இனவாத அலையை இன்னும் விட்டுவைக்கப் போகிறீர்களா?

0 821

டாக்டர் ஷாபிக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் ஆதா­ர­மற்­றவை என்­பதை நேற்­றைய தினம் குரு­நாகல் நீதி­மன்றில் இடம்­பெற்ற விசா­ர­ணை­யின்­போது குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் உறு­தி­செய்­துள்­ளனர்.

இலங்கை வர­லாற்றில் அதிக பக்­கங்­களை கொண்ட ‘பீ’ அறிக்கை நேற்று குற்றப் புல­னாய்வு பிரி­வினால் குரு­நாகல் நீதிவான் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இதன்­போதே டாக்டர் செய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களின் முன்­னேற்றம் தொடர்பில் 210 பக்­கங்­களை கொண்ட இந்த பீ அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. குற்­ற­வியல் விசா­ரணை ஒன்று தொடர்பில் நீதிவான் நீதி­மன்றில் (ஒரே தட­வையில்) சமர்ப்­பிக்­கப்­பட்ட அதிக பக்­கங்­களை கொண்ட பீ அறிக்­கை­யாக இது கரு­தப்­ப­டு­கின்­றது.

சி.ஐ.டி யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ர­ணை­யறை அதி­கா­ரிகள் இந்த அறிக்­கையை சமர்ப்­பித்­தனர். அதில் வைத்­தியர் ஷாபி விவ­கா­ரத்தில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள சாட்­சி­களின் சுருக்­கமும் , விசா­ரணை அதி­கா­ரி­களின் அவ­தா­னிப்­பு­களும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதற்­க­மைய அவர் மீது பிர­தா­ன­மாகச் சுமத்­தப்­பட்ட 4000-8000 பெண்­க­ளுக்கு கருத்­தடை சிகிச்சை செய்தார் எனும் குற்­றச்­சாட்டு அப்­பட்­ட­மான பொய் என்­பதை பொலி­சாரே விசா­ரணை அறிக்கை மூல­மாக நிரூ­பித்­துள்­ளனர். அதே­போன்று பயங்­க­ர­வா­தி­க­ளு­டனோ எந்­த­வொரு தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­க­ளு­டனோ எவ்­வித தொடர்­புகள் இல்லை என்­ப­தையும் பொலிசார் மன்­றுக்குத் தெரி­யப்­ப­டுத்­தினர்.

உலக வர­லாற்­றி­லேயே ஒரு வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட மிகவும் முட்­டாள்­த­ன­மான குற்­றச்­சாட்டு இது­வே­யாகும். பகுத்­த­றி­வுக்கு அப்­பாற்­பட்ட இந்தக் குற்­றச்­சாட்டை, இத­னுடன் தொடர்­பு­டைய வதந்­தி­களை முன்­னின்று பரப்­பி­யோரும் வைத்­தி­யர்­கள்தான் என்­பதே இங்கு கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

மேலும் இந்த பொய்­யான குற்­றச்­சாட்டைக் கட்­டி­யெ­ழுப்பி அதனை ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யவர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு­வரே என்­பதும் அதை­விட கவ­லை­யான தக­வ­லாகும். அந்த வகையில் மிகப் பார­தூ­ர­மான இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்து முழு நாட்­டை­யுமே தவ­றாக வழி­ந­டாத்­திய வைத்­தி­யர்கள் பொலிசார் மற்றும் ஊட­கங்கள் என்­ப­வற்­றுக்கு எதி­ராக நீதித்­துறை என்ன நட­வ­டிக்கை எடுக்கப் போகி­றது என்­பதே நம்முன் உள்ள கேள்­வி­யாகும்.

இதே­போன்­றுதான் டாக்டர் ஷாபிக்கு எதி­ராக செய்தி வெளி­யிட்ட அதே ஊடகம் தான் கடந்த வாரம் முஸ்­லிம்­களால் நடாத்­தப்­பட்டு வந்த இல­வச உணவு வழங்கும் திட்டம் குறித்தும் பச்சைப் பொய்­யான தக­வலை வெளி­யிட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக அப்­பாவிப் பொது மக்கள், அதிலும் அதி­க­மான சிங்­கள ஏழை மக்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த 7 வரு­டங்­க­ளாக பாரிய பொரு­ளா­தார செல­வுக்கு மத்­தியில் இந்தத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. மூன்று வைத்­தி­ய­சா­லை­களில் தினமும் சுமார் 1250 பேர் வீதம் வரு­டாந்தம் 5 இலட்சம் மக்கள் இதனால் நன்­மை­ய­டைந்­தனர். ‘ஜன­போஷ பவுண்­டேசன்’ தினமும் சுமார் ஒன்­றரை இலட்சம் ரூபாவை இதற்­காக செல­விட்­டது. ஆனால் இன்று இன­வாத கருத்­தினால் இந்தத் திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. தான் அவ்­வா­றான கருத்தைக் கூற­வில்லை என சம்­பந்­தப்­பட்ட அர­சி­யல்­வாதி மறுக்­கிறார். இந் நிலையில் இது தொடர்பில் விசா­ரணை நடத்தி உண்­மையைக் கண்­ட­றியப் போவது யார்?

மறு­புறம் தங்­கொட்டு வாராந்த சந்­தையில் முஸ்லிம் வர்த்­த­கர்கள் வியா­பா­ரத்தில் ஈடு­பட வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் தடை விதித்­துள்ளார். அடிப்­படை உரி­மையை மீறு­கின்ற இந்தத் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான அதி­கா­ரத்­தையும் துணிச்­ச­லையும் அவ­ருக்கு வழங்­கி­யது யார்?

இப்­ப­டியே நாட்டில் நாளுக்கு நாள் இன­வாத கருத்­துக்­களைப் பரப்பி, தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி சிறந்த கல்­வி­மான்­க­ளையும் தன­வந்­தர்­க­ளையும் வர்த்­த­கர்­க­ளையும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­து­வதன் மூலம் இந்த நாடு எதை அடையப் போகி­றது?

ஆக, இந்த இன­வாத நகர்­வு­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜனா­தி­பதி , பிர­தமர், எதிர்க்­கட்சித் தலைவர் ஆகியோர் முன்­வர வேண்டும். தமது தேர்தல் நலன்­களை அடைந்து கொள்­வ­தற்­காக வாக்­க­ளிப்பு வரை இந்த இன­வாத அலையை விட்டு வைப்­பது நாட்டைக் குட்­டிச்­சு­வ­ராக்­கவே வழி­வ­குக்கும். இந்த நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் இட்டுச் செல்ல விரும்பும் ஒரு தூர­நோக்­குள்ள தலைவர் ஒரு­போதும் இதனை அனு­ம­திக்­க­மாட்டார். சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தமது கட­மையை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.