தரணியின் தரளத்துக்கு அகவை 79

0 945

ஜாமிஆ நளீ­மி­யாவின் பணிப்­பாளர் கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்­க­ளுக்கு எதிர்­வரும் ஜூன் 24 இல் 79 வயது பூர்த்­தி­யா­வ­தை­யொட்டி இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது

கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்­த­றையில் 1940, ஜூன் 24 அன்று பிறந்தார். சென் தோமஸ் கல்­லூ­ரியில் ஆரம்பக் கல்­வியைக் கற்ற இவர் பின்னர் தர்கா நகர் அல்-­ஹம்றா பாட­சா­லையில் இணைந்தார். அங்­குதான் Senior School Certificate (SSC) பரீட்­சைக்குத் தோற்­றினார். பின்னர் Higher School Certificate (HSC) கற்­ப­தற்­காக கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியில் இணைந்து கொண்டார்.

அங்கு சிறந்த கல்வி அடைவை வெ ளிப்­ப­டுத்­திய அவர், 1960 இல் இலங்கை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அனு­மதி பெற்றார். பின்னர் பிரித்­தா­னி­யாவின் எடின்­பரோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது கலா­நிதிப் பட்­டத்தை (Ph.D) நிறைவு செய்தார். தனது கல்­வித்­துறை அடை­வு­க­ளுக்கு தனது ஆசி­ரி­யர்­களே காரணம் என கலா­நிதி சுக்ரி அடிக்­கடி நினை­வு­கூர்வார்.

தனக்கு கற்­பித்த ஹரீஸ் ஆசி­ரி­யரின் சிறப்­பம்சம் மாண­வர்­க­ளது திற­மை­களைத் தூண்­டி­வி­டு­வது.நான் அல்­லாஹ்வின் உத­வி­யினால் ஓர் பேச்­சா­ள­ராக வரு­வ­தற்கு இவரே காரணம் என்று கூறு­கின்றார்.

ஸாஹி­ராவில் முஹம்மத் சமீம்,எம்.எம்.மஹ்ரூப், பேரா­சி­ரியர் சிவத்­தம்பி ஆகியோர் கலா­நிதி சுக்­ரிக்கு கற்­பித்த முக்­கிய ஆசி­ரி­யர்­க­ளாவர்.
பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அறபு மொழியை சிறப்­பாக கற்றுக் கொடுத்து தனக்கு எப்­போதும் ஆத்­மார்த்த ரீதி­யாக வழி­காட்­டிய பேரா­சி­ரியர் இமாம் அவர்­களை எப்­போதும் நன்­றி­யு­ணர்­வுடன் நினைவு படுத்­துவார்.
பின்னர், தனது வாழ்வில் முக்­கிய தீர்­மானம் எடுப்­ப­தாயின் ஏ.எம்.ஏ.அஸீ­ஸிடம் கலந்­தா­லோ­சிப்­ப­தாகக் கூறுவார்.

அதேபோல் கலா­நிதி சுக்ரி ஆய்­வுக்­காக பேரா­சி­ரி­ய­ராக நிய­மிக்­கப்­பட்ட மொன்ட் கொமரி வொட் பற்­றியும் சிலா­கித்துப் பேசுவார்.

கலா­நிதி சுக்ரியின் விஷேட சிறப்­பம்சம் என்­ன­வெனில், ஸலபுஸ் ஸாலி­ஹீன்­களை, அறி­ஞர்­களை மதிக்க வேண்டும் என்ற உய­ரிய பண்­பாடு கொண்­டவர். இதனை ஊட்­டி­யவர் பேரா­சி­ரியர் இமாம் எனக் குறிப்­பிடும் இவர், அதற்­கான அழ­கிய ஒரு சம்­ப­வத்­தையும் கூறு­கிறார்.

” ஒரு­முறை பேரா­சி­ரியர் இமாம் அவர்கள், திடீ­ரென வந்து வாசி­க­சா­லையின் மூன்­றா­வது மாடிக்கு என்னை அழைத்துச் சென்று, தூசு­ப­டிந்த ஒரு நூலை எடுக்கச் சொல்லி அதனை எனது கைக்­குட்­டையால் துடைக்கச் சொல்லி கண்­ணி­யத்­துடன் கையில் எடுக்கச் சொல்­லி­விட்டு ‘நான் உங்­க­ளிடம் ஒரு கேள்வி கேட்­கிறேன்.’ என்றார்.

இது என்ன என்று கேட்டார்? பின்னர் அவரே சொன்னார்.இது பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூன்­றா­வது மாடி. இங்கு மின்­வி­சிறி சுழன்று கொண்­டி­ருக்­கி­றது. நீங்கள் வெளியே பாருங்கள்.நல்ல சூழல், அழ­கிய காட்­சிகள், உங்­க­ளிடம் அழ­கிய பேனை உள்­ளது. அழ­கிய தாள் உள்­ளது. இது­வெல்லாம் அல்­பி­ரூனி இந்த நூலை எழு­து­கின்ற வேளை அவ­ரிடம் இருந்­த­னவா?

நீங்கள் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்­றாண்­டுக்குச் செல்­லுங்கள். மத்­திய ஆசி­யாவைப் பாருங்கள். மாரி காலத்தில் கடும் குளிர், கோடை காலத்தில் கடும் வெப்பம். எழு­து­வ­தற்கு கட­தாசி இருக்­க­வில்லை. தொட்டுத் தொட்டு எழுதும் கலம் எனும் உப­க­ர­ணம்தான் இருந்­தது. இந்­நி­லை­யில்தான் அவர்கள் தமது பங்­க­ளிப்பை செய்­தி­ருக்­கி­றார்கள். அத­னைத்தான் நாம் இன்று பார்க்­கிறோம்.எனவே நீங்கள் எல்லா கண்­ணி­ய­மிக்க இமாம்­க­ளையும் மதிக்க வேண்டும்.அவர்­க­ளுக்கு உரிய அந்­தஸ்தைக் கொடுக்க வேண்டும்’ என்றார். நான் மெய்­சி­லிர்த்துப் போனேன்.

கலா­நிதி சுக்ரி இது­வரை பல நூல்­களை எழுதி வெளியிட்­டுள்ளார்.

1. காலத்தின் அறை­கூ­வலும் முஸ்­லிம்கள் பணியும், 2. தஃவாவும் நவ­யு­கத்தின் சவாலும், 3. நளீம் ஹாஜியார் வாழ்வும்,பணியும், 4. ஹதீஸ் வர­லாறும் முக்­கி­யத்­து­வமும், 5. பேர­றிஞர் இமாம் கஸ்­ஸாலி, 6. இஸ்­லா­மியக் கல்வி (ஆங்­கிலம்), 7. இலங்கை முஸ்­லிம்கள் (ஆங்­கிலம்), 8. ஹதீஸும் சுன்­னாவும், 9. இஸ்­லாமும் மனித உரி­மை­களும், 10. இஸ்­லா­மியப் பண்­பாட்டு மத்­திய நிலை­யங்கள், 11. இலங்கை முஸ்­லிம்­களின் தொன்­மைக்­கான வர­லாற்றுப் பாதை, 12. மாலிக் பின் நபி சிந்­த­னை­களும், கருத்­துக்­களும், 13. இஸ்­லா­மிய வாழ்­வியல் கோட்­பா­டுகள், 14. மதமும் அறி­வி­யலும், 15. அல்­குர்­ஆனும் அதன் வாழ்­வி­யலும்.
நளீம் ஹாஜி­யா­ருடன் நெருங்­கிய உறவு கொண்டு அவரால் உரு­வாக்­கப்­பட்ட ஜாமிஆ நளீ­மிய்­யா­வுக்கு இன்று வரை கௌரவ பணிப்­பா­ள­ராக இருந்து மாபெரும் அறிவு, ஆன்­மீக பணி செய்­து­கொண்டு வரு­கிறார்.

ஒரு முறை நளீம் ஹாஜி­யா­ரிடம், ஸாஹி­ரா­வுக்கு சிறிது காலம் கலா­நிதி சுக்­ரியை விடு­வி­யுங்கள் என அதன் நிர்­வா­கிகள் கேட்­ட­போது, கலா­நிதி சுக்­ரியின் நிறைக்கு தங்­கத்தை தரு­கிறேன். ஆனால் கலா­நிதி சுக்­ரியை ஸாஹி­ரா­வுக்குத் தர­மாட்டேன் என நளீம் ஹாஜியார் மறுத்து விட்டார். அல்­ஹம்து லில்லாஹ். கலா­நிதி சுக்­ரியின் ஆளு­மையின் வெளிப்­பாட்­டுக்கு இதை­விட வேறென்ன சான்று வேண்டும்.

கலா­நிதி சுக்­ரியில் நான் கண்ட ஒரு விஷேட அம்சம், ஒரு குறிப்­பிட்ட சிந்­தனை வட்­டத்தைச் சேர்ந்த அறி­ஞர்­களின் சிந்­த­னை­களை மட்டும் உள்­வாங்கி அந்த பார்­வை­யோடு மட்டும் நின்­று­வி­டாமல் பல­த­ரப்­பட்ட சிந்­தனை முகாம்­க­ளி­லுள்ள நல்ல பல சிந்­த­னை­க­ளையும் உள்­வாங்கி,பகுப்­பாய்வு செய்து வர­வேற்­ப­தாகும்.

கலா­நிதி சுக்ரி அவர்­களின் கல்விப் பணி தொட­ரவும் அவ­ரது தேகா­ரோக்­கி­யத்­துக்­கா­கவும் பிரார்த்திப்போமாக.

நௌபாஸ் ஜலால்தீன்
மருதமுனை

Leave A Reply

Your email address will not be published.