வைத்தியசாலைகள் அருகே முன்னெடுக்கப்பட்டு வந்த ‘ஜனபோஷ’ இலவச உணவுத் திட்டம் இடைநிறுத்தம்

கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து நடவடிக்கை; தான் அவ்வாறு கூறவில்லை என்கிறார் காமினி லொக்குகே

0 775

வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு வருகை தரும் ஏழை மக்­க­ளுக்­காக முஸ்லிம் தன­வந்தர் ஒரு­வரின் பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்­ கப்­பட்டு வந்த ‘ஜன­போஷ’ எனும் பெய­ரி­லான இல­வச உணவு வழங்கும் திட்­டத்தை நேற்று முதல் இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக அதனை முன்­னெ­டுத்து வந்த ‘ஜன­போஷ பவுண்­டேசன்’ தெரி­வித்­துள்­ளது.

குறித்த உணவில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து பொது­மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக பொது­ஜன பெர­மு­னவின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான காமினி லொகுகே தெரி­வித்­த­தாகக் கூறி சிங்­களப் பத்­தி­ரி­கை­யெ­ான்று செய்தி வெளி­யிட்­டதைத் தொடர்ந்தே இத்­திட்­டத்தை இடை­நி­றுத்த வேண்­டிய ஏற்­பட்­ட­தாக அறிய வரு­கி­றது.

கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை, மஹ­ர­கம அபேக் ஷா (புற்­றுநோய்) வைத்­தி­ய­சாலை மற்றும் களு­போ­வில வைத்­தி­ய­சாலை ஆகி­ய­வற்­றுக்கு சிகிச்சை பெற வரும் நோயா­ளிகள் மற்றும் அவர்­களைப் பார்­வை­யிட வரும் உற­வி­னர்­களில் தேவை­யு­டை­யோ­ருக்கு காலை மற்றும் பகல் உண­வுகள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு வந்­தன.

‘ஜன­போஷ’ எனும் பெயரில் 2012 ஆம் ஆண்டு முதல் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த இந்தத் திட்­டத்­தினால் மூன்று வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் தினமும் சுமார் 1500 பொது மக்கள் இல­வ­ச­மாக உண­வு­களைப் பெற்று வந்­தனர்.

மிகவும் தர­மான முறையில் சுகா­தார ஒழுங்­கு­களைப் பேணி முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த இந்தத் திட்­டத்­திற்கு அர­சாங்­கத்தின் பூரண அனு­மதி கிடைக்கப் பெற்­றுள்­ள­துடன் சுகா­தாரப் பரி­சோ­த­கர்­களின் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் குறித்த அர­சி­யல்­வா­தியை மேற்­கோள்­காட்டி வெளி­யி­டப்­பட்ட பத்­தி­ரிகை செய்­தியைத் தொடர்ந்து, தமது ஜன­போஷ நிலை­யத்தின் மீதும் அங்கு பணி­பு­ரிவோர் மீதும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்ற அச்­சத்தில் இத்­திட்­டத்தை இடை­நி­றுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ள­தாக ஜன­போஷ பவுண்­டே­சனின் ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் தான் அவ்­வா­றா­ன­தொரு கருத்தை வெளி­யி­ட­வில்லை என்றும் குறித்த சிங்­கள பத்­தி­ரிகை உண்­மைக்குப் புறம்­பான செய்­தியை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே தெரி­வித்­துள்ளார்.
தற்­போது சிங்­கப்­பூரில் தங்­கி­யுள்ள அவர் விடுத்­துள்ள விசேட அறி­வித்தல் ஒன்றில், ”திவய்ன பத்­தி­ரி­கையில் இவ்­வா­றான ஒரு செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறித்து எனது நண்­ப­ரான முன்னாள் ஆளுநர் அலவி மெள­லா­னாவின் மகன் என்னைத் தொடர்­பு­கொண்டு கேட்டார். அத்­துடன் தற்­போ­தைய மேல் மாகாண ஆளுநர் முஸம்­மிலும் என்­னுடன் உரை­யா­டினார். நான் அவ்­வா­றான ஒரு கருத்தை பொது இடம் ஒன்­றிலோ அல்­லது தனி நபர்கள் எவ­ரி­டமோ கூற­வில்லை. அந்த செய்­தியில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்­களை நான் முற்­றாக மறுக்­கிறேன்” என அவர் அதில் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, ‘ஜன­போஷ பவுண்­டேசன்’ விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ”ஆழ்ந்த கவ­லை­யு­டனும் கனத்த இத­யத்­து­டனும் இன்று முதல் (25.06.2019) வைத்­தி­ய­சா­லை­களில் இல­வச உணவு வழங்கும் எமது திட்­டத்தை இடை­நி­றுத்திக் கொள்­கிறோம். 2012 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் எமது சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. பின்னர் 2016 இல் களு­போ­வில வைத்­தி­ய­சா­லை­யிலும் 2017 இல் மஹ­ர­கம புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யிலும் எமது சேவை­களை விஸ்­த­ரித்தோம். இதன் மூல­மாக இன, மத வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் வரு­டாந்தம் சுமார் 5 இலட்சம் ஏழை மக்­க­ளுக்கு உண­வ­ளித்து வந்தோம். எனினும் ஏழை­க­ளுக்கும் ஆத­ர­வற்­றோ­ருக்கும் உதவும் எமது உன்­னத நோக்­கத்­திற்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் தவ­றான தக­வல்கள் பரப்­பப்­ப­டு­வது பற்றி எமக்கு அறியக் கிடைத்­துள்­ளது. இந்­நி­லையில் வேறு வழி­யின்றி எமது சேவையை மேற்­படி மூன்று வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் இடை­நி­றுத்திக் கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது.

ந்தப் பணிக்­காகத் தம்மை அர்ப்­ப­ணித்துச் சேவையாற்றி வந்த எமது பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏதேனும் இன வன்முறைகள் மூலமாக எமது பணியாளர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. எமது இந்த சேவைக்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி கூறுகிறோம்” என குறித்த ‘ஜனபோஷ பவுண்டேசன்’ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.