அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?

மக்கள் நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு

0 996

கஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி

அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இன்று 27 ஆம் திகதி பிற்­பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூட­வுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மைப் பலம் இல்­லாமல் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ­ஷவின் அர­சாங்­கத்­துக்கு எந்­த­வித நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்க முடி­யாமல் உள்­ளது.  இதுதான் உண்­மைத்­தன்மை என்­பது சாதா­ரண அர­சியல் அறி­வுள்ள அத்­த­னை­பே­ரி­னதும் கருத்­தாகும்.

பெரும்­பான்­மை­யில்­லாத ஒரு குழு­வுக்கு அர­சாங்­கத்தை கொண்டுநடாத்த அதி­கா­ர­ம­ளிப்­பது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என்­பது ஏகோ­பித்த கருத்­தாகும். தமக்கு சட்ட முர­ணாக செயற்­பட சபா­நா­யகர் இட­ம­ளித்­தா­லேயே பாரா­ளு­மன்­றத்­துக்கு வரு­கின்றேன் எனத் தெரி­விப்­பது போன்று தினேஷ் எம்.பி.யின் அறி­விப்பு இருப்­ப­தாக முன்னாள் பிர­தமர் ரணில் தரப்பு அர­சி­யல்­வா­திகள் கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மைப் பலத்தை சரி­செய்யும் முயற்சி தொடர்ந்தும் தோல்­வி­யி­லேயே இருக்­கின்­றது என்­ப­தையே அர­சாங்க தரப்பின் ஒவ்­வொரு நட­வ­டிக்­கையும் படம் போட்டுக் காட்­டு­வ­தாக ஐ.தே.க.வின் பொதுச் செய­லாளர் அகிலவிராஜ் காரி­ய­வசம் கடந்த 24 ஆம் திகதி கண்டி பொதுக் கூட்­டத்தில் கூறி­யி­ருந்தார்.

எது எப்­படிப் போனாலும் முன்வைத்த காலை பின்­னோக்கி நகர்த்த மாட்டேன் என்ற பிடி­வா­தத்தில் நிரு­வாகத் தலைமை இருக்கும் வரையில் இந்த இழு­பறி நிலைமை தொடரும் என்­பது மட்டும் விளக்கம் தேவை­யில்­லாத உண்­மை­யாகும்.

தனது நிலைப்­பாட்டை சரி­யென நிறுவும் முயற்­சியில் ஜனா­தி­ப­தியும், அர­சாங்­கத்தை ஏற்­றதன் பின்னர் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாத மானப் பிரச்­சி­னையில் பிர­தமர் மஹிந்த தரப்பும், இழந்­ததை மீண்டும் எடுக்­காமல் ஓய­மாட்டோம் என முன்னாள் பிர­தமர் ரணில் தரப்பும், சட்டம் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், அதனை அங்­கீ­க­ரித்தால் அரா­ஜக நிலை ஏற்­ப­டு­மெ­னவும், ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வதே தமது ஒரே குறிக்கோள் என பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள அணி­சே­ராத கட்­சி­களும் தெரி­வித்து வரு­கின்­றன.

சிவில் அமைப்­புக்­களும், தொழிற்­சங்க குழுக்­களும் இந்த அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பாதைக்கு இறங்­கி­யுள்­ளன. தம்­பர அமில தேரர் தலை­மையில் சத்­தி­யாக்­கி­ரகம் வரையில் இந்த எதிர்ப்பு நட­வ­டிக்கை சென்­றுள்­ளது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்­திய பின்­னணிச் சக்­தி­யா­க­வி­ருந்த மறைந்த மாது­லு­வாவே சோபித தேரரின் அமைப்பும் ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக வீதியில் இறங்­கி­யுள்­ளமை குறிப்­பிட வேண்­டிய ஒரு முக்­கிய அம்­ச­மாகும்.

இத்­தனை பிரச்­சி­னை­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்கும் அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி தன்­னு­டைய நிலைப்­பாட்டில் உறு­தி­யா­க­வுள்ளார். போதாக்­கு­றைக்கு சவால்­களை வேறு விடுத்­துள்ளார். அவற்றைப் பாது­காப்­பதும் அவ­ரு­டைய தனிப்­பட்ட பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது.

கட்சி தாவும் சிந்­த­னை­யுள்­ள­வர்­க­ளுக்கும் அதி­கார தளம்பல் சூழ்­நி­லையில் தீர்­மானம் ஒன்­றுக்கு வர­மு­டி­யா­துள்­ளது. இதனால், தானோ என்­னவோ, மஹிந்த அர­சாங்கம் 2020 வரை முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் என எஸ்.பி. திஸா­நா­யக்க அறி­வித்­தி­ருந்தார்.

முதலில் மாகாண சபைத் தேர்தல் நடை­பெ­று­மெ­னவும் அடுத்து ஜனா­தி­பதித் தேர்தல் எனவும் பொதுத் தேர்தல் இறு­தி­யி­லேயே நடை­பெறும் எனவும் எஸ்.பி. திஸா­நா­யக்க கட்சி தாவ நினைப்­ப­வர்­க­ளுக்கு ஒர் உறு­திப்­பாட்டை வழங்­கி­யி­ருந்தார்.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் பதற்ற நிலை­மையை நிறுத்­து­வ­தற்கு இடைக்­கால அர­சாங்கம் ஒன்­றுக்கு வரு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் யாபா அபே­வர்­தன ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார். எந்­த­வித நிபந்­த­னையுமின்றி ஒத்­து­ழைப்பு வழங்­க­வுள்­ள­தா­கவும் கடந்த 23 ஆம் திகதி அவர் ஊட­கங்­க­ளிடம் பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்தார்.

இடைக்­கால அர­சாங்கம் அமைக்க பொது­ஜன பெர­முன ஐக்­கிய தேசியக் கட்­சியை அழைத்­துள்­ள­மை­யா­னது, அக்­கட்­சியின் வங்­கு­ரோத்து நிலை­மையை எடுத்துக் காட்­டு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் பதி­ல­ளித்­தி­ருந்தார்.

பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள பெரும்­பான்மைக் கட்­சியே இடைக்­கால அர­சாங்­கத்­துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை உள்­ளது. தமக்கு அர­சாங்கம் அமைக்க முடியும். தாம் விரைவில் அர­சாங்­கத்தை அமைப்போம். அதன்­பின்னர், கட்சித் தலை­வர்­களை ஆலோ­சித்து தேர்­த­லுக்கு செல்­வது குறித்து தீர்­மா­னிப்போம் எனவும் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அர­சாங்க தரப்பின் எதிர்­பார்ப்பு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. பிர­த­மரை நிய­மித்து, அர­சி­ய­ல­மைப்பை மீறி பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து, பின்னர் தாம் அர­சாங்கம் அமைத்துக் காட்­டு­வ­தா­கவும், தமக்குப் பெரும்­பான்மை உண்டு என்றும் கூறிய ஸ்ரீல.பொ.ஜ.பெ. கட்சி இப்­போது இடைக்­கால அர­சாங்­கத்­துக்கு இறங்கி வந்­துள்­ளது. இவர்­களின் இந்த அழைப்பைக் கேட்கும் போது வெட்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது எனவும் ஐ.தே.க. பொதுச் செய­லாளர் கிண்டல் செய்­தி­ருந்தார்.

இதே­வேளை, பிர­தமர் மஹிந்த அர­சாங்­கத்­தி­லுள்ள தரப்­பினர் பல்­வேறு முரண்­பா­டான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­வதும் ஒரு பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் பிர­தமர் செய­ல­கத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் முரண்­பா­டான கருத்­துக்­களை தெரி­வித்த அர­சாங்க தரப்பு எம்.பி.க்கள் ஒருவர் மற்­ற­வ­ரினால் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளனர்.  இதில், எஸ்.பி. திஸா­நா­யக்­கவும் விட்டு வைக்­கப்­ப­ட­வில்லை.

அரச பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு அடுத்த வரு­டத்­துக்­கான இல­வச சீருடை வழங்­கு­வது தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பிரே­ர­ணையை இது­வ­ரையில் கல்­வி­ய­மைச்­சுக்கு கிடைக்­க­வில்­லை­யெ­னவும், இதனால், எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யா­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சீருடை விநி­யோ­கிப்­ப­தற்­கான விலை­மனுக் கோரல் நடை­பெற்­றதன் பின்னர் பாட­சாலை மாண­வர்­களின் கைக்கு சீருடைத் துணி போய்ச் சேர்­வ­தற்கு 3 மாத கால அவ­காசம் தேவைப்­படும் எனவும், தற்­பொ­ழு­துள்ள அர­சியல் சூழ்­நி­லையில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான இல­வச சீருடைத் துணி போய்ச் சேர்­வ­தற்கு அடுத்த வருடம் மார்ச் மாதத்­தையும் தாண்டி விடும் எனவும் அமைச்சின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் கூறி­யுள்ளார்.

அமைச்­ச­ரவை அனு­மதி கிடைக்கப் பெற்­றதன் பின்னர் மதிப்­பீட்டுக் குழு­வொன்று அமைக்­கப்­பட வேண்டும். அதன் பின்­னரே விலை­மனுக் கோரல் இடம்­பெறும். விலை மனுக் கோரல் இடம்­பெற்று விலை தீர்­மா­னிக்க 21 நாட்கள் கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும் எனவும் அவ்­வ­தி­காரி குறிப்­பிட்­டுள்ளார்.

அது­மட்­டு­மல்­லாமல், அரச ஊழியர்­க­ளுக்­கான சம்­பளப் பிரச்­சி­னையும் எதிர்­வரும் நாட்­களில் புது­வ­டிவம் எடுக்கப் போகின்­றது. வரவு – செலவுத் திட்டம் முன்­வைக்­கப்­பட்­டா­லேயே அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் வழங்க முடி­யு­மென நம்­பத்­த­குந்த தக­வல்கள் வெளி­யா­கிய வண்ணம் உள்­ளன.

டொலரின் விலை­யேற்­றத்தைத் தொடர்ந்து அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் பட்­டி­யலில் உள்­ள­டங்­காத அவ­சியத் தேவை­யுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

போலி நியாயங்களைக் கூறிக்கொண்டு தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துச் செல்லும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர். தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வரும் இக்கால மக்களை கடந்த காலங்களைப் போன்று பொய் கூறியும், விலை கொடுத்தும் ஏமாற்றி விடலாம் என நினைப்பது முட்டாள்தனமாகும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அரசியல் நிலைமைகளை நாட்டு மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டே இருக்கின்றார்கள். நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எமது அரசியல் அதிகாரம்தான் முக்கியம் என்று செயற்படும் போக்கை, மக்கள் வெறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மையாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.