நாத்தாண்டிய, கொட்டாரமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் போது கூரிய வாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான பௌஸுல் அமீரின் (45) இறப்புச்சாட்சிப் பத்திரம் இன்னும் இழப்பீட்டு பணியகத்துக்கு கையளிக்கப்படாததால் அவருக்கான முழு நஷ்ட ஈட்டினையும் வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாக இழப்பீட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி இரவு கொட்டாரமுல்லையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் பெரும்பான்மை இனவாதிகளால் கூரிய வாளால் வெட்டப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கான நஷ்ட ஈடாக 10 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டு 3 இலட்சம் ரூபா முற்கொடுப்பனவாக வழங்கப்பட்டது.
மிகுதி நஷ்ட ஈடு தொகையான 7 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அவரது இறப்புச் சாட்சிப் பத்திரம் இதுவரை இழப்பீட்டு பணியகத்திற்கு கிடைக்கவில்லையென இழப்பீட்டு பணியகத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ். எம். பதுர்தீன் தெரிவித்தார்.
vidivelli