர் ரணி­ல் விக்­ர­ம­சிங்க மேலும் கூறி­ய­தா­வது;

உயிர்க் கொலைகள் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­ன­வை­யாகும். ஆகவே மரண தண்­ட­னைக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு எங்­க­ளுக்கு எந்த தேவையும் கிடை­யாது. அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி , எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சி­க­ளுக்கும் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதில் விருப்­ப­மில்லை. இந்தப் பிரச்­சினை தொடர்­பாக முதலில் அமைச்­ச­ர­வை­யு­டனும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் சபா­நா­யகர் கரு­ஜய சூரி­ய­வி­டமும் கலந்­து­டை­யா­டு­வ­தற்கு நான் எதிர்­பார்க்­கிறேன்.

2016 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபை­யினால் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­து­வதை தடை செய்­வது தொடர்­பான யோச­னை­யொன்று முன்­வைக்­கப்­பட்­டது. இந்த யோச­னைக்கு இலங்கை அர­சாங்­கமும் ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது. அந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டின் ஜனா­தி­பதி என்ற வகையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் என்ற வகையில் நானும் கையொப்பம் இட்­டி­ருந்தோம்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அந்த யோச­னையை ஐக்­கிய நாடுகள் சபை மீளாய்வு செய்­தது. அந்த சந்­தர்ப்­பத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக் ஷ பிர­த­ம­ரா­கவும் இருந்­தனர்.

மேலும் அர­சி­ய­ல­மைப்பில் மரண தண்­டனை காணப்­பட்­டாலும் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தா­ம­லி­ருக்கத் தீர்­மா­னித்தார். அந்த தீர்­மா­னத்­துக்­க­மைய அவ­ருக்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­ப­தி­க­ளான ஆர். பிரே­ம­தாச, டீ.பீ.விஜே­துங்க, சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோரும் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­த­வில்லை.

வர­லாற்றில் ஆட்­சிக்கு வந்த எந்த அர­சாங்­கமும் முன்­னெ­டுக்­காத அபி­வி­ருத்திப் பணி­களை மொன­ரா­கலை மாவட்டம் உள்­ளிட்ட நாடு பூரா­கவும் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது. பொறுப்­பான அமைச்சுக்கள் அந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. மொனராகலை மாவட்டத்துக்கு மாத்திரம் கடந்த நான்கு வருடங்களில் உறுதிப்பத்திரங்கள் இல்லாத 20 ஆயிரம் வரையிலான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் எஞ்சியுள்ள காணிகளுக்கும் உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.