வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு அழைப்பாணை

0 718

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்­லிம்கள் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு தற்­கா­லிகத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் வென்­னப்­புவ பிர­தேச சபைத்­த­லைவர் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­தமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் உட்­பட 6 பேரை நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு மார­வில நீதிவான் நீதி­மன்றம் அழைப்­பாணை அனுப்பி வைத்­துள்­ளது.

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முஸ்லிம்களுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தங்­கொட்­டுவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பொலிஸார் நீதி­மன்­றத்­துக்கு வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் உட்­பட 6 பேரை நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 28 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ராகி தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட மைக்­கான கார­ணத்தை விளக்­கு­மாறு வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் கே.வி.சுசந்த உட்­பட 6 பேர் கோரப்­பட்­டுள்­ளனர்.

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்லிம் வியா­பா­ரிகள் வியா­பார நட­வ­டிக்கைகளில் ஈடு­பட்டால் அசா­தா­ரண நிலைமை உரு­வா­கலாம். ஏனைய வர்த்­த­கர்­களும் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றனர். எனவே அங்கு அமை­தி­யான சூழ்­நி­லை­யினை ஏற்­ப­டுத்த முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு தற்­கா­லிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.எஸ்.எம்.முஸப்பிர்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.