இஸ்லாம் பாடநூல் விவகாரம்: ஆராய விசேட குழு நியமனம்

0 855

இஸ்­லா­மிய பாடப்­புத்­த­கங்­களில் இன­மு­று­கல்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அடிப்­படை வாதம் மற்றும் பயங்­க­ர­வாத கருத்­துகள் இருந்தால் அவற்றை நீக்கி பாடப்­புத்­த­கங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சின் தேசிய பாட­சா­லை­க­ளுக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் ஜயந்த விக்­ர­ம­நா­யக்க தெரி­வித்தார்.

அடிப்­ப­டை­வாதி ஸஹ்ரான் போன்றோர் உரு­வா­கு­வ­தற்கு கல்வி அமைச்­சினால் 1980 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் வெளி­யி­டப்­பட்ட இஸ்­லா­மிய பாட­நூல்­களே காரணம் என அண்­மையில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த இஸ்லாம் மதத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றிய ரிஸ்வின் முஹமத் தெரி­வித்­தி­ருந்தார்.

1980 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் கல்வி பயிலும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு வெளி­யி­டப்­பட்ட இஸ்­லா­மிய பாட நூல்­களில் “இஸ்­லா­மிய தண்­ட­னைகள் ஒழுங்­காக அமுல்­ந­டத்­தப்­ப­டு­மாயின் உலகில் குற்­றங்கள் அமை­வது மிக அரி­தா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மே­யில்லை” என்று கூறப்­பட்டு அதன் கீழ் உள்ள குற்­றங்­களும் தண்­ட­னை­களும் என்று தலைப்­பி­டப்­பட்ட பட்­டி­யலில் ஒன்றில் குற்­ற­மாகக் கரு­தப்­படும் செயல்கள் மற்றும் அவற்­றுக்­கான தண்­ட­னைகள் ஆகி­யன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இஸ்லாம் மதத்தின் முக்­கிய கருத்­து­களை உள்­ள­டக்­கிய குர்­ஆனில் குறிப்­பி­டப்­ப­டாத சட்­டங்கள் 1980 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் கற்கும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு வெளி­யி­டப்­பட்ட இஸ்­லா­மிய பாடப்­புத்­த­கங்­களில் அடங்­கி­யுள்­ளன என தெரி­வுக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த ரிஸ்வின் தெரி­வித்தார்.

மேலும் அவர் அதில் “ரித்தத்” என்ற சொல் குறிப்­பி­டப்­பட்டு அதற்குத் தண்­ட­னை­யாக எச்­ச­ரிக்­கை­களின் பின்­கொலை என்­பது குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் “ரித்தத்” என்ற சொல்லின் பொருள் மதம் மாறல் என்றும் ஒருவர் இஸ்­லாத்­தி­லி­ருந்து அல்­லது இஸ்­லாத்தை ஏற்­று­விட்டு பின்னர் மீண்டும் இஸ்­லாத்­தி­லி­ருந்து வெளி­யே­றுதல் அல்­லது வேறு மதங்­க­ளுக்கு மாறுதல் எனவும் தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு 2015 ஆம் ஆண்­டுக்கு பின்னர் வெளி­யி­டப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய பாட­நூல்­க­ளிலும் சில பார­தூ­ர­மான வச­னங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

இதே­வேளை பாட­சா­லை­களில் இஸ்லாம் மதத்தைக் கற்­பிக்கும் பாட­நூல்­களில் அடிப்­ப­டை­வாதம் மற்றும் பயங்­க­ர­வாதம் உள்­ள­டங்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவற்றை நீக்­கு­மாறும் கோரி சிங்­களே அமைப்பும் பௌத்த தகவல் கேந்­திர நிலை­யமும் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளன.
இந்­நி­லையில் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய பாட­நூல்­களில் தவ­றான கொள்­கைகள் எதுவும் உள்­ள­டங்­கப்­பட்­டில்லை என கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமிய பாடநூல்களை ஆராய்ந்து அவ்வாறான அடிப்படைவாத கருத்துக்கள் இருந்தால் அவற்றை நீக்கி திருத்தங்களைச் செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.