மினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

0 704

மினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை பிர­தே­சத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

இது பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது,

கொழும்பு அப்­பிள்­வத்­தையை சேர்ந்த பெண் ஒருவர் கல்­லொ­ழு­வையில் வசிக்கும் தனது மக­ளது வீட்­டுக்கு வருகை தந்­துள்ளார். பின்னர் திங்கட் கிழமை காலை அங்­கி­ருந்து கொழும்பு செல்­வ­தற்­காக மினு­வாங்­கொடை நக­ரத்தை நோக்கி நடந்து வந்­துள்ளார். இதன்­போது அவரை நெருங்கி வந்த முச்­சக்­கர வண்­டியில் இருந்த இருவர் அவரை வழிமறித்து, அவ­ரது முந்­தா­னையைப் பிடித்து இழுத்து அவ­ரது கழுத்தில் கட்­டி­விட்டு முச்­சக்­கர வண்­டியைச் செலுத்தி அப் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்­றுள்­ளனர்.

தனால் உடல் முழு­வதும் காயங்­க­ளுக்­குள்­ளான அப் பெண் கூக்­கு­ர­லிட்­ட­துடன் ஒரு­வாறு முந்­தா­னை­யி­லி­ருந்து விடு­பட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அவ்­வி­டத்­துக்கு வந்த மற்­றொரு முச்­சக்­கர வண்­டியின் உத­வி­யுடன் அவர் மீண்டும் தனது மகளின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

குறித்த பெண்­மணி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றுள்­ள­துடன் மினு­வாங்­கொடை பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் சி.சி.ரி.வி. பதி­வு­களின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை முன்னெடுத்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.