தற்கொலைதாரி சஹ்ரானின் சகாக்கள் அனைவரும் கைது

பிரதமர் ரணில் தெரிவிப்பு

0 807

இலங்­கையில் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் நடத்­திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகாக்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

காலி பகு­தியில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார்.

பொலிஸார் மற்றும் புல­னாய்­வுத்­துறை ஆகி­யோரின் அறிக்­கை­களின் பிர­காரம், மொஹமத் சஹ்­ரானின் சகாக்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன், அவர்­களில் பலர் தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஓர் உறுப்­பி­னர்­கூட, வெளியில் இல்­லை­யெனத் தான் உறு­தி­படக் கூறு­வ­தாக பிர­தமர் இதன்­போது குறிப்­பிட்டார்.

காத்­தான்­கு­டியில் சஹ்­ரானின் நெருங்­கிய நண்­பர்­கள்­கூட கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாகக் கூறிய அவர், சஹ்­ரா­னுடன் தேநீர் அருந்­தி­ய­வர்­களை கூட விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். இந்­நி­லையில், இலங்கையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது நம் பிக்கை வெளியிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.