கஷோக்ஜியின் கொலை தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டுவரும் விசாரணையாளர்களைச் சந்திப்பதற்கு சவூதி அரேபியாவின் சட்டமா அதிபர் துருக்கிக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் உயர் மட்ட வழக்கறிஞரான சஊத் அல்-மொஜெப் துருக்கிய விசாரணையாளர்களுடன் இறுதியாக பெறப்பட்டுள்ள பெறுபேறுகள் தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு முன்னதாக ஆதாரங்களை மீளாய்வு செய்வதற்கு சீ.ஐ.ஏ.யின் பணிப்பாளர் ஜினா ஹஸ்பெல் துருக்கிக்கு விஜயம் செய்து சில நாட்களின் பின்னர் இடம்பெறவுள்ள இந்த விஜயம் தொடர்பில் சவூதி அரேபியா அறிவித்தல்கள் எதனையும் வெளியிடவில்லை.
ஒக்டோபர் 02 ஆந் திகதி இடம்பெற்ற இக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 18 சவூதி நாட்டு சந்தேக நபர்கள் சவூதியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை நாடுகடத்துமாறு துருக்கி கோரிவருகின்றது.
விசாரணைகள் முடிவுற்றதும் சூத்திரதாரிகளுக்கு சவூதி அரேபியா தண்டனை வழங்கும் எனத் தெரிவித்து இந்தக் கோரிக்கையினை சவூதி வெளிநாட்டமைச்சர் கடந்த சனிக்கிழமை நிராகரித்துள்ளார்.
வொஷிங்டன் போஸ்டின் பத்தி எழுத்தாளரும் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை கடுமையாக விமர்சித்துவந்தவருமான துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் நுழைந்ததன் பின்னர் காணாமல் போனமை தொடர்பில் சவூதி அரேபியா முரண்பட்ட கருத்துக்க