தெரிவுக்குழு முன்பு நாளை ஆஜராக ரிஷாதுக்கு அழைப்பு

0 557

பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில்  நாளை சாட்­சி­ய­ம­ளிக்க முன்னாள் அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான  ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட ஒரு­சிலர் கைது செய்­யப்­பட்ட நிலையில் இரா­ணுவத் தள­ப­திக்கு தொலை­பே­சியில் அழைப்­பு­வி­டுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்­றச்­சட்டு உள்­ளிட்ட அவர் விசா­ர­ணை­களை குழப்­பு­கின்றார் என எதிர்த்­த­ரப்பு குற்றம் சுமத்­தி­வந்த நிலை­யிலும் ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட நபர்­களில் ஒரு­வ­ருடன் வியா­பார தொடர்­பு­களை வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் அவர்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவ­ரையும் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் அழைக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நாளை புதன்­கி­ழமை பிற்­பகல் 3 மணிக்கு பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு கூட­வுள்­ளது. இதன்­போது முதல் சாட்­சி­ய­மாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வர­வுள்ளார். அதேபோல் மேலும் இரு அரச அதி­கா­ரி­களும் வர­வ­ழைக்­கப்­ப­ட­வுள்­ளதாக தெரி­வுக்­குழு தெரி­வித்­துள்­ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு கூடி தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் இது­வரை பாது­காப்பு அதி­கா­ரிகள், புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள், முன்னாள் மற்றும் தற்­போ­தைய பாது­காப்பு செய­லாளர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா உள்­ளிட்ட இஸ்­லா­மிய அமைப்­புகள் சில­வற்றின் உறுப்­பி­னர்கள்  உள்­ளிட்ட பத்­திற்கும் அதி­க­மா­ன­வர்­களின் வாக்­கு­மூ­லங்­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

அடுத்­து­வரும் விசா­ர­ணை­களில் அர­சியல் தரப்­பினர் மற்றும் தேவைப்­படும் பட்­சத்தில் மீண்டும் இஸ்­லா­மிய மத அமைப்­பு­களை வர­வ­ழைக்கத் தீர்­மானம் எடுக்­கப்­படும் எனவும் தெரி­விக்­குழு கூறுகின்றது. எனினும், இந்த தெரிவுக்குழு முன்னிலையில் தம்மை அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென பொதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.