குழப்பம் ஏற்படுத்துவோருக்கு எதிராக அவசரகால சட்டம் பாவிக்கப்படாததேன்?

பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி

0 870

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவிக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலையை தற்போது யார் ஏற்படுத்தி வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக ஏன் அவ­ச­ர­கா­ல­சட்­டத்தை செயற்­ப­டுத்த முடி­யாமல் இருக்­கின்­றது என முஜிபுர் ரஹ்மான் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாத­கா­லத்­துக்கு நீடித்­துக்­கொள்ளும் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கே அவ­ச­ர­கா­ல­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு பிரிவும் அறி­வித்­துள்­ளது. அதனால் தற்­போது பாது­காப்பு வீதி கட­வைகள் அதி­மாக நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
அதே­போன்று நாட்டில் மீண்டும் திடீர் தாக்­கு­த­லொன்றை நடத்­து­வ­தற்­கான அச்­சு­றுத்தல் இல்­லை­யென இரா­ணுவத் தள­பதி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யதால் வெளி­நா­டுகள் பல எமது நாட்­டுக்குப் பிர­யாணத் தடை­களை விதித்­தி­ருந்­தன. ஆனால் தற்­போது அந்த தடை­களை அதி­க­மான நாடுகள் நீக்­கி­யுள்­ளன. ஆனால் இலங்­கையில் இன்னும் குழப்­ப­மான நிலை இருப்­ப­தாக சில நாடுகள் தங்கள் பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. பாது­காப்பு பிரிவும் ஜனா­தி­பதி, பிர­தமர் நாட்டில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இல்லை என தெரி­விக்­கின்­றனர். அப்­ப­டி­யாயின் நாட்டில் அச்­சு­றுத்தல் நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் யார்?.

அத்­துடன் கடைகள், வீடு­களை உடைத்தும் உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களே நாட்டில் பிரச்­சினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை தூண்டி பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர். இவற்றை பயங்­க­ர­வா­திகள் செய்­வ­தில்லை. இவர்­க­ளுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத சட்டம் செயற்­ப­டு­வ­தில்லை.

இதுதான் எங்­க­ளுக்கும் இருக்கும் பிரச்­சினை. தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்றே அவ­ச­ர­கால சட்டம் நீடிக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் வீடு­களை, கடை­களை, பள்­ளி­வா­சல்­களை உடைப்­பது, சில ஊட­கங்­களில் இன­வா­தத்தை தூண்­டும்­வ­கையில் அறிக்­கை­யி­டு­வது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லையா? இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் இன்று சுதந்­தி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

அத்­துடன் முஸ்லிம் நிறு­வனம் ஒன்று கொழும்பில் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு வரு­ப­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக உணவு வழங்­கி­ வ­ரு­கின்றது. இந்த உணவில் கருத்­தடை மாத்­திரை போடப்­ப­டு­வதா என பார்க்­க­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காமினி லொக்­குகே தெரி­வித்­த­தாக சிங்­கள பத்­தி­ரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் குறித்த தகவலை தான் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மறுத்திருக்கின்றார். அப்படியாயின் அந்த தகவலை வெளியிட்ட ஊடகவியலாளர் தொடர்பில் இதுவரை எந்த விசாரணையும் இல்லை. ஒருசாராருக்கு எதிராக மாத்திரமே அவசரகால சட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.