முஸ்லிம்கள் எதிரானவர்களல்லர்

கல்முனை வடக்கு பிரதேச செயலக உருவாக்கம்

0 765

கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வது தொடர்­பி­லான சர்ச்சை கடந்த வாரம் பாரிய பிரச்­சி­னை­யாக மாற்­றப்­பட்டு அதுவே பேசு­பொ­ரு­ளாக்­கப்­பட்டு இருந்­தது. இது ஒரு பெரிய அனர்த்­தத்தை ஏற்­ப­டுத்தி விட்­டுத்தான் முடி­வுக்கு வருமோ என்று பலரும் அஞ்சும் வகையில் மும்­மு­ரப்­பட்­டி­ருந்­தது. கல்­முனைப் பிர­தே­சத்­திற்கு வெளியே வாழ்­கின்ற பெரும்­பா­லான தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் இங்­குள்ள யதார்த்த நிலை­களை சரி­யாக விளங்­கிக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக இருந்­த­தினால், தமிழ் மக்கள், தமது கல்­முனை சமூ­கத்­திற்கு பாரி­ய­தொரு அநி­யா­யத்தை முஸ்லிம் மக்கள் செய்­து­கொண்­டி­ருப்­ப­தினால் ஏற்­பட்ட பிணக்கு என்ற ஒரு கற்­பிதம் கட்­ட­மைக்­கப்­பட்­டது.

முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வரை குறிப்­பாக வடக்கு, கிழக்­கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பௌத்த பேரி­ன­வாத ஆதிக்க சக்­தி­க­ளி­னாலும் அதன் ஊக்­கி­க­ளாக செயற்­ப­டு­கின்ற மதத்­த­லை­வர்கள், அர­சி­யல்­வா­திகள் போன்­றோர்­க­ளினால் மிகுந்த அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு மனோ உளைச்­ச­லுக்கும், பொரு­ளா­தார இழப்­புக்­க­ளுக்கும் உள்­வாங்­கப்­பட்டு சற்று ஆறு­த­ல­டைந்­தி­ருந்த நிலையில், மீண்டும் ஒரு கல­வர சூழல் பௌத்த துற­வி­க­ளினால் கல்­மு­னையில் ஏற்­ப­டுத்­தப்­பட்டு அது நாடு தழு­விய முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­வி­டுமோ என்­கின்ற பீதியும் காணப்­பட்­டது.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை வர­லாற்றில் பௌத்த பேரி­ன­வாத ஆதிக்க சக்­தி­க­ளி­னாலும் , அதன் மத­கு­ரு­மார்­க­ளாலும் பெரிதும் துவம்சம் செய்­யப்­பட்டு பகை­யா­ளி­க­ளாக தமிழ் மக்­க­ளினால் கரு­தப்­பட்டு வந்த அணி­யி­னரைத் தமது பாது­கா­வ­லர்­க­ளா­கவும், நேசத்­திற்­கு­ரிய தோழர்­க­ளா­கவும் நம்பி, கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தி கோரு­வ­தற்கு சாகும்­வ­ரை­யான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை தொடங்­கி­யதன் பின்­ன­ணியில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாரிய சந்­தே­க­மி­ருக்­கின்­றது.

இதன் மறு கருத்­தாக சிங்­க­ள­வர்­களும், தமி­ழர்­களும் ஒன்­று­ப­டக்­கூ­டா­தென முஸ்லிம் சமூகம் கரு­து­வ­தாக அர்த்­தப்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. ஏனெனில், இது­வொரு சந்­தர்ப்­ப­வா­தத்­தி­னதும், சதி­யி­னதும் இணை­வா­க­வுமே முஸ்­லிம்­க­ளினால் பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. உண்­மையில், தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னையில் உச்­ச­பட்ச கோரிக்­கை­களில் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றான “வடக்கு, கிழக்கு இணைந்த சுய­நிர்­ணய கோட்­பாட்டை” இலங்கை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென்று தமிழ் மக்­க­ளோடு கைகோர்த்து கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­திற்கு உர­மூட்­டிய பௌத்த பிக்­கு­களின் தலை­மையில் ஓர் ஆர்ப்­பாட்டம் அல்­லது உண்­ணா­வி­ரதம் செய்­வ­தற்கு தமி­ழர்­க­ளால்தான் முடி­யுமா அல்­லது சிங்­கள மத­கு­ரு­மார்­கள்தான் முன்­வ­ரு­வார்­களா? என்­றொரு கேள்­வியை எழுப்­பினால் இரண்டும் சாத்­தி­ய­மற்­றது என்ற விடை துல்­லி­ய­மாகக் கிடைத்­து­விடும்.

இன்­றைய இலங்­கையின் அர­சியல் சூழலில் முஸ்லிம் மக்கள் வெகு­வாக பாதிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றனர். இதற்கு முன்னர் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களும், ஓர­ணியில் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இவ்­விரு சமூ­கங்­களும் ஒன்­று­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­பதன் தீவிர எண்­ணத்தின் பின்­பு­லத்­தில்தான் பௌத்த பிக்­கு­களின் கல்­முனை விட­யத்தில் முன்­வ­ரு­கையை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு அதிக தேடல் தேவை­யில்லை.
கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லகம் என்று மிக அண்­மையில் பெயர் சூட்டி அழைக்­கப்­பட்­டாலும், 1989களில் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­ற­போது கல்­முனை உதவி அர­சாங்க பிரிவு அலு­வ­ல­கத்தின் ஒரு உப அலு­வ­ல­க­மா­கவே இது ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதனை தனி­யான ஒரு பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்­தப்­பட வேண்­டு­மென்­கின்ற அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கடந்த 1993களில் வழங்­கப்­பட்­டி­ருந்தும், அது இன்­று­வரை நடை­மு­றைக்கு வரா­தி­ருக்­கி­றது.

இதற்கு காரணம், இங்­குள்ள முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் தலை­யீடு என்று சொல்­லப்­ப­டு­வதின் ஊடாக இங்­குள்ள தமிழ் மக்­களை முஸ்லிம் மக்கள் நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குட்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­கின்ற ஒரு விம்­பக்­கட்­டு­மா­னத்தை பெரி­தாக காண்­பித்து எல்­லோ­ரு­டைய கவனக் குவிப்­பையும் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்­வ­தற்கு தமிழர் ஆதிக்க சக்­திகள் அன்­றி­லி­ருந்து இன்­று­வரை ஒரு முனைப்­புடன் செயற்­பட்டு, அதில் தற்­கா­லிக வெற்­றி­யையும் அவர்கள் பெற்­றி­ருக்­கின்­றார்கள்.

கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வதை முஸ்­லிம்கள் ஏன் தடுக்­கின்­றார்கள்? அதன் நியாயம் என்ன? என்­பதை அவ­தா­னத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளாமல் ஒரு அத்­து­மீ­றலை முஸ்லிம் சமூகம் செய்­வது போன்ற பிர­மைதான் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. உண்­மையில் ஒரு பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டக்­கூ­டிய நிர்­வாக சேவை­யினை தடுத்து நிறுத்­த­வேண்­டிய எந்தத் தேவையும் இங்­குள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு இருக்­கின்ற ஒன்­றல்ல. அப்­ப­டி­யி­ருந்தும், இப்­படி தடுக்க முனை­கின்­றார்கள் என்றால், அதற்­குப்­பின்­னாலும் மறுக்க முடி­யாத நியா­யங்கள் இருக்­கு­மென்­பது மிக எளி­தாகப் புரி­யத்­தக்­க­தாகும்.

கடந்த 1989 காலப்­ப­குதி, குறிப்­பாக கல்­முனை பிர­தே­சத்தில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டை­யே­யான உறவில் பிணக்­கு­களும் கசப்­பு­களும் இருந்து வந்த ஒரு காலம். மற்றும் கட்­ட­மைக்­கப்­பட்ட ஆயு­தக்­கு­ழுக்கள் தமிழ் சமூ­கத்தின் மத்­தியில் மேலோங்கி இருந்த ஒரு நிலை அன்று அப்­பட்­ட­மாக இருந்­தது. மற்றும் கல்­முனை உதவி அர­சாங்க பிரிவின் உதவி அர­சாங்க அதி­ப­ராக கடமை­யாற்­றிய முயீ­னுத்தீன் கிழக்கு மாகா­ணத்தை பூர்­வீ­க­மாக கொண்­ட­வ­ரல்ல. அது­மட்­டு­மன்றி அவர் ஒரு அரச நிர்­வா­கி­யா­கவே எதையும் அணுக வேண்­டிய நிர்ப்­பந்­தமும் அவர் மீது இருந்­தி­ருக்கும். அதே­நேரம் வட­, கி­ழக்கு இணைந்த மாகாண சபை முறை­மையும் நடை­மு­றையில் இருந்த கால­மென்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் பின்­ன­ணியில் கல்­முனை பிர­தேச செய­லக ஆட்­புல எல்­லைக்குள் வாழ்­கின்ற அனைத்து தமிழ் மக்­களின் நிர்­வா­கங்­க­ளையும் கையாள்­வ­தற்­கேற்ப கிரா­ம­சே­வகர் பிரி­வு­களை வகுத்­துக்­கொண்­டதும், முஸ்லிம் மக்கள் வாழக்­கூ­டிய பிர­தே­சங்­க­ளிலும் அவர்­களின் குடி­ப­கு­தி­களை அண்­மித்­துள்ள காணி நிலங்­களும், வர்த்­தக நிலை­யங்­களும் உட்­பட்ட பகு­திகள் தமிழர் நிர்­வாக ஆட்­புல எல்­லைக்குள் வரும்­வ­கையில் பிரித்­துக்­கொண்ட ஒரு சூழல் அங்கு நடை­பெற்­றி­ருக்­கி­றது. இது ஒரு வெளிப்­படைத் தன்­மை­யில்­லாத பிரிப்­புக்­க­ளையும், பங்­கீ­டு­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தினால் இங்கு வாழக்­கூ­டிய முஸ்­லிம்­க­ளுக்கு உரித்­தான நில­பு­லங்­க­ளிலும் , உரித்­து­வ­ரக்­கூ­டிய அரச காணி­களின் பெரும்­ப­கு­தி­களும் இன்று தர­மு­யர்த்தக் கோரு­கின்ற கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தின் எல்­லைகள் என அவர்கள் இன்று குறிப்­பி­டு­வ­தற்குள் அடக்கம் பெற்­றி­ருக்­கின்­றன.

இத­னு­டைய பாரிய விளை­வுகள், தாக்­கங்கள் வெளிப்­ப­டாமல் இருப்­ப­தற்கு காணி அதி­காரம் அவர்­க­ளிடம் இல்­லா­ம­லி­ருப்­ப­துதான் கார­ண­மாகும். நிதியை பொறுத்­த­வரை நேர­டி­யாக முழு அதி­காரம் இல்­லாமல் போன்று தோற்­ற­ம­ளித்­தாலும், ஏதோ­வொரு வழியில் அவை அங்கு நிறை­வு­டை­ய­தாக பூர்த்­தி­செய்­யப்­ப­டு­வதைப் பார்க்­கின்றோம். இப்­போது தமி­ழர்­க­ளினால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்ற கிராம சேவகர் பிரி­வுகள் அனைத்­தையும் உள்­ள­டக்­கி­ய­தாக சடு­தி­யாக தர­மு­யர்த்­தப்­ப­டுதல் என்­பது நிரந்­த­ர­மாக இங்கு வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு செய்­யப்­ப­டு­கின்ற ஒரு அநீ­தி­யா­கவே அமைய முடியும்.

இந்தப் பயம்தான் ஏட்­டிக்குப் போட்­டி­யான தோற்­றப்­பாட்டைக் கொண்ட போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முஸ்லிம் மக்­களை உந்­தித்­தள்­ளிய பின்­ன­ணி­யெனப் புரிந்­து­கொள்­ளப்­படல் வேண்டும். அன்று எவ்­வாறு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளோடும் அவர்­க­ளது குடிமைச் சமூ­கங்­க­ளோடும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யாக பேசி உரு­வாக்­கப்­ப­டாத உப பிர­தேச செய­லகம் ஒன்று இன்­றைய சமா­தான சூழ­லிலும் அதை ஒத்­த­தாக செய்­யப்­ப­டு­வ­தற்கு எத்­த­னங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் என்­பது தமி­ழர்­களின் ஆதிக்­கத்தை மறை­மு­க­மாக முஸ்லிம் மக்­கள்­மீது திணிப்­ப­தா­கவே அர்த்­தப்­ப­டுத்­து­கின்­றது.

கல்­முனை பிர­தேச செய­ல­கத்­திற்குள் வாழ்­கின்ற தமிழ் மக்­களை மையப்­ப­டுத்­திய ஒரு முழு­மை­யான அதி­கா­ர­மு­டைய பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­படல் வேண்டும் என்றால், இன்­றைய நமது நாட்டில் நடை­மு­றையில் இருக்­கின்ற நிர்­வா­கக்­கட்­ட­மைப்பு குறித்­தான சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவும், வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டனும் அதனைப் பெறு­வ­தற்கு எந்த வழி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்­கின்ற நியதி இருக்­கின்­றதோ அந்த நிய­தி­களின் வழி நின்று அடைந்து கொள்­வ­தற்­கான முயற்­சி­களை தமிழ் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் அவர்­களின் குடி­மைசார் குழுக்கள் என்­பன பெற்­றுக்­கொள்­வ­தற்கு தேவை­யான அழுத்­தங்­களை அர­சாங்­கத்­திற்கு முன்­வைத்து அதன் வழி­மு­றை­யில்தான் கல்­மு­னையில் புதிய பிர­தேச செய­ல­கங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

இந்த வெளிப்­ப­டைத்­தன்­மைக்கு தமிழ்த் தரப்­பினர் ஆயத்­த­மில்­லாது, சடு­தி­யாக தர­மு­யர்த்­து­வதில் அக்­கறை காட்­டு­வ­தென்­பது நாம் மேலே சுட்­டிக்­காட்­டிய முஸ்­லிம்­க­ளுக்கு பாத­கமான நிலையில் ஒரு பிர­தேச செய­ல­கத்தை உடைமை­யாக்­கிக்­கொள்­வதன் தந்­திரம் அன்றி வேறென்­ன­வாக இருக்க முடியும் என்­கின்ற ஒரு நியா­ய­பூர்­வ­மான கேள்வி இவ்­வி­டத்தில் எழாமல் இருக்க முடி­யாது.

தமிழ் தரப்­பி­னர்­க­ளிடம் இருக்­கக்­கூடிய பலவீ­னங்­க­ளையும், முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் பாதிப்­புக்­க­ளையும் மறைப்­ப­தற்­கா­க­வேண்டி வேறு இரண்டு சொற்­ப­தங்­களை வெளிப் ­ப­டை­யாக முன்­வைப்­பதில் கரி­சனை காட்­டு­வதில் இருந்தே அவர்­களின் உள்­நோக்­கத்தை வெளிப்­ப­டுத்த போது­மா­ன­தாகும். அவை­யா­வன, “பிர­தேச செய­லகம் என்ன உள்­ளூ­ராட்சி அலகா?, நிலத்­தொ­டர்­பில்­லாமல் நிர்­வாகம் அமைந்தால் என்ன?“ என்­கின்ற வாச­கங்­க­ளுக்குள் மக்­களை திசை திருப்பி யதார்த்­தத்­திற்கு முர­ணான ஒரு நிலைப்­பாட்டை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்தி ஏற்­பட்­டி­ருக்கும் கொதி­நி­லை­யையும், உசுப்­பேற்­று­த­லையும் தொட­ராக வைத்­தி­ருப்­ப­தற்­கு­மான முனைப்பே இது என்­பதில் சந்­தேகம் இல்லை.

இலங்­கையில் உள்ள பிர­தேச செய­ல­கங்­களை பொறுத்­த­வரை பெரும்­பாலும் அவை ஒவ்­வொன்றும் குறித்­த­தொரு உள்­ளூ­ராட்சி மன்றக் கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் கல்­மு­னையில் புதி­தாக உரு­வாக்­கப்­படும் ஒரு பிர­தேச செய­லகம் என்­பது நாளை உரு­வாக்­கப்­பட வேண்டும் என முன்­வைக்­கக்­கூ­டிய உள்­ளூ­ராட்சி மன்­றத்­தோடும் தொடர்­பு­ப­டு­கின்­றது. ஏனெனில், பர­வ­லாக பேசப்­ப­டா­விட்­டாலும் கூட கல்­மு­னையில் தமி­ழர்­களை மையப்­ப­டுத்­திய உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்று தரப்­பட வேண்டும் என்­கின்ற கோரிக்­கைகள் மெல்ல மெல்ல முன்­வைக்­கப்­பட்டு வரு­வதும் நமது அவ­தா­னத்­திற்கு அப்­பா­லா­ன­தல்ல.

அந்த வகையில் அத­னையும் கருத்­தில்­கொண்­டுதான் கல்­மு­னையில் புதி­தாக உரு­வாக்­கப்­பட வேண்­டிய பிர­தேச செய­லகச் சிந்­தனை உருப்­பெற வேண்­டு­மே­யன்றி வெறு­மனே பிறப்பு இறப்புச் சான்­றிதழ் வழங்கும் ஒரு அலு­வலம் போல காட்­ட­வேண்­டி­ய­தில்லை. அதுதான் பிரச்­சினை என்றால் அது இன்று அந்த அலு­வ­ல­கத்தின் ஊடா­கவே நடை­பெ­று­கின்­றது. அப்­ப­டி­யென்றால், அதற்கு எதி­ராக தர­மு­யர்த்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைக்குப் பின்னால் உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கையும் மறைந்­தி­ருக்­கின்­றது என்­பது பர­க­சிய இர­க­சி­ய­மாகும்.

கல்­முனைப் பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்து ஏலவே சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகம் பிரித்து வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அது வெளிப்­ப­டை­யாக நடை­பெற்ற ஒன்று. அதற்கு எல்­லை­க­ளாக இனங்­கா­ணப்­பட்­ட­தற்கு அங்கு முன்­பி­ருந்த கரை­வாகுத் தெற்கு கிராம சபை எல்­லை­களை அடை­யா­ளப்­ப­டுத்­தியே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த உதா­ர­ணத்தை கல்­மு­னையில் இன்று புதி­தாக உரு­வாக்­கப்­பட முனை­கின்ற பிர­தேச செய­ல­கத்­திற்­கான எல்­லையை அடை­யாளம் காண்­ப­தற்கு கரை­வாகு வடக்கு கிரா­மாட்சி மன்­றத்தின் எல்­லைகள் கவனம் பெற­வேண்­டியும் இருக்­கின்­றது.

ஏனெனில், அவர்­களின் இன்­றைய பெய­ரி­டு­த­லான கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் என்­பது அன்­றைய கரை­வாகு வடக்கு கிராம சபை மன்­றத்தை மையப்­ப­டுத்­தி­ய­தா­கத்தான் சொல்­லப்­ப­டு­கின்­றது. வர­லாற்று ரீதி­யாக செனிட்­டரி சபையின் கீழ் கல்­முனை இருந்­த­போதும் அதன் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட கல்­முனை பட்­டின சபை­யாக இருந்த போதும் கல்­மு­னையும் , கல்­மு­னைக்­கு­டியும் இணைந்­துதான் இருந்­தி­ருக்­கின்­றது. ஊரின் பெயர்கள் இரண்டும் இரண்டு போல் அமைந்­தி­ருந்­தாலும், நிலமும், அர­சியல் அதி­கா­ரமும் இங்கு ஒன்­றா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­றது என்­கின்ற வர­லாற்றை யாரும் மறுத்­து­ரைக்க முடி­யாது.

கல்­முனை முஸ்­லிம்­களை பொறுத்­த­வரை கல்­முனை தமிழ் மக்­களை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என அவர்கள் கோரு­கின்ற பிர­தேச செய­ல­கத்தை எதிர்க்­கின்­றார்கள் என்­கின்ற ஒரு கோஷத்தை முன்­னெ­ழுப்பி அதற்குள் தமி­ழர்கள் தமது அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தற்கு வழி­யேற்­ப­டுத்திக் கொள்­கின்­றனர் என்­கின்ற யதார்த்­தங்­களை முதலில் கல்­மு­னைக்கு வெளியே வாழக்­கூ­டிய தமிழ் அர­சியல் சக்­தி­களும், அவர்­களின் குடிமைச் சமூ­கமும் உணர்ந்து தெளிந்து இதில் தமது கருத்­தா­டல்­க­லையும், பதி­வேற்­றங்­க­ளையும், களச் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்குத் தயா­ராக வேண்டும்.
உண்­மையில் கல்­மு­னையில் வாழ் கின்ற குடிமைச் சமூகத் தமி­ழர்­களைப் பொறுத்­த­வரை நமக்­கென்று உரு­வாகும் பிர­தேச செய­ல­கத்தை தடுக்­கின்ற எதி­ரிகள் முஸ்­லிம்கள் இல்லை என்­பதை தெளி­வாக உணர்ந்­தி­ருந்­தாலும், இங்கு மேலெ­ழு­கின்ற தமிழ் அர­சியல் ஆதிக்க சக்­தி­களின் கெடு­பி­டி­க­ளுக்கு முன்னால் நின்­று­கொள்ள முடி­யாது அல்­லது எதிர்த்­துக்­கொள்ள முடி­யாத கையறு நிலையில் மௌனம் சாதிப்­பதை முஸ்லிம் தரப்பு தெளி­வாக விளங்கி வைத்­துள்­ளது.

கல்­மு­னையின் வர­லாற்றை பரி­பூ­ர­ண­மாக விளங்­கா­த­வர்­களும், இன­வாத அர­சியல் கோஷங்­களின் பின்னால் அள்­ளுப்­பட்டு செல்­கின்ற சில­ரு­டைய பிழை­யான வழி­காட்­டு­தல்­களின் ஓரங்­க­மா­கவே கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக உரு­வாக்­கத்­திற்கு முஸ்­லிம்கள் எதி­ரா­ன­வர்கள் என்று காட்­டப்­ப­டு­கின்­றது. இவர்­களை வழி­ந­டத்­த­வேண்­டிய தார்­மீகப் பொறுப்­பு­டைய தமிழர் தரப்பு மித­வாத அர­சியல் சக்­தி­களும் குடிமைச் சமூ­கத்­தி­னர்­களும் நெறிப்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும்.

முறை­யாக கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்க எடுக்­கின்ற நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் தரப்பின் அர­சியல் ஆதிக்கம் தடை செய்­கின்­றது அல்­லது தாம­திக்க வைக்­கின்­றது என்று அவர்கள் கரு­து­வார்­க­ளே­யானால், அதற்கு செய்ய வேண்­டிய கட்­ட­மைப்பு மூன்றாம் சக்தியைக் கொண்டுவந்து வேண்டத்தகாத விளைவுகளைத் தரக்கூடிய உண்ணாவிரதத்தை மேற்கொள்ள வழிவகுப்பதல்ல. மாறாக, இன்றைய அரசியலில் தமிழ் தரப்பிற்கு இருக்கின்ற அரசியல் ஆளுமையை பிரயோகித்து புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையோடும் , நீதியோடும் நடைபெறுவதற்கான வழிகளை திறந்துவிடுவதற்கு தேவையான அழுத்தங்களை இன்றைய அரசாங்கத்தின் தலைமையிடமும், அதற்கு உரித்தான அமைச்சரிடமும் பிரயோகிக்க வேண்டும்.

துரித நடவடிக்கைக்கு யார் முட்டுக்கட்டையாக வந்தாலும் அதனை எதிர்ப்பதும், பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்குள்ள உரிமையாகும். அந்த அடிப்படையில் நியாயமான எல்லை நிர்ணய குழுக்களை அமைப்பதற்கும் அதன் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்கும் தமிழர் அரசியல் சக்திகளுக்கு மூன்றாம் சக்திகளின் உதவி தேவைப்பட்டால் அதனைப் பெற்றுக்கொண்டேனும் அரசாங்கத்திடமும் உரிய அமைச்சரிடமும் தமது முன்னெடுப்புக்களை முன்னெடுக்க வேண்டுமேயன்றி வேறுவழியில்லை.
பழையன மறந்து சுமார் 2009 மே தொட்டு இன்றுவரை கல்முனையில் வாழக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களிடையே மிகுந்த அமைதியும், ஒற்றுமையும், சினேகத்தன்மைகளும் வளர்ந்து வரும் இன்றைய சூழலை உடைத்தெறிந்து ஒரு கலவரச் சூழலுக்கு வித்திடுவது போன்று தமிழர் தரப்பினரின் எத்தனங்கள் அமைந்துவிடக்கூடாது. இந்த யதார்த்த நிலையினை முஸ்லிம் தரப்பினர்கள் வெளிப்படுத்துவதற்கு கையாண்ட ஒரு முறைதான் அண்மைய சத்தியாக்கிரக போராட்டமாகும்.

உண்மையில் அது ஏட்டிக்குப் போட்டியாகச் செய்யப்பட்ட ஒன்று அல்ல. மாறாக நேர்மையாக அடைய வேண்டிய ஒன்றை , நேர்மையீனமாக அடைந்துகொள்வதற்கு தமிழ் தரப்பினால் எடுக்கப்பட்ட அடாவடி நடவடிக்கையை தணிப்பதும் நீதியான வழி முறையை உரக்கச் சொல்வதுமே முஸ்லிம் தரப்பினரின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பின்னணியாகும். அதற்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது முறையல்ல.

எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்­த­ம­ருது -05

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.